For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இருமல், சளியில் இருந்து உடனடியாக விடுபட பண்டைய காலத்தில் பயன்படுத்திய பொருள் இதுதாங்க...

|

யாருக்கு தான் தேன் பிடிக்காது? குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடும் மருத்துவ குணம் நிறைந்த பொருட்களில் ஒன்று தான் தேன். தேனில் பல்வேறு வகைகள் உள்ளன. யூகலிப்டஸ் தேன், மனுகா தேன் போன்ற தேன் வகைகளை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். தேன்கள் பல வகைப்பட்டாலும், அவற்றில் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஒவ்வொரு வகை தேனிலும் ஒவ்வொரு வகையான ஊட்டச்சத்து நிறைந்துள்ளது. பல ஆண்டுகளாகவே தேன் மருத்துவ நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

MOST READ: இப்படி தலைவலி இருந்தா அதுக்கு கொரோனா-ன்னு அர்த்தம்... எச்சரிக்கையா இருங்க...

உங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தொண்டை புண் மற்றும் பல உடல்நலப் பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் தேன் பெரிதும் உதவுகிறது. ஒவ்வொரு வகையான தேனின் சுவையும், நிறமும் மற்றும் குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்களும் அவற்றின் பூக்களின் பண்புகளைப் பொறுத்ததாகவே அமைகிறது. இது மட்டுமல்லாமல், ஒரு நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர் என்றும் கூட தேன் அழைக்கப்படுகிறது.

MOST READ: உலகிலேயே மிகவும் மோசமான பேரழிவை உண்டாக்கிய டாப் 10 சூறாவளிகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளை தேனில் உள்ள சத்துக்கள்

வெள்ளை தேனில் உள்ள சத்துக்கள்

வெள்ளை தேனில் கலோரிகள் அதிகம் நிறைந்துள்ளன. அதுதவிர, இதில் வைட்டமின் பி, மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் மறைந்துள்ளன. இது ஆக்ஸிஜனேற்றிகளின் மிகப் பெரிய மூலமாகவும் கருதப்படுகிறது. வெள்ளை தேனானது கிரீம் மாதிரியானது அல்ல. ஆனால் வழக்கமான தேனை விட மிகவும் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

வாருங்கள் இப்போது, வெள்ளை தேன் என்றால் என்ன? அதன் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் பற்றி சற்று விரிவாக தெரிந்து கொள்வோம்...

வெள்ளை தேன் என்றால் என்ன?

வெள்ளை தேன் என்றால் என்ன?

வெள்ளை தேன், மூல தேன் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது நேரடியாக தேனீக்களின் கூடுகளில் இருந்து வருபவை. தேனை பிரித்தெடுப்பதற்கென எந்தவொரு வெப்ப செயல்முறைகளும் வெள்ளை தேனில் பயன்படுத்தப்படாது. வெப்பமாக்கல் செயல்முறையின் மூலமாக சில நன்மை பயக்கும் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பாக்டீரியாக்கள் நீக்கப்படுகின்றன. அதனால்தான் வெள்ளை தேன், சாதாரண தேனை விட மிகவும் ஆரோக்கியம் நிறைந்ததாகவும், மதிப்புமிக்கதாகவும் கருதப்படுகிறது. வெள்ளை தேனை உற்பத்தி செய்யும் மலர்களில் செட்ஜ், அல்பால்ஃபா மற்றும் வெள்ளை க்ளோவர் ஆகியவை அடங்கும். எல்லா பருவங்களிலும் எல்லா பூக்களிலிருந்தும் வெள்ளை தேன் பெறப்படுவதில்லை.

