For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க நாக்கில் இந்த மாதிரி அறிகுறிகள் இருந்தால் அது இந்த குறைபாட்டோட அறிகுறியாம்... ஜாக்கிரதை...!

வைட்டமின் பி12 குறைபாட்டின் வாய்வழி அறிகுறிகளில் வீக்கம், நாக்கில் நிறமாற்றம் ஏற்படுவது, அத்துடன் எரியும் உணர்வுகள் மற்றும் வாய் முழுவதும் புண்கள் ஆகியவையும் அடங்கும்.

|

வைட்டமின் பி 12 என்பது உடலில் இயற்கையாக உற்பத்தி செய்யப்படாத ஒரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும். ஆனால், அது நாம் உண்ணும் உணவுகளிலிருந்து பெறப்பட வேண்டும் மற்றும் சில சமயங்களில் கூடுதலாக பெற வேண்டும். வைட்டமின் பி 12 இன் முதன்மைப் பங்கு சிவப்பு இரத்த அணுக்கள் மற்றும் டிஎன்ஏவை உருவாக்குவதாகும். மேலும், இது மூளை மற்றும் நரம்பு செல்களை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு ஊட்டச்சத்து அவசியம் என்பதால், இந்த அத்தியாவசிய வைட்டமின் குறைபாடு வாய்வழி ஆரோக்கியம் உட்பட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

How low levels of vitamin B12 can affect different parts of your body in tamil

வைட்டமின் பி 12 குறைபாடு பற்றியும் அவை உங்கள் உடலில் என்னென்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பற்றியும் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாய் ஆரோக்கியத்திற்கும் வைட்டமின் பி12க்கும் உள்ள தொடர்பு

வாய் ஆரோக்கியத்திற்கும் வைட்டமின் பி12க்கும் உள்ள தொடர்பு

வைட்டமின் பி12 குறைபாடு வாய் மற்றும் நாக்கில் பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்த ஊட்டச்சத்தின் அளவு குறைந்துள்ளவர்கள் பல்வேறு வாய்வழி வெளிப்பாடுகளை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைட்டமின் பி-12 குறைபாடு இரத்த சிவப்பணு உற்பத்தியைக் குறைப்பதால் இது நிகழ்கிறது. இதன் விளைவாக ஆக்ஸிஜன் நாக்கை அடைகிறது.

புண் மற்றும் சிவப்பு நாக்கு (குளோசிடிஸ்)

புண் மற்றும் சிவப்பு நாக்கு (குளோசிடிஸ்)

குளோசிடிஸ் என்பது நாக்கின் வீக்கத்தைக் குறிக்கிறது. வைட்டமின் பி12 குறைபாடு நாக்கில் வீக்கம், சிவப்பு நாக்கு மற்றும் புண்ணை ஏற்படுத்துகிறது. மேலும், இது உங்கள் நாக்கில் (பாப்பிலா) சிறிய புடைப்புகளையும் ஏற்படுத்தும். அது தேய்ந்து போகலாம். கடுமையான நாக்கு வீக்கம் மற்றும் நீங்கள் சாப்பிடும் அல்லது பேசும் விதத்தை மாற்றக்கூடிய வலியை ஏற்படுத்தும்.

நாக்கில் புண் ஏற்படுவது

நாக்கில் புண் ஏற்படுவது

வாய் அல்லது நாக்கு புண்கள் வைட்டமின் பி12 குறைபாட்டினஅறிகுறியாக இருக்கலாம். பி12 குறைபாடு உள்ளவர்கள் அசாதாரணமாக பெரிய இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யலாம். அவை சரியாக செயல்படாது. அது இரத்த சோகையை ஏற்படுத்தும். எனவே இந்த குறைபாடு வாய் புண்கள் உட்பட பல அறிகுறிகளை ஏற்படுத்தும். உங்கள் ஈறுகளில் அல்லது நாக்கில் இந்த புண்கள் ஏற்படலாம். பொதுவாக புண்கள் தானாகவே மறைந்துவிடும். ஆனால், வினிகர், சிட்ரஸ் மற்றும் மிளகாய் தூள் போன்ற சூடான மசாலாப் பொருட்கள் போன்ற எரிச்சலூட்டும் அல்லது வலியை ஏற்படுத்தும் பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

நாக்கில் நிறமாற்றம் மற்றும் எரியும் உணர்வு

நாக்கில் நிறமாற்றம் மற்றும் எரியும் உணர்வு

வைட்டமின் பி12 குறைபாட்டின் வாய்வழி அறிகுறிகளில் வீக்கம், நாக்கில் நிறமாற்றம் ஏற்படுவது, அத்துடன் எரியும் உணர்வுகள் மற்றும் வாய் முழுவதும் புண்கள் ஆகியவையும் அடங்கும். மேலும், ஆட்டோ இம்யூன் நிலை உள்ளவர்கள் வாய்வழி கேண்டிடியாஸிஸ் அல்லது வாய்வழி த்ரஷ் போன்ற இரண்டாம் நிலை நோய்களையும் உருவாக்கலாம். இந்த அறிகுறிகள் மிகவும் அசௌகரியமாக உங்களை உணர வைக்கும்.

மற்ற அறிகுறிகள்

மற்ற அறிகுறிகள்

வைட்டமின் பி12 குறைபாட்டின் மற்ற அறிகுறிகள் கவனிக்கப்பட வேண்டும். யுனைடெட் கிங்டமின் தேசிய சுகாதார சேவைகள் (என்எச்எஸ்) கூறும், பி12 குறைபாட்டின் வேறு சில அறிகுறிகளை இங்கே காணலாம்.

  • சோர்வு அல்லது அதிக சோர்வு
  • மூச்சுத் திணறல்
  • தலைவலி மற்றும் தலைச்சுற்றல்
  • வெளிறிய தோல்
  • இதயத் துடிப்பு
  • இரைப்பை குடல் பிரச்சினைகள்
  • கவனம் செலுத்துவதில் சிரமம்
  • போதுமான அளவு வைட்டமின் பி12 ஐ எவ்வாறு பெறுவது?

    போதுமான அளவு வைட்டமின் பி12 ஐ எவ்வாறு பெறுவது?

    வைட்டமின் பி12 சத்தை நாம் சாப்பிடும் உணவுகளில் இருந்து இயற்கையாகவே நாம் பெறலாம். மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, கோழி, ஆட்டிறைச்சி, மீன் (டுனா மற்றும் ஹாடாக்), மட்டி மற்றும் நண்டு போன்ற கடல் உணவுகள், முட்டை, பால், பாலாடைக்கட்டி, தயிர் மற்றும் பால் பொருட்கள் போன்ற பி12 நிறைந்த உணவுகள் மூலம் வைட்டமின் பி12ஐ நீங்கள் பெறலாம். செறிவூட்டப்பட்ட தானியங்களும் வைட்டமின் பி12 இன் நல்ல மூலமாகும். மேலும், உணவில் இருந்து போதுமான அளவு வைட்டமின்களை பெற முடியாதவர்கள், மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரால் பரிந்துரைக்கப்பட்ட கூடுதல் உணவுகளை நாடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How low levels of vitamin B12 can affect different parts of your body in tamil

How low levels of vitamin B12 can affect different parts of your body in tamil.
Story first published: Tuesday, August 16, 2022, 12:59 [IST]
Desktop Bottom Promotion