For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகை கதற வைக்கும் கொரோனா மற்ற வைரஸ்களை விட ஏன் மிகவும் கொடியது தெரியுமா?

COVID-19 தொற்றுநோய்க்கு முன்னர், ஒரே இனத்தைச் சேர்ந்த வைரஸ்களில் இருந்து வேறு இரண்டு தொற்றுநோய்கள் உள்ளன. அவை தான் SARS மற்றும் MERS. ஆனால் COVID-19 வைரஸ் மற்ற இரண்டு வைரஸ்களை விட மிக வேகமாக பரவுகிறது

|

தற்போது COVID-19 என்னும் பெருந்தொற்று நோய் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்நோயால் உலகில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் இறைச்சி மார்கெட்டில் இருந்து 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ், நான்கு மாதத்திற்குள் உலகையே உலுக்கி பெருந்தொற்று நோயாக மாறிவிட்டது. இதுவரை இந்த வைரஸால் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் தோன்றினாலும், அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற பகுதிகளில் ஏராளமான மக்களை இந்த வைரஸ் தாக்கி, ஒவ்வொரு நாளும் கொத்து கொத்தாக உயிரைப் பறித்து வருகிறது.

How COVID-19 Is Different From SARS And MERS

ஆனால் உலகின் கவனத்தை ஈர்த்த முதல் வைரஸ் நோய் COVID-19 அல்ல. COVID-19 தொற்றுநோய்க்கு முன்னர், ஒரே இனத்தைச் சேர்ந்த வைரஸ்களில் இருந்து வேறு இரண்டு தொற்றுநோய்கள் உள்ளன. அவை தான் SARS மற்றும் MERS. ஆனால் COVID-19 வைரஸ் மற்ற இரண்டு வைரஸ்களை விட மிக வேகமாக பரவுகிறது. இப்போது இந்த மூன்று வைரஸ்கள் ஒன்றிற்கு ஒன்று எவ்வாறு வேறுபடுகின்றன, அவை எவ்வாறு பரவுகின்றன மற்றும் அவற்றின் அறிகுறிகள் என்ன என்பனவற்றைக் காண்போம்.

MOST READ: மே 29-ல் கொரோனா வைரஸ் முடிவுக்கு வரும் - இது நிஜம் தானா? உண்மை என்ன?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இறப்பு விகிதம்

இறப்பு விகிதம்

SARS மற்றும் MERS இரண்டுமே ஒப்பீட்டளவில் அதிக இறப்பு விகிதத்தைக் கொண்டிருந்தன. மேலும் இந்த நோய்களின் பரவல் சில பகுதிகளில் மட்டுமே உள்ளூர்மயமாக்கப்பட்டது. மறுபுறம், COVID-19 இல் 85 சதவீத நோயாளிகள் லேசான அல்லது மிதமான நோயால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இந்த நோயாளிகள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லக்கூடியவர்கள் என்பதால், இந்த நோயாளிகளுடன் தொடர்பு கொள்ளும் பலருக்கும் இந்நோய் பரவி, ஏராளமான அறிகுறியை வெளிக்காட்டுகின்றன.

MOST READ: கொரோனா வைரஸிற்கு முடிவு கட்ட ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவர்கள் கூறுவது என்ன தெரியுமா?

கொரோனா வைரஸ்களின் குடும்பம்

கொரோனா வைரஸ்களின் குடும்பம்

கொரோனா வைரஸ்களானது (CoV) வைரஸ்களின் பெரிய குடும்பம் ஆகும். இந்த பெரிய வைரஸ் குடும்பத்தில் இருந்து வெளிவந்த சமீபத்திய வைரஸ் தான் nCoV-2019. இது மிகவும் தீவிரமானது. இதன் தோற்றத்திற்கு முன்னரே, ஆறு வகையான கொரோனா வைரஸ்கள் இருந்தன. இந்த குடும்பத்தின் பிற கொடிய வைரஸ்கள் மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி (MERS-CoV) மற்றும் தீவிரமான கடுமையான சுவாச நோய்க்குறி (SARS-CoV) ஆகியவை. இப்போது ஒவ்வொன்றும் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதைக் காண்போம்.