வெள்ளை தேனை உட்கொள்வதால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள்

வெள்ளை தேனை உட்கொள்வதால் ஏற்படக்கூடிய பக்கவிளைவுகள்

வெள்ளை தேன் அதிலிருக்கக்கூடிய சில நுண்ணுயிர் உள்ளடக்கத்தின் காரணமாக சில ஆபத்துகளையும் கொண்டுள்ளது. இது பக்கவாதத்திற்கு வழிவகுக்கக்கூடிய, கடுமையான போட்யூலிசத்தை ஏற்படுத்தக்கூடும். குழந்தைகளுக்கு, குறிப்பாக 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, வெள்ளை அல்லது வேறு எந்த வகை தேனையும் கொடுக்கவே கூடாது. பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் வெள்ளை தேனை உட்கொண்டால் நோய்வாய்ப்படுவதற்கான ஆபத்து அதிகம். பெரியவர்களில், ஃபுட் பாய்சன், காய்ச்சல் மற்றும் வாந்தி, குமட்டல் போன்ற அறிகுறிகளையும் இது ஏற்படுத்தக்கூடும். வெள்ளை தேன் சாப்பிட்ட பிறகு, இது போன்ற அறிகுறிகள் ஏதேனும் உணர்ந்தால் உடனடியாக உங்களது மருத்துவரை அணுகுங்கள்.

வெள்ளை தேனின் ஆரோக்கிய நன்மைகள்:

வெள்ளை தேனின் ஆரோக்கிய நன்மைகள்:

ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளின் சக்திகூடம்

வெள்ளை தேனில் ஃப்ளேவோனாய்டுகள் மற்றும் ஃபீனோலிக் எனப்படும் கலவைகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைய உள்ளன. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களுடன் சண்டையிடவும், செல் சேதத்திலிருந்து பாதுகாக்கவும் உதவுகின்றன. ஃப்ரீ ரேடிக்கல்கள் வயதான செயல்முறைக்கு பங்களிப்பதோடு, புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற பிரச்சனைகளின் அபாயத்தையும் அதிகரிக்கும்.

செரிமான பிரச்சனைகளுக்கு உதவும்

செரிமான பிரச்சனைகளுக்கு உதவும்

வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று புண்கள் போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க வெள்ளை தேன் பெரிதும் உதவுகிறது. இது உங்கள் வயிற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உங்களது செரிமான செயல்முறைகளையும் ஆதரிக்கிறது. காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 1 முதல் 2 டீஸ்பூன் வெள்ளை தேனை எடுத்துக் கொள்ளுங்கள். இது வயிற்று வலிக்கு நிவாரணம் அளித்து, அந்த வலியை குணப்படுத்தும் செயல்முறைக்கும் உதவிடும்.

காயம் குணப்படுத்துதல், சருமத்தை மேம்படுத்துதல்

காயம் குணப்படுத்துதல், சருமத்தை மேம்படுத்துதல்

வெள்ளை தேனில் பைட்டோநியூட்ரியண்ட்ஸ் உள்ளன. இந்த தேன் சருமத்தை அழகுபடுத்தவும், தோல் காயங்களை குணப்படுத்தவும் பெரிய பங்களிப்பினை வழங்குகிறது. நீங்கள் பயன்படுத்தும் அழகு சாதனங்களிலும் கூட இதை ஒரு மூலப்பொருளாகப் பயன்படுத்தலாம். வெள்ளை தேன் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாகள் மற்றும் பூஞ்சைகளை அழிக்கக்கூடும் என்பதால் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அழகை கூட்டிட உதவும்.

இருமலுக்கான நிவாரணம்

இருமலுக்கான நிவாரணம்

இருமல் மற்றும் சளிக்கு நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் வீட்டு வைத்தியங்களில் ஒன்று தான் இந்த வெள்ளை தேன். இது தொண்டை புண்ணை உடனடியாக சரி செய்திட உதவும். அதற்காக, சூடான தேநீரில் எலுமிச்சையுடன் தேனை கலந்து குடிக்கலாம் அல்லது வெதுவெதுப்பான நீரில் தேனை கலந்து உட்கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health Benefits And Side Effects Of Consuming White Honey

Here are some health benefits and side effects of consuming white honey. Read on...