For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குண்டாக இருப்பவர்களை ஒல்லியாக மாற்ற உதவும் ஐஸ் தெரபி - எப்படி பயன்படுத்தணும் தெரியுமா?

எடை இழப்பு முயற்சியில் ஐஸ். ஆம், எடை இழப்பு குறிக்கோளை அடைவதில் சிறந்த உதவியைத் தரும் தன்மை ஐஸுக்கு உண்டு. அதிகரித்த உடல் கொழுப்பை உருக்க ஐஸ் உதவுகிறது.

|

உடல் பருமன் என்பது உலகளாவிய பாதிப்பாக இருந்து வருகிறது. இன்றைய நவீன உலகில் அதிக உடல் உழைப்பு இல்லாமை, உட்கார்ந்தபடியே வேலை செய்வது போன்ற வாழ்வியல் முறையின் மாற்றம் காரணமாக பலரும் அதிக உடல் எடையைப் பெறுகின்றனர். உடல் எடை அதிகரிப்பதால் பல்வேறு ஆரோக்கிய கோளாறுகள் ஏற்படுகின்றன. எனவே உடல் எடை அதிகரிக்கும் போது மக்கள் மறுபடி சரியான உடல் எடையைக் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை எடுக்கின்றனர். ஜிம், ஒர்கவுட், டயட் என்று பல்வேறு வழிகளில் தங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கின்றனர்.

How Ice Therapy Can Make You Fit From Fat

அதில் டயட் குறித்து குறிப்பிடும் போது, எடை இழப்பை ஊக்குவிக்கும் பல டயட் தற்போது பின்பற்றப்பட்டு வருகின்றன. அவற்றுள் சில வகை டயட் உண்மையிலேயே நல்ல விளைவை தரக் கூடியதாக இருந்தாலும் சில போலி டயட் உடலுக்கு எந்த ஒரு நன்மையையும் செய்வதில்லை. அனைவரும் நினைப்பது போல் எடையை குறைப்பது என்பது எளிதான காரியம் அல்ல. குறிப்பாக விடாப்பிடியான கொழுப்புகள் உடலில் பல்வேறு பகுதிகளில் படிந்திருக்கும் போது அவற்றை நீக்குவது என்பது சற்று கடினமான செயலாகும். எந்த அளவிற்கு எளிதாக உடல் எடை கூடுகிறதோ, அந்த அளவிற்கு கடினமாக இருக்கும் அதனைக் குறைக்கும் நடவடிக்கை என்பது எடை குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடும் பலருக்கும் தெரியும்.

MOST READ: சீரக நீர் Vs மல்லி நீர் - இவற்றில் உடல் எடையைக் குறைக்க சிறந்தது எது?

நாம் இன்றைய பதிவில் ஒரு சுவாரஸ்யமான செய்தியைப் பற்றி காணவிருக்கிறோம். எடை இழப்பு முயற்சியில் ஐஸ். ஆம், எடை இழப்பு குறிக்கோளை அடைவதில் சிறந்த உதவியைத் தரும் தன்மை ஐஸுக்கு உண்டு. அதிகரித்த உடல் கொழுப்பை உருக்க ஐஸ் உதவுகிறது. இதனைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த பதிவைத் தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஐஸ் தெரபி என்றால் என்ன? எடை இழப்பில் இது எவ்வாறு உதவுகிறது?

ஐஸ் தெரபி என்றால் என்ன? எடை இழப்பில் இது எவ்வாறு உதவுகிறது?

எந்த ஒரு கடினமான டயட் கட்டுபாடுகளும் இல்லாமல், கடுமையான உடற்பயிற்சியும் இல்லாமல், வேகமாக கொழுப்பைக் குறைக்கும் மருந்துகள் இல்லாமல் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகிறது ஐஸ் தெரபி. இந்த சிகிச்சையில், ஐஸ் கொண்டு குறிப்பிட்ட பகுதியை தேய்ப்பது மூலம் அந்த பகுதியில் சேமிக்கப்பட்டுள்ள அதிக கொழுப்பு குறைகிறது. தீக்காயம், இரத்தப்போக்கு, காயம் போன்ற பாதிப்புகளுக்கு ஐஸ் பல காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இன்றைய நாட்களில் பல நாடுகளில் எடை இழப்பு முயற்சியில் ஐஸ் தெரபி பரவலாக புகழ் பெற்று வருகிறது. ஆரோக்கியமான முறையில் எடை இழக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், ஐஸ் தெரபியை நீங்கள் முயற்சிக்கலாம். இது தவிர , கோல்டு ஹாட் வெட் பேண்டேஜ் முறையிலும் எடை இழப்பை முயற்சிக்கலாம்.

கொழுப்பைக் குறைப்பதில் ஐஸ் தெரபி எவ்வாறு உதவுகிறது?

கொழுப்பைக் குறைப்பதில் ஐஸ் தெரபி எவ்வாறு உதவுகிறது?

