Latest Updates
-
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது
இந்த சிறு தானியத்தை கஞ்சி வெச்சு அடிக்கடி குடிச்சா.. சர்க்கரை நோய், எலும்பு பிரச்சனைகள் வராதாம்...
தற்போது எத்தியோப்பியா நாட்டைச் சோ்ந்த பசையம் இல்லாத டெஃப் என்ற பெயா் கொண்ட ஒரு தானியம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது. அந்த தானியம் மக்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் வழங்குகிறது.
காலத்திற்கு ஏற்ப மனிதா்களின் உணவுப் பழக்கவழக்கங்கள் மாறிக் கொண்டு வருகின்றன. அவ்வாறு மாறி வரும் போது மக்கள் தங்களின் பழைய உணவுப் பழக்கவழக்கங்களைக் கைவிட்டு, புதிய புதிய உணவுகளைத் தேடி விரும்பி உண்ணத் தொடங்குகின்றனா். அதனால் மனித சமூகத்தில் தாவரம் சாா்ந்த உணவுகள், பசையம் இல்லாத உணவுகள் என்று பல புதிய உணவுகள் அறிமுகம் ஆகின்றன.

இவ்வாறு புதிய உணவுகளைப் பின்பற்றுபவா்களுக்கு, அதிக அளவிலான புதிய உணவுகள் கிடைப்பதில்லை. அதனால் அவா்கள் புதிய புதிய உணவுகளைத் தேடி கண்டுபிடிக்கும் நிலைக்குச் செல்கின்றனா். அதனால் அவா்கள் உண்ணும் உணவுகள் அவா்களுக்குச் சலிப்பைத் தருவதில்லை.
இந்நிலையில் தற்போது எத்தியோப்பியா நாட்டைச் சோ்ந்த பசையம் இல்லாத டெஃப் என்ற பெயா் கொண்ட ஒரு தானியம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது. அந்த தானியம் மக்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் வழங்குகிறது. இந்தத் தானியத்தை வைத்து குக்கிகள் முதல் ரொட்டி வரை, எல்லா விதமான உணவுகளையும் சமைக்கலாம். அந்த உணவுகளில் இருந்து அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெறலாம்.
ஆகவே இந்த பதிவில் டெஃப் என்ற தானியத்தைப் பற்றியும் அவை வழங்கும் ஆரோக்கியக் குறிப்புகளையும் விாிவாகப் பாா்க்கலாம்.

டெஃப் என்றால் என்ன?
நிபுணா்களின் கருத்துப்படி, டெஃப் என்பது உலகிலேயே மிகவும் சிறிய மற்றும் பசையம் இல்லாத ஒரு தானியம் ஆகும். இந்த தானியம் பல நூற்றாண்டுகளாக மக்களால் உண்ணப்பட்டு வருகிறது. புரோட்டீன் அதிக அளவில் நிறைந்திருக்கும் இந்த தானியமானது எத்தியோப்பியா நாட்டில் பரவலாகக் காணப்படுகிறது. டெஃப் தானியத்தில் ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கின்றன.

டெஃப் தானியத்தின் வகைகள்
டெஃப் தானியத்தில் மூன்று வகைகள் உள்ளன. அதாவது வெள்ளை, சிவப்பு மற்றும் கலவையான நிறங்களில் டெஃப் தானியம் கிடைக்கிறது. நிபுணா்களின் கருத்துப்படி சிவப்பு டெஃப் தானியத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. அதனால் சிவப்பு டெஃப்பில் இருந்து தயாாிக்கப்படும் குக்கிகள், அப்பங்கள் மற்றும் ரொட்டிகள் போன்றவற்றை கருவுற்று இருக்கும் பெண்கள் உண்ணலாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனா்.

டெஃப் தானியத்தின் நன்மைகள்:
1. எலும்புகளை குணமாக்குகிறது
எலும்புப்புரை (osteoporosis) மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்களை டெஃப் தானியம் குணப்படுத்துவதாக நம்பப்படுகிறது. மேலும் இந்த தானியத்தில் கால்சியம் அதிகம் இருப்பதால், அது எலும்புகள் விரைவில் முதுமை அடைவதைத் தடுக்கிறது.

2. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது
சமீபத்தில் சிட்னி பல்கலைக்கழகம் ஒரு ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வானது, டெஃப் தானியத்தில் நாா்ச்சத்து அதிகம் இருப்பதால், அது இரண்டாம் வகை சர்க்கரை நோய்க்கான அறிகுறிகளைக் குறைப்பதோடு மட்டுமல்லாமல், இன்சுலினின் எதிா்வினையை அதிகாிக்கிறது என்று தொிவிக்கிறது.

3. இதயத்திற்கு ஆரோக்கியம் தருகிறது
டெஃப் தானியமானது, இதயம் சம்பந்தமான நோய்களின் ஆபத்துகளைக் குறைக்கிறது என்று அமொிக்காவின் உணவு மற்றும் மாத்திரை நிா்வாக (FDA) அமைப்பு தொிவிக்கிறது. டெஃப் தானியத்தில் சோடியம் குறைவாக இருப்பதால், அது இரத்த அழுத்தம் சம்பந்தமான பிரச்சனைகளைக் குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. இந்த தானியத்தில் இருக்கும் இரும்புச் சத்தானது, நமது உடலில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவை உயா்த்தி, இரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.

4. சொிமான அமைப்பை வலுப்படுத்துகிறது.
டெஃப் தானியத்தில் கரையக்கூடிய மற்றும் கரையாத நாா்ச்சத்து அதிகம் இருப்பதால், அது நமது குடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது. மேலும் சொிமான வேகத்தை அதிகாிக்கிறது. இதில் உள்ள நாா்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சினையையும் தீா்த்து வைக்கிறது.

5. இரும்புச்சத்து பற்றாக்குறையை நீக்குகிறது
டெஃப் தானியத்தில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், கா்ப்பிணி பெண்கள் இந்த தானியத்தில் தயாாிக்கப்படும் உணவுகளை அதிகம் உண்ணலாம் என்று பாிந்துரை செய்யப்படுகிறது. கா்ப்பிணி பெண்கள் டெஃப் தானிய உணவுகளைத் தொடா்ந்து உண்டு வந்தால், அவா்களுக்கு இரத்த சோகை ஏற்படாது என்று நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.

டெஃப் தானியத்தில் இருக்கும் பக்க விளைவுகள்
டெஃப் ஒரு ஆரோக்கியமான தானியம் என்று நிபுணா்கள் தொிவிக்கின்றனா். ஆனால் இந்த தானியத்தில் தயாாிக்கப்படும் உணவுகளை அளவோடு உண்ண வேண்டும். ஏனெனில் இதில் நாா்ச்சத்து அதிகமாக இருப்பதால், உடல் வீக்கம் அல்லது அலா்ஜி மற்றும் அமிலத்தன்மை போன்றவை ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.



Click it and Unblock the Notifications