SARS-CoV

SARS-CoV

தோற்றம்

SARS-CoV முதன்முதலில் நவம்பர் 2002 இல் தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் தோன்றியது. பின்னர் இது இரண்டு டஜன் நாடுகளுக்கு பரவியது. இதனால் கிட்டத்தட்ட 800 பேர் கொல்லப்பட்டனர்.

MOST READ: இந்த பழக்கத்தை உடனே கைவிடுங்க.. இல்ல கொரோனா உங்களே தேடி சீக்கிரம் வரும்...

பரவும் முறை

பரவும் முறை

ஆராய்ச்சியாளர்கள், SARS-CoV சிவெட் பூனைகளிலிருந்து மனிதர்களுக்கு பரவுவதைக் கண்டறிந்தனர். சிவெட் பூனைகள் வெளவால்களிலிருந்து பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கருதினர். இவை தான் கொரோனா வைரஸ்களின் கேரியர்கள்.

இந்த வைரஸ் பரவலானது மனிதர்களைத் தாக்கிய இரண்டாவது வாரத்தில் ஆரம்பமாகும். உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின் படி, 2004 ஆம் ஆண்டிலிருந்து உலகளவில் SARS வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை. அதுவும் நோய்த்தொற்று உள்ள ஒருவர் இருமும் போது மற்றும் தும்மும் போது அல்லது பேசும் போது, காற்றில் நுழையும் நீர்த்துளிகள் வழியாக SARS பரவுகிறது. முக்கியமாக SARS தொற்று உள்ள ஒருவருடன் நெருங்கியத் தொடர்பு கொள்வது மூலம் பரவுகிறது. அதோடு இந்த வைரஸ் கதவு, தொலைபேசி மற்றும் லிப்ட் பட்டன்கள் போன்ற அசுத்தமான பொருட்களின் வழியே இந்த வைரஸ் பரவுகிறது.

அறிகுறிகள்

அறிகுறிகள்

காய்ச்சல், சளி, தசை வலி, தலைவலி மற்றும் எப்போதாவது வயிற்றுப்போக்கு போன்ற ஃப்ளூ போன்ற அறிகுறிகளுடன் SARS பொதுவாக தொடங்குகிறது. சுமார் ஒரு வாரத்திற்குப் பிறகு, ஒரு நோயாளிக்கு 100.5 F (38 C) அல்லது அதற்கு மேற்பட்ட காய்ச்சல், வறட்டு இருமல், மூச்சுத் திணறல் ஏற்படலாம்.

MOST READ: மக்களே உஷார்! கொரோனாவின் அறிகுறி வெறும் காய்ச்சல், சளி மட்டுமல்ல... இதுவும் கொரோனாவோட அறிகுறி தானாம்...

MERS-CoV

MERS-CoV

தோற்றம்

இந்த வைரஸ் சுவாச தொற்று முதன்முதலில் 2012 இல் சவுதி அரேபியாவில் தான் கண்டறியப்பட்டது. இதன் பெரும்பாலான வழக்குகள் அரேபிய தீபகற்பத்தில் தான் நிகழ்ந்தன. சுமார் 27 நாடுகளில் MERS வழக்குகள் பதிவாகியுள்ளன. ஏப்ரல் 4, 2017 நிலவரப்படி, கிட்டத்தட்ட 2000 வழக்குகள் பதிவாகியுள்ளன. நோய் கண்டறியப்பட்டவர்களில் சுமார் 36% MERS மூலம் இறந்துள்ளனர்.

