For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க இஞ்சியை இப்படி சாப்பிட்டா போதுமாம்... உங்க கொலஸ்ட்ரால் அளவு & உடல் எடையை ஈஸியா குறைக்கலாமாம்!

சிலர் அதிகளவு இஞ்சியை உட்கொள்வது வயிற்று வலி, வாயு மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும். பித்தப்பைக் கற்கள் உள்ளவர்கள் இஞ்சியைத் தவிர்க்க வேண்டும் என்று சில மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

|

நம் சமையலறையில் அன்றாடம் பயன்படுத்தப்படும் ஒரு உணவுப் பொருள் இஞ்சி. அதன் சிறந்த சுவை தவிர, இஞ்சி பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்குகிறது. இது உலகெங்கிலும் உள்ள பல கலாச்சாரங்கள் மற்றும் உணவு வகைகளில் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான மூலப்பொருளாக உள்ளது. இஞ்சியின் ஒரு முக்கிய கூறு ஜிஞ்சரால் ஆகும், இது செரிமானத்திற்கு உதவுகிறது. இஞ்சி திறமையான செரிமானத்தை ஊக்குவிக்கிறது. எனவே உணவு நீண்ட காலத்திற்கு இரைப்பைக் குழாயில் இருக்காது.

Health Benefits Of Ginger Water; Is It Good For Detoxification in tamil?

மேலும், இது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. இஞ்சி தண்ணீரின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அது நச்சுத்தன்மைக்கு பயனுள்ளதா? என்பதை பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இஞ்சி நீரின் ஆரோக்கிய நன்மைகள்

இஞ்சி நீரின் ஆரோக்கிய நன்மைகள்

இஞ்சி நீர் குளிர்கால மாதங்களில் ஒரு அற்புதமான பானமாக அமைகிறது. இரவு உணவிற்குப் பிறகு ஒரு அற்புதமான பானமாக மாற்ற, நீங்கள் சிறிது எலுமிச்சை மற்றும் தேனை அதில் சேர்க்கலாம். இஞ்சி நீரில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உடல் ஃப்ரீ ரேடிக்கல்களைக் கையாள உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது புற்றுநோய், இதய நோய் மற்றும் நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கிறது. மேலும், இஞ்சி நீர் பொட்டாசியம் நிறைந்ததாக இருப்பதைத் தவிர, மற்ற தாதுக்களிலும் நிறைந்துள்ளது.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது

மூளை மற்றும் நரம்புகள் தொடர்பு கொள்ள தேவையான கோலின் என்ற கூறு இஞ்சியில் உள்ளது. உங்கள் வளர்சிதை மாற்றம், மனநிலை மற்றும் உங்கள் தசை செயல்பாடு ஆகியவற்றை ஆதரிப்பதில் கோலின் முக்கிய பங்கு வகிக்கிறது.

குமட்டலை குறைக்கிறது

குமட்டலை குறைக்கிறது

வரலாற்று ரீதியாக, குமட்டல் மற்றும் அஜீரணத்திற்கு இஞ்சி ஒரு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய ஆராய்ச்சியின் படி, ஒன்று முதல் இரண்டு கிராம் இஞ்சியை உட்கொள்வது குமட்டல் அறிகுறிகளைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது. மற்ற வகை வயிற்றுப் பிரச்சனைகள் குறித்து இன்னும் அதிக ஆராய்ச்சி தேவை என்ற போதிலும், இஞ்சி நீர் வயிற்று வலிக்குப் பிறகு மீட்க பாதுகாப்பான மற்றும் பயனுள்ள வழியாக இருக்கும்.

செரிமானத்தை ஊக்குவிக்கிறது

செரிமானத்தை ஊக்குவிக்கிறது

இஞ்சி வேரின் இயற்கையான கூறு, ஜிஞ்சரால், இரைப்பை குடல் இயக்கத்தை அதிகரிப்பதன் மூலம் செரிமானத்திற்கு உதவுகிறது. உணவு வயிற்றில் இருந்து வெளியேறும் மற்றும் செரிமான செயல்முறையுடன் நகர்கிறது. உணவுக்குப் பிறகு இஞ்சித் தண்ணீரைக் குடிப்பதால், செரிமான செயல்முறையுடன் உணவை ஜீரணிப்பதற்கு திறமையான செரிமானத்தை ஊக்குவிக்கிறது.

