For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒயின்-ல இத்தனை வகையா? அதுல இவ்வளவு நன்மை இருக்கா? உங்களுக்கு எந்த ஒயின் பிடிக்கும்?

ஒயினில் ரெட் ஒயின் மற்றும் ஒயிட் ஒயினைத் தவிர, இன்னும் பல்வேறு வகையான ஒயின்கள் உள்ளன என்பது தெரியுமா? மேலும் இந்த ஒயின்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டவை.

|

தற்போது மது அருந்துவது சாதாரணமான ஒன்றாகிவிட்டது. ஆண்கள், பெண்கள் என இருபாலருமே மது அருந்துகிறார்கள். மதுவில் பல வகைகள் உள்ளன. அதில் ஆரோக்கியமான ஒன்றாக ஆய்வுகளில் எல்லாம் நிரூபிக்கப்பட்டிருப்பது ஒயின். இந்த ஒயினானது திராட்சைகளால் ஆனது. இந்த ஒயினிலும் பல வகைகள் உள்ளன.

Health Benefits Of Different Types Of Wine In Tamil

அதில் நமக்கு தெரிந்தது ரெட் ஒயின் மற்றும் ஒயிட் ஒயின் ஆகும். இதில் ரெட் ஒயின் சிவப்பு அல்லது கருப்பு திராட்சைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது மற்றும் ரெட் ஒயினைத் தயாரிக்கும் போது திராட்சைகளானது தோலுடன் சேர்த்து நொதிக்க வைக்கப்படுகிறது. இது தான் ஒயினிற்கு சிவப்பு நிறத்தை அளிக்கிறது. ஒயிட் ஒயின் தோல் நீக்கப்பட்ட திராட்சைகளின் சாற்றினை புளிக்க வைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.

ஒயினில் ரெட் ஒயின் மற்றும் ஒயிட் ஒயினைத் தவிர, இன்னும் பல்வேறு வகையான ஒயின்கள் உள்ளன என்பது தெரியுமா? மேலும் இந்த ஒயின்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டவை. கீழே ஒயினின் வகைகளும், அவை வழங்கும் நன்மைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரெட் ஒயின்

ரெட் ஒயின்

ரெட் ஒயினில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் நிரம்பியுள்ளது. இந்த ரெட் ஒயினை ஒருவர் மிதமான அளவில் குடித்து வந்தால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என பல ஆய்வுகள் கூறுகின்றன.

ட்ரை ரெட் ஒயின்

ட்ரை ரெட் ஒயின்

நாம் ஏற்கனவே ரெட் ஒயினின் நன்மைகளைப் பற்றி பார்த்தோம். இந்த ரெட் ஒயினிலும் சில வகைகள் உள்ளன. அவை ட்ரை ரெட் ஒயின் மற்றும் ஸ்வீட் ரெட் ஒயின். இவை இரண்டையும் மிதமான அளவில் குடித்து வந்தால், ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் இவற்றில் பாலிஃபீனால்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளன.

ட்ரை ஒயிட் ஒயின்

ட்ரை ஒயிட் ஒயின்

ஒயிட் ஒயினில் ஒரு வகையான ட்ரை ஒயிட் ஒயின் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. அதுவும் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு டம்ளர் ட்ரை ஒயிட் ஒயினைக் குடிப்பது, குடலியக்கத்திற்கு நல்லது, குடல் புற்றுநோய் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

ஆரஞ்சு ஒயின்

ஆரஞ்சு ஒயின்

ஆரஞ்சு ஒயின் பொதுவானது அல்ல. ஆனால் மெதுவாக மக்களிடையே பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம் அதில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் தான். ஏனெனில் இந்த ஆரஞ்சு ஒயினில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. இது வீக்கத்தைக் குறைப்பதோடு, இதய நோய்கள் மற்றும் குறிப்பிட்ட புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

ஸ்வீட் ஒயிட் ஒயின்

ஸ்வீட் ஒயிட் ஒயின்

ஒயிட் ஒயின் வகையைச் சேர்ந்த ஸ்வீட் ஒயிட் ஒயின் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால், இது இதயத்திற்கு நல்லது. மேலும் இது இரத்த சர்க்கரையை சமநிலைப்படுத்துவது, மூளையின் செயல்பாட்டை அதிகரிப்பது மற்றும் சளி பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிப்பது போன்ற பல நன்மைகளை வழங்குகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Different Types Of Wine In Tamil

Here are some health benefits of different types of wine. Read on to know more...
Story first published: Thursday, November 24, 2022, 18:46 [IST]
Desktop Bottom Promotion