For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த காய்கறி & பழங்களை எடுத்துக்கிட்டா... உங்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படாதாம் தெரியுமா?

ஆப்பிள் பழத்தில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது மற்றும் இது ஆரோக்கியமான உணவு விருப்பமாகும். எனவே, தினமும் ஒரு ஆப்பிளை அதன் தோலுடன் சேர்த்து சாப்பிடுங்கள்.

|

மனித உடலுக்கு ஒவ்வொரு ஊட்டச்சத்தும் மிக அவசியம். ஏனெனில், ஒவ்வொரு ஊட்டச்சத்துக்களும் நம் உடல் செய்லபாடோடு மற்றும் ஆரோக்கியத்தோடு இணைந்துள்ளது. அந்த வகையில், இரும்புச்சத்து உங்கள் உடலுக்கு மிக அவசியம். ஏனெனில், இரும்புச்சத்து குறைப்பாட்டால் உங்கள் எலும்பு ஆரோக்கியம் பாதிக்கப்படுவதோடு, உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை என்பது இந்தியா போன்ற வளரும் நாடுகள் காலங்காலமாக போராடி வரும் ஒரு பிரச்சனையாகும். தேசிய ஊட்டச்சத்து இரத்த சோகை தடுப்பு திட்டம் இருந்தபோதிலும், நம் நாட்டில் லட்சக்கணக்கான பெண்கள் மற்றும் வளரும் குழந்தைகள் இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர்.

Fight iron deficiency with these winter fruits and veggies in tamil

இது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. இந்த குளிர்காலத்தில், இரும்புச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உங்கள் உணவில் சேர்ப்பது இரும்புச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராட உதவும். அவை என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல்நலப் பிரச்சனைகள்

உடல்நலப் பிரச்சனைகள்

மூச்சுத்திணறல்

விரைவான சோர்வு

ரெஸ்ட்லெஸ் லெக் சிண்ட்ரோம்

பசியின்மை

மோசமான செறிவு

முடி உதிர்தல்

உடையக்கூடிய நகங்கள்

படபடப்பு

இரும்புச்சத்து தேவை

இரும்புச்சத்து தேவை

நம் உடலுக்கு இரும்பச்சத்து மிகவும் முக்கியம். அதனால், இரும்புச்சத்து நிறைந்ந உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் இன்றியமையாதது. குளிர்காலம் என்பது இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் எல்லா இடங்களிலும் ஏராளமாகக் கிடைக்கும் காலமாகும். எனவே, உங்கள் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும் என்பது பற்றி நாம் தெரிந்திருக்க வேண்டும். குளிர்காலத்தில் இரும்புச்சத்து நிறைந்த சில சூப்பர்ஃபுட்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

பீட்ரூட்

பீட்ரூட்

பீட்ருட் இரும்பு மற்றும் வைட்டமின்களின் சிறந்த மூலமாகும். குறிப்பாக வைட்டமின் சி இதில் அதிகம் உள்ளது. பீட்ரூட்டில் புரதங்கள், கால்சியம் மற்றும் சுவடு தாதுக்கள் நிரம்பியுள்ளன. இதனால், இரத்த சோகை உள்ளவர்களுக்கு பீட்ரூட் சாறு சிறந்தது.

கீரை

கீரை

கீரையில் இரும்பு மற்றும் பிற வைட்டமின்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக வைட்டமின் சி, ஏ, கே மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளது. இது நமது கண்கள் மற்றும் எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதுடன் உயர் இரத்த அழுத்தத்தையும் நிர்வகிக்க உதவும்.

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி

ப்ரோக்கோலி பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இது இரும்புச்சத்து, வைட்டமின்கள் பி மற்றும் சி ஆகியவற்றை நமக்கு வழங்குகிறது. இந்த சூப்பர்ஃபுட் மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும் மற்றும் அதிக இரத்த சர்க்கரை பிரச்சனை உள்ளவர்களுக்கும் சிறந்தது.

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸில் இரும்புச்சத்து தவிர, வைட்டமின் பி6 மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. மேலும், இது நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளது.

மாதுளை

மாதுளை

உங்கள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும் சிறந்த உணவுகளில் ஒன்று மாதுளை. இதில் வைட்டமின் சி நிறைய உள்ளது. நார்ச்சத்து, கால்சியம் மற்றும் புரதச்சத்தும் இதில் நிறைந்துள்ளது.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிள் பழத்தில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது மற்றும் இது ஆரோக்கியமான உணவு விருப்பமாகும். எனவே, தினமும் ஒரு ஆப்பிளை அதன் தோலுடன் சேர்த்து சாப்பிடுங்கள்.

ஆரஞ்சு

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. ஆனால், இது இரும்புச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராட உதவுகிறது. உடல் எடையை குறைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், அழகான சருமத்தைப் பெறவும் ஆரஞ்சு பழத்தை தினமும் சாப்பிடுங்கள்.

இறுதி குறிப்பு

இறுதி குறிப்பு

கோவிட்-19 தொற்று பரவியதற்கு பிறகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உண்பதன் முக்கியத்துவத்தை நம் அனைவருக்கும் உணர்ந்துள்ளோம். கோவிட்-19 அல்லது வேறு ஏதேனும் நோயை எதிர்த்துப் போராட நல்ல ஹீமோகுளோபின் இருப்பது மிகவும் முக்கியம். எனவே, இந்த குளிர்காலத்தில், இந்த ஆரோக்கியமான உணவுகளுடன் இரும்புச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராட மேலே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை சாப்பிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Fight iron deficiency with these winter fruits and veggies in tamil

Here we are talking about the Fight iron deficiency with these winter fruits and veggies in tamil.
Story first published: Tuesday, December 13, 2022, 18:25 [IST]
Desktop Bottom Promotion