Just In
- 2 hrs ago
அமேசானில் அட்டகாசமான தள்ளுபடியில் வேக்யூம் கிளீனர்கள்.. ஸ்டாக் முடிவதற்குள் சீக்கிரம் வாங்குங்க...
- 3 hrs ago
மழைக்காலத்துல உங்களுக்கு எந்த நோயும் வராமல் இருக்க இந்த புரத உணவுகள சாப்பிட்டா போதுமாம்!
- 3 hrs ago
பற்களில் இருக்கும் அசிங்கமான மஞ்சள் கறையை நிரந்தரமாக நீக்க இந்த சமையலறை பொருட்களே போதுமாம் தெரியுமா?
- 4 hrs ago
வடகறி ரெசிபி
Don't Miss
- News
மகாராஷ்டிரா அமைச்சரவையில் அனைவரும் குபேரர்கள்! ஆனால் 20ல் 15 பேர் மீது கிரிமினல் வழக்கு! பரபர தகவல்
- Finance
ஐஆர்சிடிசி பங்கினை வாங்க பரிந்துரை செய்த நிபுணர்கள்.. உங்ககிட்ட இருக்கா?
- Movies
நடிக்கறதுக்கு முன்னாடி கார்த்திக்கு சூர்யா கொடுத்த அட்வைஸ்.. அதுதான் கார்த்திக்கு இன்ஸ்பிரேஷனாம்!
- Automobiles
ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... மஹிந்திரா தார் காரைவிட அதிக விலை!
- Travel
டெல்லியிலிருந்து பல ஆன்மீக ஸ்தலங்களுக்கு பயணம் – IRCTC இன் அட்டகாசமான டூர் பேக்கேஜ் – விவரங்கள் இதோ!
- Sports
எல்லை மீறி செல்லும் ஊர்வசி - ரிஷப் பண்ட் சண்டை.. யார் கூறுவது உண்மை?.. இணையத்தில் வெடிக்கும் போர்!!
- Technology
ஒரே சார்ஜிங்கில் 25 நாள் யூஸ் பண்ணலாம்: Vivo அறிமுகம் செய்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்!
- Education
இரண்டாவது பெரிய துறைமுகத்தில் பணி வாய்ப்பு?
ஒரு வாரம் தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி ஜூஸைக் குடிப்பதால் உடலில் நிகழும் அற்புதங்கள்!
தற்போது பலருக்கும் ஆரோக்கியத்தின் மீது, உணவுகளின் மீதான அக்கறையும் அதிகரித்துள்ளது. அதில் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்காக பலர் தங்களின் உணவு பழக்கவழக்கங்களில் மாற்றங்களை செய்து வருகின்றனர். அதில் ஒன்று ஆரோக்கியமான பானங்களைத் தயாரித்து குடிப்பது. நாம் தினமும் சமையலறையில் பயன்படுத்தும் ஓர் மருத்துவ குணம் நிறைந்த பொருள் தான் இஞ்சி. இந்த இஞ்சி பல ஆண்டுகளாக இயற்கை வைத்தியத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக இஞ்சியைக் கொண்டு இன்று பலர் ஜூஸ் தயாரித்துக் குடிக்கிறார்கள். அதுவும் உடல் ஆரோக்கியத்திற்காக பலரும் காலையில் எழுந்ததும் சில பானங்களைக் குடிக்கிறார்கள். அதில் ஒன்று தான் இஞ்சி சாறு. இந்த இஞ்சி சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் ஏராளமான நன்மைகள் உடலுக்கு கிடைக்கிறது. அவை என்னவென்பதை இப்போது காண்போம்.

இஞ்சியில் உள்ள சத்துக்கள்
இஞ்சியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் போன்றவை அதிகம் உள்ளன. அதுவும் இஞ்சியின் பெரும்பாலான ஆரோக்கிய நன்மைகள் ஜிஞ்சரால் மூலம் தான் கிடைக்கிறது. ஏனெனில் ஜிஞ்சரால் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிரிகளுக்கு எதிரான உயிரியல் சேர்மங்களைக் கொண்டுள்ளது.

இஞ்சி ஜூஸ் தயாரிப்பது எப்படி?
இஞ்சி ஜூஸ் தயாரிப்பதற்கு, மிக்சர் ஜாரில் இஞ்சி துண்டுகளை போட்டு அரைத்து, அதை வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் எலுமிச்சை சாறு, சுவைக்கேற்ப தேன் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து கலந்தால், இஞ்சி ஜூஸ் தயார். ஒரு டம்ளர் இஞ்சி ஜூஸைக் குடிப்பதால், உடலுக்கு வேண்டிய சத்துக்களை ஒரே டம்ளரில் பெறலாம். ஏனெனில் இந்த ஒரு டம்ளர் இஞ்சி ஜூஸில் ஜிங்க், பாஸ்பரஸ், வைட்டமின் பி, பி3, பி6, புரோட்டீன்கள் மற்றும் டயட்டரி நார்ச்சத்துக்கள் போன்றவை நிறைந்துள்ளன.
இப்போது இந்த இஞ்சி ஜூஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிப்பதால் பெறும் நன்மைகள் என்னவென்பதைப் பார்க்கலாம்.

குமட்டல் சரியாகும்
இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் குமட்டல் மற்றும் அஜீரணம் போன்ற வயிற்றுப் பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது. எனவே கர்ப்பிணிப் பெண்கள் காலையில் குமட்டல் உணர்வை அதிகம் சந்திப்பவராயின், இந்த இஞ்சி ஜூஸைக் குடிக்கலாம். இது வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நல்லது மற்றும் பாதுகாப்பானதும் கூட.

மாதவிடாய் வலி நீங்கும்
இஞ்சியில் உள்ள ஜிஞ்சரோல்ஸ், ஷோகோல் மற்றும் பராடோல் போன்ற பொருட்கள் மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் வயிற்று வலி மற்றும் தசை வலியில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. எனவே உங்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிக வயிற்று வலி ஏற்படுமானால், இந்த இஞ்சி ஜூஸை தினமும் குடியுங்கள்.

மூட்டு வலி
இஞ்சியில் காணப்படும் உட்பொருட்கள் ஆர்த்ரிடிஸ் நோயாளிகள் சந்திக்கும் கடுமையான மூட்டு வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும். மேலும் அடிக்கடி தலைவலியை சந்திப்பவர்களுக்கும் இந்த இஞ்சி ஜூஸ் நல்லது.

ஆற்றலை வழங்கும்
நீங்கள் எப்போதும் சோர்வுடன் இருப்பதை உணர்கிறீர்களா? அப்படியானால் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடியுங்கள். இது உடலுக்கு ஆற்றலை வழங்குவதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மற்றும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

அஜீரண கோளாறு சரியாகும்
வயிற்று வலி, அசிடிட்டி மற்றும் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகள் தற்போதைய தலைமுறையினரிடம் காணப்படுகிறது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி ஜூஸை குடித்து வந்தால், செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்படுவதோடு, உடலின் மெட்டபாலிசமும் மேம்படும்.

இரத்த சர்க்கரை மற்றும் பிபி கட்டுப்படும்
சர்க்கரை நோயாளிகள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி ஜூஸை குடிப்பது மிகவும் நல்லது. ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். மேலும் இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி இதய நோய் வராமல் தடுக்கும்.