உடலின் பல பகுதிகளில் படிந்துள்ள கொழுப்பைக் குறைக்க, ஐஸ் கொண்டு அந்த பகுதியில் தேய்ப்பதால் அந்த பகுதியில் படிந்துள்ள கொழுப்பு குறைவதாக பல்வேறு ஆராய்ச்சிகள் பரிந்துரைக்கின்றன. உண்மையில் சரும திசுக்களை ஐஸ் கட்டி சுருக்குகிறது, இதன் காரணமாக கொழுப்பு மெதுவாக குறைகிறது. இதனால் உங்கள் உடல் கட்டுக்கோப்பாக மாறுகிறது. பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு உண்டாகும் ஸ்ட்ரெட்ச் மார்க் மறைவதற்கு ஐஸ் கட்டியை அந்த பகுதியில் தடவச் சொல்வதை நாம் அறிந்திருக்கலாம். ஐஸ் தெரபி பயன்படுத்துவதால் ஸ்ட்ரெட்ச் மார்க் தென்படும் பகுதியில் உள்ள திசுக்கள் சுருங்கி அந்த அடையாளம் மறைகிறது என்பது நம்பப்படுகிறது.

ஐஸ் தெரபி பயன்படுத்துவதால் என்ன நன்மை விளைகிறது?

ஐஸ் தெரபி பயன்படுத்துவதால் என்ன நன்மை விளைகிறது?

அதிக கொழுப்பு படிவதால் தொங்கு சதை ஏற்படக்கூடிய இடங்களான கைகள், தொடை பகுதி, வயிறு போன்ற இடங்களில் ஐஸ் தெரபி சிறந்த முறையில் வேலை செய்கிறது. தொடர்ந்து ஐஸ் தெரபி எடுத்துக் கொள்வதால் மெதுவாக அந்த பகுதியில் உள்ள சருமம் மீட்டெடுக்கப்படுகிறது. இது தவிர, சருமத்தில் படிந்திருக்கும் நச்சுகள் ஐஸ் தெரபி மூலம் வெளியேற்றப்படுகின்றன. இதன் காரணமாக தொடர்ந்து ஐஸ் தெரபி பின்பற்றிய சில நாட்களில் கொழுப்பு குறையத் தொடங்குகிறது. கீட்டோ டயட் போன்ற டயட் அபாயகரமானது என்பதால் அவற்றைப் பின்பற்றுவதைத் தவிர்ப்பது நல்லது.

சமச்சீர் உணவு மற்றும் உடற்பயிற்சி

சமச்சீர் உணவு மற்றும் உடற்பயிற்சி

இருப்பினும், ஐஸ் தெரபியை பின்பற்றுவதோடு மட்டுமில்லாமல் நீங்கள் உட்கொள்ளும் உணவு குறித்து கவனம் கொள்வதும் அவசியம். இது மட்டுமில்லாமல் தினசரி உங்கள் வழக்கத்தில் உடற்பயிற்சியை இணைத்துக் கொள்வதால் சிறந்த விளைவுகள் கிடைக்கும். உங்கள் உடலில் அதிக கொழுப்பு படிவத்தைத் தடுக்க, நீங்கள் உட்கொள்ளும் உணவு மற்றும் உடற்பயிற்சியில் சற்று கவனமாக இருப்பது நல்லது. தினமும் சுறுசுறுப்பாக 30-40 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது மற்றும் சமச்சீர் உணவை உட்கொள்வது போன்றவற்றின் மூலம் 2 வாரங்களில் 2-3 கிலோ எடையை உங்களால் குறைக்க முடியும்.

நினைவில் கொள்ள வேண்டியவை :

நினைவில் கொள்ள வேண்டியவை :

* ஐஸ் கட்டியை நேரடியாக உங்கள் சருமத்தில் தேய்க்கக் கூடாது. இதனை நீண்ட நேரம் செய்வதால் உங்கள் சருமம் எரிச்சலடையலாம்.

* ஐஸ் தெரபி செய்வதற்கு சரியான வழி, சில ஐஸ் கட்டிகளை ஒரு டவல் அல்லது துணியில் சுற்றி கட்டிக் கொண்டு, பின்பு அந்த துணியை உங்கள் உடலில் தேய்க்க வேண்டும்.

* இதற்கு மாற்றாக ஐஸ் பேக் பயன்படுத்தலாம்.

* உடலில் சதை தொங்கும் இடங்களில் இந்த முயற்சியை நீங்கள் பின்பற்றலாம்.

குறிப்பு

குறிப்பு

ஐஸ் தெரபி பல்வேறு பாதிப்புகளுக்கு நல்ல தீர்வைத் தந்துள்ளது, இருந்தாலும் எடை இழப்பு முயற்சியில் இது ஒரு புதிய நடவடிக்கையாகும். உங்களுக்கு ஏற்கனவே உடல்நிலையில் வேறு சில பாதிப்புகள் இருந்தால் ஐஸ் தெரபி எடுக்கும் முன்னர் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதனால் வேறு சில அபாயங்கள் தவிர்க்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How Ice Therapy Can Make You Fit From Fat

Want to know how ice therapy can make you fit from fat? Read on...
Desktop Bottom Promotion