Latest Updates
-
லன்ச்பாக்ஸ்-க்கு ஒருடைம் இப்படி கீரை சாதம் செஞ்சு குடுங்க.. ருசியாவும் இருக்கும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 01 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு நல்ல நேரம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு நிறைய லாபமும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும்.. -
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் லட்டு - இப்படி செய்யுங்க.. 10 நாளானாலும் கெட்டுப்போகாது! -
ஹரியாலி வெஜ் புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்தியில் நிகழும் அரிய கிரக நிலைகளால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! -
வாகனங்களின் டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிகள் அனைவரின் முகத்திலும் சிரிப்பை கொண்டுவரும் தூய ஆன்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
காபி/டீ குடிச்சதும் தண்ணீர் குடிப்பீங்களா? முதல்ல அத நிறுத்துங்க.. இல்லன்னா இந்த பிரச்சனைகளை சந்திப்பீங்க...
Health Tips In Tamil: இந்தியாவில் காபி, டீ பிரியர்கள் ஏராளம். காலையில் எழுந்ததும் ஒரு கப் காபி, டீ குடித்து தான் அன்றைய தினத்தையே தொடங்குவார்கள். மேலும் எப்போது காபி, டீ குடிக்க கொடுத்தாலும், வேண்டாம் என்று சொல்லாமல் வாங்கி குடிப்பார்கள். அந்த அளவில் இந்தியர்கள் காபி, டீயை விரும்பி குடிப்பார்கள்.
காபி, டீயானது உடலுக்கு உடலுக்கு சுறுசுறுப்பை அளிப்பதோடு, மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள உவுகிறது. இப்படிப்பட்ட காபி, டீயைக் குடிக்கும் போது நிறைய பேர் ஒரு தவறை செய்கிறார்கள். அது என்னவெனில், காபி, டீ குடித்த பின்னர் தண்ணீர் குடிப்பது தான்.

உண்மையில் இப்படியான பழக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கை விளைவிக்கும் என்பது தெரியுமா? கீழே காபி, டீ குடித்ததும் உடனே தண்ணீர் குடித்தால் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதைக் காண்போம்.
1. வயிற்று பிரச்சனைகள்
டீ அல்லது காபி குடித்ததும், குளிர்ந்த நீரைக் குடிக்கும் போது, அது வயிற்றில் பலவிதமான பிரச்சனைகளை வரவழைக்கும். அதுவும் இப்படி காபி, டீ குடித்த உடனேயே தண்ணீர் குடித்தால், வயிற்று வலி, அசிடிட்டி, மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைகளை வரவழைத்துவிடும்.
2. பற்களுக்கு தீங்கு விளைவிக்கும்
நிறைய பேர் காபி, டீ குடித்த பின் பற்களில் கறைகள் படக்கூடாது என்பதற்காக தண்ணீர் குடிப்பதாக காரணம் கூறுவார்கள். ஆனால் உண்மையில், சூடான காபி, டீயைக் குடித்ததும் குளிர்ந்த நீரைக் குடிக்கும் போது, அது பற்களில் பலவிதமான பிரச்சனைகளை உண்டாக்கும். ஏனெனில் சூடாக ஒரு பானத்தை குடித்ததும் உடனே குளிர்ச்சியானதை குடிக்கும் போது, அது வாயில் உள்ள நரம்புகள் மற்றும் பற்களின் மேல் அடுக்கில் பிரச்சனைகளை வரத்தூண்டும்.
3. மூக்கில் இரத்தக்கசிவு
சிலருக்கு காபி, டீ குடித்ததும் மூக்கில் இருந்து இரத்தம் கசியலாம். மூக்கில் இருந்து இரத்தம் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. உங்களுக்கு இப்படி மூக்கில் இருந்து இரத்தம் கசியுமானால், காபி, டீ குடித்ததும் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை உடனே நிறுத்துங்கள்.
4. சளி மற்றும் இருமல்
நல்ல சூடான காபி, டீயைக் குடித்த உடனேயே குளிர்ந்த நீரைக் குடிக்கும் போது, அது சளி, இருமல் போன்ற பிரச்சனைகளை வரத்தூண்டலாம். அதோடு இப்பழக்கம் தொண்டையிலும் அடைப்பை ஏற்படுத்தி, தொண்டை கரகரப்பு பிரச்சனையை வரவழைக்கும். எனவே காபி, டீ குடித்ததும் தண்ணீர் குடிக்காதீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications