Latest Updates
-
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும்
டக்குனு உங்க தொப்பை மற்றும் எடையை குறைக்க... டெய்லி காலையில இந்த 4 பானங்களை குடிச்சா போதுமாம்!
தூங்கி எழுந்தவுடன், காலையில் வெறும் வயிற்றில் காபி அல்லது டீ குடிப்பதை பலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர். டீ மற்றும் காபி குடிப்பதை தங்கள் அன்றாட பழக்கமாக கொண்டிருக்கும் நபர்கள், உடல் எடையை குறைக்க முயற்சி செய்கிறீர்கள் என்றால், இவற்றை தவிர்ப்பது நல்லது.
பெரும்பலான மக்கள் டீ, காபி குடித்துதான் தங்கள் நாளையே தொடங்குகிறார்கள். ஆனால், இவற்றை வெறும் வயிற்றில் அருந்துவது நல்லதல்ல. காலையில் முதலில் தேநீர் அல்லது காபி குடிப்பது வயிற்றில் அமிலம் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யலாம். மேலும், இது செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தலாம், ஊட்டச்சத்தை உறிஞ்சுவதில் குறுக்கீடலாம் மற்றும் இரத்த சர்க்கரையில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தலாம்.

அதற்குப் பதிலாகத் தேர்ந்தெடுப்பதற்கான சிறந்த மற்றும் ஆரோக்கியமான மாற்று பானங்கள் உள்ளன. ஆம், சில ஆரோக்கியமான பானங்கள் உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, உங்கள் உடல் எடையை குறைக்க உதவுகின்றன. அவை என்னென்ன பானங்கள் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
மஞ்சள் மற்றும் மிளகு தண்ணீர்
வெதுவெதுப்பான நீரில் தலா 2-3 சிட்டிகை மஞ்சள் மற்றும் கருப்பு மிளகுத்தூள் சேர்த்து பானத்தை உருவாக்குங்கள். இது உங்கள் நாளைத் தொடங்க ஒரு சூப்பர் ஆரோக்கியமான காலை பானமாக இருக்கும். இந்த சக்திவாய்ந்த பானம் உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது மற்றும் அதிகப்படியான கொழுப்பை அகற்ற உதவுகிறது.
ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி திட்டத்துடன் மஞ்சளை இணைப்பது உடல் எடையை மிக விரைவாக குறைக்க உதவும். கருப்பு மிளகில் பைபரின் எனப்படும் ஒரு கலவையை உள்ளது. இது வளர்சிதை மாற்ற செயல்திறனை அதிகரித்து, உங்கள் உடலில் திரட்டப்பட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு பானம் உடல் பருமனை குணப்படுத்தும் பல பிரபலமான மருந்துகளில் ஒன்றாகும்
சீரகம், பெருஞ்சீரகம் மற்றும் ஓமம் நீர்
2 கப் தண்ணீரை எடுத்து அதில் ஒரு ஸ்பூன் ஜீரா (சீரகம்), பெருஞ்சீரகம் விதைகள் மற்றும் அஜ்வைன் (ஓமம் விதைகள்) ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் பாதியாகக் குறைந்தவுடன் வடிகட்டி, மிதமான சூட்டில் பருகவும். இந்த பானம் எடை இழப்புக்கு ஏற்ற பானம் செரிமானத்தை மேம்படுத்தவும் மற்றும் வீக்கத்தை சமாளிக்கவும் உதவும்.
குறிப்பாக உங்கள் மாதவிடாய் காலங்களில் உங்களை நன்றாக உணர வைக்கவும், வலியை குறைக்கவும் உதவும். எடை இழப்பு பானத்தில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் ஓர் பொருளாக சீரகம் உள்ளது. ஜீரா அல்லது சீரகம் உடல் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது மற்றும் கொழுப்பை எரிப்பதை ஊக்குவிக்கிறது, உங்களை ஃபிட்டராக மாற்றுகிறது.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த பானத்தை குடித்து வந்தால், மாதம் 1-2 கிலோ எடையைக் குறைக்கலாம். இருப்பினும், இந்த ஆரோக்கிய பானத்தோடு ஒருவர் உடற்பயிற்சி செய்ய வேண்டும் மற்றும் உணவு வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டும். அஜ்வைன் ஊட்டச்சத்து உறிஞ்சுதல் மற்றும் செரிமானத்தை எளிதாக்குகிறது. இது உடல் எடையை குறைக்க உதவுகிறது.
எலுமிச்சை நீர்
வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு எலுமிச்சை சாற்றை கலந்து குடிக்க வேண்டும். இது மிகவும் புளிப்பாக இருந்தால், பானத்தில் சிறிது தேன் சேர்க்கலாம். இந்த பானத்தை அதிக சக்தி வாய்ந்ததாக மாற்ற, நீங்கள் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை துளையும் சேர்க்கலாம்.
காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை நீரை முதலில் குடிப்பது உங்களை புத்துணர்ச்சியூட்டுவதோடு உங்கள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் உதவும். இது உங்கள் சருமத்திற்கும் ஆரோக்கியமான பானமாகும். எலுமிச்சை நீர் உங்களுக்கு முழுமையான உணர்வை கொடுக்கும். மேலும், இது நீரேற்றத்தை ஆதரிக்கும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் மற்றும் எடை இழப்பை அதிகரிக்கும்.
சாதாரண நீர் அல்லது வெதுவெதுப்பான நீர்
நீங்கள் காலையில் எந்த தொந்தரவும் விரும்பவில்லை என்றால், வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெற்று அல்லது வெதுவெதுப்பான நீரைக் குடிக்க வேண்டும். இது உங்கள் உடலை ஹைட்ரேட் செய்து உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இது உங்கள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவும்.
டீ அல்லது காபி எப்போது சாப்பிட வேண்டும்?
இந்த பானங்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் உட்கொண்டவுடன், ஊறவைத்த பாதாம் போன்ற சில பருப்புகள் அல்லது பூசணி விதைகள் போன்ற விதைகளை சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் இனிப்பு ஏதாவது சாப்பிட விரும்பினால், திராட்சை, பேரிச்சம் பழங்கள் அல்லது புதிய பழங்களைத் தேர்வு செய்யலாம்.
இவற்றில் ஏதேனும் ஒன்றை சாப்பிட்டு சிறிது நேரம் கழித்து, காலை டீ அல்லது காபி சாப்பிடலாம். டீ அல்லது காபியை முதலில் உட்கொள்ளும் உங்கள் வழக்கமான பழக்கத்தை மாற்றி, மேலே குறிப்பிட்டுள்ள பானங்களில் ஏதேனும் ஒன்றை உட்கொள்வது, உங்கள் உடல் எடையை குறைக்க உதவும். இருப்பினும், இந்த பானங்கள் உங்களுக்கு ஒவ்வாமை பிரச்சனையை ஏற்படுத்தினால், தனிப்பட்ட வழிகாட்டுதலுக்கு ஊட்டச்சத்து நிபுணரை அணுக வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