பரவும் முறை

பரவும் முறை

MERS ஒட்டகங்களில் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது என்று நம்பப்பட்டாலும், அது எப்படி என்பது தான் இன்று வரை தெளிவாக தெரியவில்லை. இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு அவ்வளவு எளிதாக பரவாது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கியத் தொடர்பு கொண்டால் பரவும். MERS-CoV நோய்த்தொற்றுகளின் பெரும்பாலான வழக்குகள் சுகாதார அமைப்புகளில் நிகழ்ந்தன.

MOST READ: கொரோனா பரவலில் உள்ள 4 ஸ்டேஜ்கள் என்ன? அதில் இந்தியா எந்த ஸ்டேஜில் உள்ளது?

அறிகுறிகள்

அறிகுறிகள்

உலக சுகாதார அமைப்பின் படி, வழக்கமான MERS அறிகுறிகளில் காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை அடங்கும். நிமோனியா பொதுவானது. ஆனால் எப்போதும் இல்லை. சில நோயாளிகள் தங்களுக்கு இரைப்பை குடல் அறிகுறிகள் இருந்ததாக தெரிவித்தனர்.

COVID-19

COVID-19

தோற்றம்

சீனாவின் வுஹான் மாகாணத்தில் உள்ள கடல் உணவு மார்கெட்டில் டிசம்பர் 2019 இல் உருவானது தான் நாவல் கொரோனா வைரஸ் (COVID-19). நான்கு மாதத்திற்குள், இது உலகம் முழுவதும் சுமார் 204 நாடுகள், பகுதிகள் அல்லது பிரதேசங்களுக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரஸ் இன்றைய நிலவரப்படி 50,000-க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்தது மற்றும் 10,00,000 அதிகமானோரை பாதித்துள்ளது.

MOST READ: கொரோனா வைரஸ் எந்த பொருளில் எவ்வளவு காலம் உயிருடன் இருக்கும்-ன்னு தெரியுமா?

பரவும் முறை

பரவும் முறை

மற்ற கொரோனா வைரஸ்களைப் போலவே, COVID-19 விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதாக நம்பப்படுகிறது. ஆனால் அதன் சரியான ஆதாரம் என்னவென்று ஆராய்ச்சியாளர்களுக்குத் தெரியாது. ஆனால் இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் இருமும் போது அல்லது தும்மும் போது சுவாசத் துளிகளால் பரவுகிறது.

அறிகுறிகள்

அறிகுறிகள்

கொரோனா வைரஸில் ஆரம்ப அறிகுறிகளில் காய்ச்சல், இருமல், மார்பு இறுக்கம் மற்றும் மூச்சுத்திணறல் போன்றவை அடங்கும். மிகவும் கடுமையான சந்தர்பங்களில், இது நிம்மோனியா, கடுமையான சுவாச நோய்க்குறி, சிறுநீரக செயலிழப்பு மற்றும் மரணத்தைக் கூட ஏற்படுத்தும். சமீபத்தில் நாக்கில் ருசி தெரியாமல் இருப்பது, வாசனை தெரியாமல் இருப்பது போன்ற அறிகுறிகளை அனுபவித்ததாக சில நோயாளிகள் கூறினர்.

கொரோனா வைரஸ் குறித்த ஆராய்ச்சிகள் இன்னும் நடந்தவாறு உள்ளது. ஒவ்வொரு நாளும் கொரோனா குறித்த புதிய தகவல்கள் வெளிவந்தவாறு உள்ளன. இதற்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்று பார்ப்போம்.

MOST READ: A வகை இரத்தப்பிரிவினரை அதிகம் குறி வைக்கும் கொரோனா வைரஸ்... O பிரிவினரை நெருங்காதாம்.. உண்மை என்ன?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How COVID-19 Is Different From SARS And MERS

COVID-19, SARS and MERS belong to the same species. But COVID-19 virus spreads a lot faster than the other two. Here we given how these three viruses are different from each other.
Desktop Bottom Promotion