Latest Updates
-
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்.. -
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களை ஆபத்துகள் விடாம துரத்தப்போகுதாம் -
திரிகிரக யோகம் மிதுன ராசியில் உருவாகப்போவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கணவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்க முடியுமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு பெண்களுக்கு தரும் பாதுகாப்பு என்ன? -
கறிவிருந்து ஸ்டைல் மட்டன் எலும்பு குழம்பு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்
பொடுகு மற்றும் நரைமுடி பிரச்சனையை போக்க.... காபி பவுடரை உங்க முடியில 'இப்படி' யூஸ் பண்ணா போதுமாம்!
தினமும் காலையில் எழுந்ததும் பெரும்பலான மக்கள் குடிக்கும் காபி, உங்கள் தலைமுடிக்கு அதிசயங்களை செய்யும் என்று சொன்னால் என்ன செய்வீர்கள்? ஆம், பொடுகு மற்றும் நரை முடி பிரச்சனை போன்ற தலைமுடி பிரச்சனைகளை போக்க காபி உங்களுக்கு உதவும்.
நறுமணமான காபியை குடித்துக்கொண்டும், அவற்றை உங்கள் தலைமுடியில் தடவியும் காபியின் நன்மைகளை நீங்கள் அறுவடை செய்யலாம். உங்கள் தலைமுடியை பராமரிக்க உதவும் இயற்கையான தீர்வு காபி ஹேர் மாஸ்க். காபி உங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மைகளை வழங்குவதோடு, உச்சந்தலையின் ஆரோக்கியத்திற்கு அதிசயங்களைச் செய்கிறது.

அழகான தலைமுடியை பராமரிக்க இயற்கையான வழிகளை நீங்கள் தேடுகிறீர்களானால், உங்களுக்காக சில காபி மாஸ்க்குகள் உள்ளன. உங்கள் முடி மற்றும் உச்சந்தலை ஆரோக்கியத்திற்கு உதவும் காபி மாஸ்க்குகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
காபியில் முடியை கழுவுதல்
காபி மாஸ்க் தயாரிக்க கால் கப் அரைத்த காபி பவுடர் மற்றும் போதுமான வெந்நீர் தேவை. காபியை தயாரிக்க காபி தூளுடன் சூடான நீரை ஊற்றி ஒன்றாக கலக்க வேண்டும். பின்னர், அதை ஒரு வசதியான வெப்பநிலையில் குளிர்விக்க விடுங்கள்.
இந்த காபி நீரை உங்கள் உச்சந்தலையில் ஊற்றி மெதுவாக தடவி மசாஜ் செய்ய வேண்டும். வேர்கள் முதல் நுனி வரை நன்றாக தடவ வேண்டும். சுமார் 10-15 நிமிடங்கள் கழித்து முடியை தண்ணீரில் அலசுங்கள்.
இது எவ்வாறு வேலை செய்கிறது?
காபியில் உள்ள காஃபின் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை தூண்டுகிறது. இது முடி வளர்ச்சி மற்றும் உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், இது உச்சந்தலையை உரிக்க உதவுவதோடு, உங்கள் முடியை புதியதாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவும்.
பொடுகு பிரச்னைக்கு காபி
காபியை தயாரித்து அதை குளிர்விக்க விட வேண்டும். நீங்கள் வழக்கம் போல் உங்கள் தலைமுடியை ஷாம்பு போட்டு அலச வேண்டும். பின்னர், இறுதியில் காபி தண்ணீரை தலையில் ஊற்றி அலச வேண்டும். அது உங்கள் உச்சந்தலை முழுவதும் பரவி இருப்பதை உறுதி செய்யவும். இந்த நடவடிக்கைக்குப் பிறகு உங்கள் தலைமுடியைக் கழுவ வேண்டிய அவசியமில்லை.
இது எவ்வாறு வேலை செய்கிறது?
காபியில் உள்ள இயற்கையான அமிலத்தன்மை உங்கள் உச்சந்தலையின் pH அளவை சமப்படுத்தவும் பொடுகு பிரச்சனைகளை எதிர்த்து போராடவும் உதவும். கூடுதலாக, இது உங்கள் தலைமுடிக்கு ஒரு பளபளப்பான பிரகாசத்தை சேர்க்கிறது மற்றும் பளபளப்பை கொடுக்கிறது.
காபி ஹேர் மாஸ்க்
தேவையான பொருட்கள்
- 2 டேபிள் ஸ்பூன் காபி பவுடர்,
- 1 டேபிள் ஸ்பூன் தேன்
- 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலக்க வேண்டும். இந்த பேஸ்ட்டை வேர்கள் முதல் நுனி வரை உங்கள் தலைமுடியில் தடவ வேண்டும். பின்னர், ஒரு ஷவர் கேப் போட்டு 20-30 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள். ஷாம்பூவைக் கொண்டு உங்கள் தலைமுடியை நன்றாக அலசிய பின், பட்டுப்போன்ற கூந்தலை பெறுவீர்கள்.
இது எவ்வாறு வேலை செய்கிறது?
காபி, தேன் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றின் கலவையானது உங்கள் தலைமுடியினுள் ஆழமாக ஊடுருவி வேலை செய்கிறது. இதனால், மென்மையான மற்றும் ஆரோக்கியமான தலைமுடியை நீங்கள் பெறலாம்.
இறுதிக்குறிப்பு
காபி உங்கள் உச்சந்தலையில் அதிசயங்களைச் செய்யும் அதே வேளையில், உங்களுக்கு சென்சிடிவ்வான ஸ்கால்ப் இருந்தால் அல்லது காபிக்கு ஒவ்வாமை இருந்தால் எச்சரிக்கையாக இருங்கள். எந்தவொரு பாதகமான எதிர்விளைவுகளையும் நீங்கள் அனுபவிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த எப்போதும் பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள்.



Click it and Unblock the Notifications
