Latest Updates
-
கம்பு ரொட்டியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 22, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணும் - ஜாக்கிரதை -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்..
சுக்ராதித்ய யோகத்தால் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்.. பண மழை கொட்டும்..
Sukraditya Yog 2026: ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது நிலையை மாற்றி மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் சில சமயங்களில் மற்ற கிரகங்களுடன் ஒன்றிணைந்து யோகங்களை உருவாக்கி ஆழமான தாக்கத்தை உண்டாக்கும். அதில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார்.

இந்த சூரியன் அக்டோபர் 17 ஆம் தேதி கன்னி ராசியில் இருந்து வெளியேறி துலாம் ராசிக்குள் நுழைந்தார். அப்போது அந்த துலாம் ராசியில் ஏற்கனவே சுக்கிரன் இருப்பதால், இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் சுக்ராதித்ய யோகம் உருவாகியுள்ளது. அதுவும் இந்த யோகம் சுக்கிரனின் சொந்த ராசியில் உருவாகியிருப்பது இன்னும் சிறப்பு.
இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் தொழில் முன்னேற்றம், நிதி வளர்ச்சி மற்றும் காதல் வாழ்வில் இனிமையை அனுபவிப்பார்கள். இப்போது துலாம் ராசியில் உருவாகியுள்ள சுக்ராதித்ய யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 7 ஆவது வீட்டில் சுக்ராதித்ய யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். சிலருக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கலாம். நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டில் சூரியன் சுக்கிரனின் சேர்க்கையால் சுக்ராதித்ய யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வசதிகளும், ஆடம்பரங்களும் அதிகரிக்கும். அதோடு நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சட்ட ரீதியான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். மொத்தத்தில் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தைக் காணக்கூடும்.
தனுசு
தனுசு ராசியின் 11 ஆவது வீட்டில் சூரியன் சுக்கிரனின் சேர்க்கையால் சுக்ராதித்ய யோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் நிலை மேம்படும். தொழில் முன்னேற்றம் மற்றும் நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வேலையை மாற்றும் எண்ணம் இருந்து, இக்காலத்தில் முயற்சித்தால் நல்ல வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் புதிதாக ஏதாவது முயற்சித்தால், அதில் நல்ல வெற்றியைக் காண்பீர்கள். மொத்தத்தில் கடின உழைப்புக்கான பலன் இக்காலத்தில் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