வீக்கத்தைக் குறைக்கிறது

வீக்கத்தைக் குறைக்கிறது

இஞ்சி வீக்கத்தைக் குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இஞ்சி சாறுகள் ஒவ்வாமை அறிகுறிகளைக் குறைப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த முடிவுகளை உறுதிப்படுத்த கூடுதல் ஆராய்ச்சி அவசியம். கடுமையான உடற்பயிற்சியைத் தொடர்ந்து இஞ்சி தசை வலியைக் குறைக்கும் என்றும் கூறப்படுகிறது.

எடை இழப்புக்கு உதவலாம்

எடை இழப்புக்கு உதவலாம்

ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சியுடன் இணைந்தால், இஞ்சி தண்ணீர் எடை இழப்புக்கு உதவும். அதிக கொழுப்புள்ள உணவுகளில் இஞ்சியை சேர்ப்பது உடல் பருமனை குறைக்க உதவுகிறது என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. மற்றொரு ஆய்வில் இஞ்சி டீயை சாப்பிட்ட பிறகு குடித்த ஆண்கள் நீண்ட காலத்திற்கு முழுதாக உணர்கிறார்கள்.

கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கலாம்

கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கலாம்

இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகளவு கொலஸ்ட்ராலால் நிகழ வாய்ப்புள்ளது. கொலஸ்ட்ரால் சில நேரங்களில் உங்க உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம். சில ஆராய்ச்சிகளின்படி, இஞ்சி உங்கள் எல்டிஎல் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. ஆனால் உங்கள் மொத்த கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளையும் குறைக்கிறது. அவ்வாறு செய்வதன் மூலம், இதய நோய் மற்றும் கொலஸ்ட்ரால் தொடர்பான பிற நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம்.

இஞ்சி தண்ணீர் செய்வது எப்படி?

இஞ்சி தண்ணீர் செய்வது எப்படி?

இஞ்சி தண்ணீர் தயாரிப்பது ஒரு எளிய செயல். நீங்கள் அதை தண்ணீர் மற்றும் இஞ்சி வேர் கொண்டு செய்யலாம். இருப்பினும், அதில் தேன் மற்றும் எலுமிச்சை அல்லது எலுமிச்சை சாறு போன்றவற்றை கூடுதலாக சேர்க்கலாம். 1-2 லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் பொடியாக நறுக்கிய இஞ்சியை (3/4 கப்) சேர்க்கவும். குறைந்தது 20 நிமிடங்களாவது கொதிக்க விடவும், இதனால் இஞ்சியின் மருத்துவ சக்தி தண்ணீருக்குள் இறங்கும். இந்த நீரை வடிகட்டி குடிக்கவும்.

யார் இஞ்சி தண்ணீர் குடிக்கக்கூடாது?

யார் இஞ்சி தண்ணீர் குடிக்கக்கூடாது?

சிலர் அதிகளவு இஞ்சியை உட்கொள்வது வயிற்று வலி, வாயு மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவற்றை ஏற்படுத்தும். பித்தப்பைக் கற்கள் உள்ளவர்கள் இஞ்சியைத் தவிர்க்க வேண்டும் என்று சில மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால் இஞ்சி பித்தப்பை பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது என்று ஆய்வுகள் கண்டறியவில்லை.

இஞ்சி நீர் நச்சுத்தன்மைக்கு நல்லதா?

இஞ்சி நீர் நச்சுத்தன்மைக்கு நல்லதா?

சிலர் தங்கள் நச்சுத்தன்மையின் ஒரு பகுதியாக எலுமிச்சை சாறுடன் இஞ்சி தண்ணீரைக் குடிக்கிறார்கள். இஞ்சி கிருமிகள், தொற்றுகள், வீக்கம் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் மூலக்கூறுகளை எதிர்த்துப் போராட முடியும். எனவே தினமும் சிறிதளவு இஞ்சியை எடுத்துக்கொள்வது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கும். இஞ்சியும் ஒரு இயற்கை வேர், எனவே இதை குடிப்பதால் கூடுதல் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Ginger Water; Is It Good For Detoxification in tamil?

Here we are talking about the Health Benefits Of Ginger Water; Is It Good For Detoxification in tamil?
Story first published: Saturday, January 21, 2023, 17:50 [IST]
Desktop Bottom Promotion