உங்க முகத்தில் சுருக்கம் அதிகமா இருக்கா? வயதான சருமம் போல தோல் தொங்குதா? அப்ப வீட்டுல 'இத' ட்ரை பண்ணுங்க!

வயதாகும்போது நமது சருமம் தொய்வடையத் தொடங்குகிறது. ஆனால், சிலருக்கு இளம் வயதிலேயே சருமத்தில் தொய்வு ஏற்படலாம். இதற்கு வேறு பல காரணங்களும் இருக்கலாம். உங்கள் சருமத்தில் சுருக்கங்கள் இருக்கிறதா? இளம் வயதிலே வயதான சருமம் உங்களுக்கு வந்துவிட்டதா?

உங்களுக்கு வயதாகும்போது உங்கள் முகத்திலும் உடலிலும் தோல் தளர்ந்து சுருங்க ஆரம்பிக்கும். காலப்போக்கில் தோன்றும் சுருக்கங்கள், தொய்வு மற்றும் நிறமி பிரச்சினைகள் உங்களை கவலையடையச் செய்யலாம். இனி உங்கள் சரும தொய்வை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

Tips To Reduce Sagging Skin With Home Remedies In Tamil

ஏனென்றால் அந்த சருமத்தை இறுக்கமாக்குவதற்கும், உங்கள் இளமைப் பொலிவை மீண்டும் பெறுவதற்கும் சில அற்புதமான மற்றும் எளிதான வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அவை என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

சருமம் ஏன் தளர்வாக மாறுகிறது?
எலாஸ்டின் என்ற புரதம் சருமத்திற்கு நெகிழ்ச்சித்தன்மையை வழங்குகிறது, இது உங்கள் சரும தோற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. வயது ஆக ஆக, தோலில் உள்ள எலாஸ்டின் அளவு குறைந்து, மென்மை மற்றும் நெகிழ்வுத்தன்மையை இழக்கிறது. இதனால் சருமம் தளர்ந்து, வயதான தோற்றத்தை பெறுகிறோம்.

மேலும், கொலாஜனின் குறைப்பு, தோலடி கொழுப்பு இழப்பு மற்றும் உடற்கூறியல் மாற்றங்கள் ஆகியவை தோலின் அடியில் உள்ள கொழுப்புப் பட்டைகள் சுருங்குவதற்கு பங்களிக்கின்றன. ஈர்ப்பு விசையானது கொழுப்பை மாற்றுவதற்கும் காரணமாகிறது. இது மேலோட்டமான தோலை இடமாற்றம் செய்து, தளர்வான மற்றும் சுருக்கமான தோற்றத்தை அளிக்கிறது. சருமத்தை இறுக்கமாக்குவதற்கான சில வீட்டு வைத்தியங்கள் பற்றி இங்கே காணலாம்.

தோல் இறுக்கத்திற்கான எண்ணெய்கள்
ஆர்கான் எண்ணெய் சருமத்தின் நீரேற்றம் மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரிக்க உதவுகிறது. இதன் விளைவாக இளமையான மற்றும் மிருதுவான சரும தோற்றத்தை நீங்கள் பெறலாம். பாதாம் எண்ணெய் சருமத்தை மென்மையாக்குகிறது மற்றும் புற ஊதா கதிர்வீச்சினால் ஏற்படும் சரும பாதிப்புகளைத் தடுக்கிறது. அவகேடோ எண்ணெய் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும்.

எப்படி பயன்படுத்துவது: எந்த எண்ணெயையும் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் சருமத்தை சுத்தம் செய்து உலர வைக்க வேண்டும். பின்னர், உங்கள் கையில் போதுமான அளவு எண்ணெயை எடுத்து, தோலில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இரவு முழுவதும் எண்ணெயை சருமத்தில் விட்டு, காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

சருமத்தை இறுக்கமாக்கும் வாழைப்பழம்
ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் அண்ட் எஸ்தெடிக் டெர்மட்டாலஜி வெளியிட்ட 2012 ஆய்வின்படி, வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின்கள் மற்றும் இயற்கை எண்ணெய்கள் நிறைந்துள்ளன. அவை சரும சுருக்கங்களின் தோற்றத்தைக் குறைத்து, சருமத்தை இறுக்கமாக்குகின்றன.

எப்படி பயன்படுத்துவது: நான்கில் ஒரு பங்கு பழுத்த வாழைப்பழத்தை பிசைந்து மென்மையான பேஸ்ட்டை உருவாக்க வேண்டும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, 15-20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

சருமத்தை இறுக்கமாக்கும் வெள்ளரி
பொதுவாக வெள்ளரி சருமத்திற்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. வெள்ளரிக்காய் எலாஸ்டின், ஹைலூரோனிக் அமிலத்தை பராமரிக்க உதவுகிறது மற்றும் சருமத்தில் ஈரப்பதமூட்டும் மற்றும் இனிமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று ஃபிட்டோடெராபியா இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி பயன்படுத்துவது: வெள்ளரிக்காயை தோலுரித்து அதை பிளெண்டரில் அரைத்து சாறாக எடுத்துக்கொள்ள வேண்டும். புதிய பருத்தி பந்தைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட தோலில் வெள்ளரி சாற்றை தடவ வேண்டும். 15-20 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தை நன்றாக கழுவ வேண்டும்.

சருமத்தை இறுக்கமாக்கும் கற்றாழை
கற்றாழை இலையில் உள்ள ஜெல் அதன் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரிப்பதன் மூலம் தோல் இறுக்கத்தை அதிகரிக்கிறது. கூடுதலாக, இது கொலாஜன் மற்றும் ஹைலூரோனிக் அமிலத்தின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.

எப்படி பயன்படுத்துவது: கற்றாழை இலையைப் பிரித்து, அதில் உள்ள ஜெல்லை தனியாகப் பிரித்தெடுக்கவும். இதனை நேரடியாக சருமத்தில் தடவி 15-20 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.

சருமத்தை இறுக்கமாக்கும் காபி
காபியில் உள்ள காஃபின், வயது தொடர்பான ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. ஆக்சிடேடிவ் மெடிசின் மற்றும் செல்லுலார் லாங்விட்டி இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, காபியில் உள்ள காஃபின் புற ஊதா கதிர்வீச்சினால் ஏற்படும் தோல் வயதானதிலிருந்து பாதுகாக்கும் என்று தெரிவிக்கிறது.

எப்படி பயன்படுத்துவது: காபி கொட்டையில் தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். அந்த பேஸ்ட்டை உங்கள் தளர்வான தோலில் வட்ட இயக்கத்தில் மெதுவாக மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

சருமத்தை இறுக்கமாக்கும் தேன்
தேன் சருமத்தை நச்சு நீக்கவும், அதன் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தவும், சுருக்கங்களை நீக்கவும் உதவுகிறது.

எப்படி பயன்படுத்துவது: ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தேனை எடுத்து அதில் சிறிது தண்ணீர் சேர்க்கவும். சுருக்கம் உள்ள பகுதியில் அதை தடவ வேண்டும். பின்னர், 15-20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

Story first published: Thursday, July 13, 2023, 20:02 [IST]
Desktop Bottom Promotion