For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எடையை குறைக்கவும் குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் இந்த சாற்றை வெறும் வயிற்றில் குடிச்சா போதுமாம்!

வெள்ளை பூசணிக்காய் பானம் ஒரு உண்மையான ஆசிய பானமாகும். இதில் 5% சுரைக்காயின் சாறு உள்ளது. இது உடல் எடையை குறைக்க உதவுகிறது, சளியை குறைக்கிறது, தாகத்தை தணிக்கிறது மற்றும் உள் வெப்பத்தை நீக்குகிறது போன்ற பல ஆரோக்கிய நன்மைகள

|

வெள்ளை பூசணிக்காய் என்று அழைக்கப்படும் இந்த காய்கறி, இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளில் பொதுவாகக் காணப்படும் ஒரு குளிர்கால முலாம்பழமாகும். இந்த காய்கறி மிகவும் சத்தான மருத்துவ குணங்கள் கொண்டதாக அறியப்படுகிறது. இந்திய சமையலில் இந்த காய்கறி முக்கியமானதாக உள்ளது. இதில், சாறு, உணவு, இனிப்பு வகைகள் என செய்யப்பட்டு உண்ணப்படுகிறது. மிகவும் பிரபலமான இந்த காயை மக்கள் பயன்படுத்துவதற்கு, இதன் ஆரோக்கிய நன்மைகளே காரணம். ஊட்டச்சத்து நிபுணர்களும் வெள்ளை பூசணியை அனைவரும் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கிறார்கள்.

Health Benefits Of White Petha Juice And Heres How To Make It At Home in tamil

மேலும் இந்த வெள்ளை பூசணி சாற்றை ஒவ்வொருவரும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த சாறு ஒரு கார உடலை அடைய உதவுகிறது. இக்கட்டுரையில், வெள்ளை பூசணி சாற்றின் நன்மைகள் பற்றியும் அவற்றை எவ்வாறு வீட்டில் தயாரிக்கலாம் என்பதை பற்றியும் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளை பூசணிக்காய்

வெள்ளை பூசணிக்காய்

சஃபேட் பேத்தா காய்கறியின் மற்றொரு பெயர் வெள்ளை பூசணி. இது குளிர்கால முலாம்பழம் என்றும் அழைக்கப்படுகிறது. வைட்டமின்கள், தாதுக்கள்,கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, தியாமின் மற்றும் நியாசின் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. வெள்ளை பூசணிக்காய் பல அற்புதமான குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் அதிக சத்தானது.

வெள்ளை பூசணி பானம் ஆரோக்கியமானதா?

வெள்ளை பூசணி பானம் ஆரோக்கியமானதா?

வெள்ளை பூசணிக்காய் பானம் ஒரு உண்மையான ஆசிய பானமாகும். இதில் 5% சுரைக்காயின் சாறு உள்ளது. இது உடல் எடையை குறைக்க உதவுகிறது, சளியை குறைக்கிறது, தாகத்தை தணிக்கிறது மற்றும் உள் வெப்பத்தை நீக்குகிறது போன்ற பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இனிப்பு வெள்ளை பூசணியின் சுவை உங்களுக்கு புத்துணர்ச்சியூட்டுகிறது. இந்த சாற்றை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும். அப்போது தான் அதிகபட்ச பலன்களை நீங்கள் பெற முடியும் என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

உடல் காரமாக இருக்கும்போது என்ன நடக்கும்?

உடல் காரமாக இருக்கும்போது என்ன நடக்கும்?

வாழ்க்கையில் ஒரு எளிய விதி உள்ளது. நீங்கள் உங்களைப் பற்றி கவலைப்படாவிட்டால், உங்களை பற்றி யாரும் கவலை மாட்டார்கள். உங்களை நீங்களே கவனித்துகொள்வது மிக முக்கியம். நாம் செய்யும் உணவுத் தேர்வுகள், நம் உடல் செயல்படும் விதத்தைப் பாதிக்கலாம். நாம் சாப்பிடும் உணவுகளே நம் உடல் ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. உடல் கார நிலையில் இருக்கும்போது, ​​உடலின் பிஹெச்(pH) அளவு அதிகரிக்கிறது. இது நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. மொத்தத்தில், அல்கலைன் உடலைக் கொண்டிருப்பதால், நீங்கள் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.

வெள்ளை பூசணி சாற்றின் நன்மைகள்

வெள்ளை பூசணி சாற்றின் நன்மைகள்

வெள்ளை பூசணி சாற்றில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மற்றும் உணவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது உங்களுக்கு முழுமையை அளிக்கிறது மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது. மேலும், உங்கள் பசியைத் தவிர்க்கிறது. அதுமட்டுமின்றி, வயிற்றை குளிர்விக்கும் உடலின் காரத்தன்மையை அதிகரிக்க இந்த ஜூஸ் மிகவும் நல்லது.

குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

வெள்ளை பூசணியில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. மலச்சிக்கல், வாயு மற்றும் அமிலத்தன்மை போன்ற அஜீரண பிரச்சினைகள் உள்ளவர்கள் இந்த பானத்தை தங்கள் உணவில் கண்டிப்பாக சேர்க்க வேண்டும். ஆற்றல் மட்டங்களை அதிகரிப்பதில் இந்த சாறு முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால், தொடர்ந்து உடல் பலவீனத்தை அனுபவிப்பவர்கள் இந்த சாற்றை தங்கள் உணவில் தவறாமல் சேர்த்து கொள்ள வேண்டும்.

ஜூஸ் செய்வது எப்படி?

ஜூஸ் செய்வது எப்படி?

வீட்டிலேயே இந்த சாறு தயாரிப்பது மிகவும் எளிதானது. வெள்ளை பூசணிக்காயை எடுத்து தோலுரித்தால் போதும். பின்னர், விதைகளை அகற்றி, ஒரு பாத்திரத்தில் சிறிய துண்டுகளாக வெட்டவும். நறுக்கிய வெள்ளை பூசணியை ஒரு பிளெண்டர் ஜாடிக்கு மாற்றி, மென்மையாகும் வரை அரைக்கவும். இப்போது, ​​ஒரு கிளாஸ் எடுத்து, இந்த கலவையிலிருந்து சாற்றை வடிகட்டவும். இந்த சாற்றின் சுவையை அதிகரிக்க சிறிது எலுமிச்சை சாறு மற்றும் ஒரு சிட்டிகை கல் உப்பு சேர்க்கவும். தினமும் காலை தவறாமல் சாப்பிடுங்கள், வித்தியாசத்தை நீங்களே உணர்வீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of White Petha Juice And Here's How To Make It At Home in tamil

Here we talking about the Health Benefits Of White Petha Juice And How To Make It At Home in tamil.
Story first published: Thursday, July 21, 2022, 12:30 [IST]
Desktop Bottom Promotion