For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெந்தயம் ஊற வைத்த நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் பெறும் நன்மைகள்!

வெந்தயத்தை அப்படியே சாப்பிடுவதை விட, வெந்தயம் ஊற வைத்த நீர் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?

|

பல நூற்றாண்டுகளாக மருத்துவ உலகின் ஒரு பகுதியாக ஆயுர்வேதம் இருந்து வருகிறது. இயற்கை மருத்துவ முறையான ஆயுர்வேதத்தில் மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களைக் கொண்டு மருத்துவம் பார்க்கப்படுகிறது. மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

Health Benefits Of Starting Your Day With Soaked Fenugreek Water

அதில் நமது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஓர் மசாலாப் பொருள் தான் வெந்தயம். மெத்தி என்று அழைக்கப்படும் வெந்தயம், பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க கை வைத்தியத்தில் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. ஆனால் வெந்தயத்தை அப்படியே சாப்பிடுவதை விட, வெந்தயம் ஊற வைத்த நீர் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஒரு சிறந்த ஆன்டாசிட்டாக வேலை செய்வதில் இருந்து சர்க்கரை நோயை நிர்வகிப்பது வரை, வெந்தயம் ஊற வைத்த நீர் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கிறது. கீழே வெந்தயம் ஊற வைத்த நுரை காலையில் எழுந்ததும் குடிப்பதால் பெறும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அசிடிட்டிக்கு நல்லது

அசிடிட்டிக்கு நல்லது

உங்களுக்கு அசிடிட்டி பிரச்சனை உள்ளதா? அசிடிட்டி என்பது ஒரு பொதுவான பிரச்சனை. இது யாருக்கு வேண்டுமானாலும் வரும். வலிமிக்க நெஞ்செரிச்சல், நெஞ்சு அல்லது தொண்டை பகுதியில் எரிச்சல் உணர்வு போன்றவை அசிடிட்டியின் பொதுவான அறிகுறிகள் ஆகும். வெந்தயம் ஊற வைத்த நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால் அசிடிட்டியில் இருந்து விடுபட உதவும்.

சர்க்கரை நோயை நிர்வகிக்க உதவுகிறது

சர்க்கரை நோயை நிர்வகிக்க உதவுகிறது

சர்க்கரை நோய்/நீரிழிவு என்பது ஒரு பொதுவான வாழ்க்கை முறை நோயாகும். இந்நிலையானது உடலை இன்சுலின் பயன்படுத்துவதைத் தடுக்கிறது. ஊற வைத்த வெந்தயத்தை சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெந்தய விதைகளில் நார்ச்சத்து மற்றும் பிற கெமிக்கல்கள் உள்ளன. இவை செரிமானத்தை மெதுவாக நடைபெற செய்து, கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரையை உறிஞ்ச உதவுகிறது. மேலும் இவை உடல் சர்க்கரையை எவ்வாறு உறிஞ்சுகிறதோ அதை மேம்படுத்துகிறது மற்றும் இன்சுலின் வெளியீட்டை அதிகரிக்கிறது.

செரிமானத்தை மேம்படுத்தும்

செரிமானத்தை மேம்படுத்தும்

செரிமான பிரச்சனைகளால் அவதிப்படுபவராயின், வெந்தயம் ஊற வைத்த நீரைக் குடிப்பது இப்பிரச்சனையில் இருந்து விடுபட உதவும். அதுவும் இது செரிமான மண்டலத்தை சிறப்பாக வேலை செய்ய வைக்கிறது மற்றும் உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை நீக்குகிறது. அதோடு இது குடலியக்கத்தை மேம்படுத்துவதால், மலச்சிக்கல், அஜீரணம் மற்றும் பிற செரிமான பிரச்சனைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.

கொழுப்பைக் குறைக்கிறது

கொழுப்பைக் குறைக்கிறது

வெந்தயத்திற்கு கல்லீரலில் எல்.டி.எல் ஏற்பிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திறன் உள்ளதால், அது செல்களில் கெட்ட கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, இரத்த ஓட்டத்தில் இருந்து வெளியேற்றுகிறது. மேலும் இது கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் கட்டுப்படுத்த உதவுவதால், உடலில் கெட்ட கொழுப்புக்கள் தேங்குவதைக் குறைக்கிறது.

அழகான சருமம்

அழகான சருமம்

உங்களுக்கு பொலிவான மற்றும் பளபளப்பான சருமம் வேண்டுமா? அப்படியானால் வெந்தயம் ஊற வைத்த நீரை குடியுங்கள். இதனால் அது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி, செரிமானத்திற்கு உதவி புரிந்து, அழகான சருமத்தைத் தருகிறது. வெந்தய விதைகளில் வைட்டமின் கே மற்றும் வைட்டமின் சி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது சருமத்தில் உள்ள கருமையான வளையங்கள் மற்றும் கறைகளைப் போக்க உதவுகிறது. இத்தகைய விதைகளை உணவில் சேர்ப்பது மிகவும் எளிதானது என்றாலும், இதை உங்கள் உணவில் சேர்ப்பதற்கு முன்பு பேட்ச் டெஸ்ட் செய்ய வேண்டும்.

வெந்தய நீரைத் தயாரிப்பது எப்படி?

வெந்தய நீரைத் தயாரிப்பது எப்படி?

வெந்தய நீரைத் தயாரிப்பது என்பது மிகவும் ஈஸி. அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தய விதைகளை 2 டம்ளர் நீரில் ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின் மறுநாள் காலையில் அந்நீரை வடிகட்டி குடிக்க வேண்டும். என்ன தான் வெந்தயம் மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருந்தாலும், இதை உட்கொள்ளும் முன் உங்களுக்கு அலர்ஜி மற்றும் பிற பிரச்சனை ஏற்படுகிறதா என்பதை சோதித்துப் பார்க்க வேண்டியது முக்கியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Starting Your Day With Soaked Fenugreek Water

Fenugreek seeds are good for your health. But did you know that starting your day with soaked fenugreek water is also healthy? Everything you need to know.
Story first published: Friday, March 26, 2021, 12:50 [IST]
Desktop Bottom Promotion