For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காபி பிரியர்களுக்கான நல்ல செய்தி... தினமும் இத்தனை கப் காபி குடிப்பது உங்கள் இதயத்தை பாதுகாக்குமாம்...!

|

காபி என்பது உலகளவில் அதிகளவு மக்களால் நுகரப்படும் முக்கியமான பானமாக விளங்குகிறது. காபியை குடிப்பதையும் தாண்டி பலர் அதை அடிமையாக இருக்கிறார்கள். நீங்களும் அதில் ஒருவராக இருந்தால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. சமீபத்திய ஆய்வுகளின்படி, ஒவ்வொரு நாளும் 1-2 கப் காபி சாப்பிடுவது இதய செயலிழப்பு அபாயத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது.

எதுவாக இருந்தாலும் அளவிற்கு அதிகமாக குடிப்பது மோசமானது என்பதையும், அதிக அளவு காபி உண்மையில் உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்பதையும் இங்கே நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் காபி உங்கள் இதயத்தை எப்படி பாதுகாக்கிறது மற்றும் எத்தனை கப் காபி உங்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் என்பதையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அமெரிக்க ஆய்வு

அமெரிக்க ஆய்வு

சமீபத்தில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில் 1,000 அமெரிக்க வயதான ஆண்கள் கலந்து கொண்டனர். இதில் அவர்களுடன் மூன்று முக்கிய ஆய்வுகளை நடத்தியது மற்றும் அவர்களின் தரவுகளை பகுப்பாய்வு செய்தது. பங்கேற்பாளர்கள் 10 வருட காலத்திற்கு பின்பற்றப்பட்டனர். இந்த மூன்று ஆய்வுகளிலும், ஒரு நாளைக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கப் காஃபினேட் காபி குடிப்பது இதய செயலிழப்பு அபாயத்துடன் தொடர்புடையது என்று கண்டறியப்பட்டது.

ஆய்வு முடிவுகள்

ஆய்வு முடிவுகள்

முதல் ஆய்வான ஃப்ரேமிங்ஹாம் ஹார்ட் மற்றும் இருதய சுகாதார ஆய்வு முடிவுகளின் படி காபி குடிக்காதவர்களை ஒப்பிடும்போது, இதய செயலிழப்பு ஆபத்து ஒவ்வொரு நாளும் ஒரு கப் காபிக்கு 5% -12% குறைந்துள்ளது. இரண்டாவது ஆய்வில் ஒரு நாளைக்கு குறைந்தது 2 கப் காபி குடித்தவர்களில் இதய செயலிழப்பு ஆபத்து 30% குறைவாக இருந்தது.

காபி மற்றும் இதயம்

காபி மற்றும் இதயம்

காபியை விரும்புவோருக்கு, தினசரி அதை குடிப்பதில் எந்தத் தீங்கும் இல்லை. காஃபைன் நீக்கப்பட்ட காபிக்கு பதிலாக காஃபினேட் காபியை குடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஃப்ரேமிங்ஹாம் ஹார்ட் ஆய்விலும் காஃபைன் நீக்கப்பட்ட காபி இதய செயலிழப்புக்கான அதிக ஆபத்துடன் தொடர்புடையது என்று கண்டறிந்தது. இதில் முக்கியமானது என்னவெனில் ஒவ்வொரு நாளும் காபியை உட்கொள்வதில் எந்தத் தீங்கும் இல்லை, நீங்கள் அதைக் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் குடிக்கும் வரை.

இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் உடலில் இருந்து எடை குறைய தொடங்கிவிட்டது என்று அர்த்தமாம் தெரியுமா?

எவ்வளவு காபி சாப்பிடுவது பாதுகாப்பானது?

எவ்வளவு காபி சாப்பிடுவது பாதுகாப்பானது?

ஒரு நாளைக்கு 400 மில்லிகிராம் (மி.கி) காஃபைன் பெரியவர்களுக்கு பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது. இது தோராயமாக ஒவ்வொரு நாளும் நான்கு கப் காபியாகும். கர்ப்பிணி அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தினசரி 200 மி.கி.க்கு குறைவாக உட்கொள்ள வேண்டும். ஆனால் மருத்துவரின் பரிந்துரைக்குப் பிறகே குடிக்க வேண்டும். பாதுகாப்பாக இருக்க, நீங்கள் ஒவ்வொரு நாளும் 2-3 கப் காபி சாப்பிடலாம். நீங்கள் விரும்பினால், அதை ஒரு நாளைக்கு 4 கப் வரை நீட்டிக்க முடியும், ஆனால் இந்த அளவை தாண்டும்போது உங்கள் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

அதிகப்படியான காஃபின் காரணமாக என்ன நடக்கும்?

அதிகப்படியான காஃபின் காரணமாக என்ன நடக்கும்?

நான்கு கப் காபிக்கு மேலே செல்லும்போது அது உடலில் காஃபைன் அதிகமாக இருப்பதைக் குறிக்கிறது, இது தலைவலி, வேகமான இதய துடிப்பு, தூக்கமின்மை, பதட்டம், கவனம் செலுத்துவதில் சிரமம், அதிகப்படியான சிறுநீர் கழித்தல் மற்றும் தசை நடுக்கம் போன்றவற்றுக்கு வழிவகுக்கும்.

வயிறுக்கோளாறுகள்

வயிறுக்கோளாறுகள்

காஃபினில் உள்ள அமிலங்கள் அதிக அமிலத்தை உற்பத்தி செய்ய வயிற்றைத் தூண்டுகின்றன. காஃபின் இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸை ஊக்குவிப்பதாகத் தெரிகிறது. அதிகப்படியான காஃபின் குமட்டல், பிடிப்புகள், வயிற்றுப்போக்கு மற்றும் வீக்கம் போன்ற வயிற்று கோளாறுகளுக்கும் வழிவகுக்கும் என்று சான்றுகள் தெரிவிக்கின்றன.

டயட்டால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துகள் வருகிறது தெரியுமா? கொஞ்சம் யோசிச்சு டயட் பாலோ பண்ணுங்க...!

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினசரி அடிப்படையில் அவர்கள் உட்கொள்ளும் காஃபின் அளவு குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காஃபின் உங்கள் இரத்த அழுத்தத்தை ஒரு குறுகிய காலத்திற்கு அதிகரிக்கும் என்று அறியப்படுகிறது. இதனால் நீண்டகால பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்றாலும், ஒழுங்கற்ற இதய துடிப்புகளைக் கொண்டவர்களில் இது நிலைமையை மோசமாக்கும் என்று சிலர் நம்புகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How Coffee Protects the Heart?

Read to know how four cups of coffee protect the heart.
Story first published: Friday, February 12, 2021, 15:15 [IST]