For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்தால் ஆயுள் குறையும் - ஏன் தெரியுமா?

|

இப்பொழுதெல்லாம் உடற்பயிற்சி செய்வதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, பெரும்பாலானோர் தினசரி உடற்பயிற்சி கூடத்திலோ அல்லது வீட்டிலிருந்தபடியோ உடற்பயிற்சி செய்கின்றனர். உடற்பயிற்சி செய்வது நம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கக்கூடிய ஒரு செயல் என்று நாம் எல்லோரும் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் அதிலும் சில பாதகங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதை பற்றி நாம் இந்த கட்டுரையில் விரிவாக காணப் போகிறோம்.

MOST READ: வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பைக் குறைத்து தட்டையான வயிற்றை பெற வாக்யூம் உடற்பயிற்சி செய்யுங்க...

நம் உடல் உறுதியாக இருப்பதற்கும் உடல் உறுப்புகள் சிறப்பான முறையில் இயங்குவதற்கும் உடற்பயிற்சி செய்வது மிக அவசியமாகும். ஆனால் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதால் நிறைய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நம் முன்னோர்கள் கூட இதைத்தான் 'அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு' என்கின்றனர். உங்களுக்கு உடற்பயிற்சி செய்வது பிடித்தால், அளவுக்கு அதிகமாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் ஒரு ஆய்வின் படி இவ்வாறு அதீத உடற்பயிற்சி செய்வது ஒருவரின் வாழ்நாளை குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

MOST READ: இந்த உடற்பயிற்சியை தினமும் செய்தால் விறைப்புத்தன்மை பிரச்சனை சீக்கிரம் சரியாகும் தெரியுமா?

நீங்கள் எப்போதும் உடற்பயிற்சியின் நன்மைகளை மட்டுமே கேட்டு இருந்திருக்கலாம், அதன் மிகவும் அபாயகரமான தீங்குகளைப் பற்றி உங்களுக்கு யாரும் கூறியிருக்க மாட்டார்கள். நெடு நேரம் உடலை வருத்தி உடற்பயிற்சி செய்வதால் தசைகள் இறுகி நல்ல கட்டுமஸ்தான வடிவத்தை கொடுக்கலாம். ஆனால் அவ்வாறு செய்வதால் உங்கள் வாழ்நாளில் சில வருடங்களை உங்களை அறியாமலேயே நீங்கள் குறைத்து கொள்கிறீர்கள்.

MOST READ: உங்க தொப்பையை சும்மா அசால்ட்டா குறைக்கணுமா? அப்போ இந்த 5 உடற்பயிற்சிகளை தினமும் செய்யுங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடற்பயிற்சியால் வரும் நன்மை மற்றும் தீமைகள்

உடற்பயிற்சியால் வரும் நன்மை மற்றும் தீமைகள்

நம் எல்லோரும் தினசரி உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பயன்களைப் பற்றி நன்கு அறிந்திருப்போம். பெரிய அளவில் உடற்பயிற்சி செய்யவில்லை என்றாலும் தினசரி நடை பயற்சி செல்வது கூட பெரிய அளவில் நன்மை தரக்கூடியது. இவ்வாறு தினசரி உடற்பயிற்சி செய்வதால் நம் உடல் வலிமை அடைவது மட்டுமின்றி, உள்ளமும் மனமும் உளவியல் ரீதியாக மிகுந்த வலிமை அடைகிறது.

சிலர் வலுவான தசை மற்றும் உடலை உருவாக்க தீவிர உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். அடிப்படையில், உடற்பயிற்சி செய்வது பலவிதமான நன்மைகளைக் தரக்கூடியது. ஆனால் இவ்வாறு அதீதமாக உடற்பயிற்சி செய்வதில் ஒரு மறைமுக பிரச்சனை ஒன்று உள்ளது என்று ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

நீண்ட நேர உடற்பயிற்சி

நீண்ட நேர உடற்பயிற்சி

வெறித்தனமாக நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதால் உங்கள் ஆரோக்கியத்திற்கு ஒன்றும் ஆவதில்லை. ஆனால் உங்கள் வாழ்க்கையின் நாட்களை அது குறைக்கிறது. சிலருக்கு உடற்பயிற்சி செய்து உடலை கட்டுமஸ்தாக வைத்து கொள்ள அலாதி பிரியம் இருக்கும். அப்படிப்பட்ட ஒருவர் உடற்பயிற்சி கூடத்தில் சராசரியாக சுமார் ஐந்திலிருந்து ஆறு மணி நேரம் வரை தினசரி உடற்பயிற்சி செய்கிறார். அப்படிப்பட்டவர்களின் குறிக்கோள் ஒன்றே ஒன்றுதான், உடலை நல்ல ஒரு அமைப்பில் கொண்டு வருவது மற்றும் அழகாக இருப்பது. இப்படி இதை மட்டும் குறிக்கோளாக கொண்டு இருக்கும் ஒருவர் தன் வாழ்நாளைப் பற்றி துளியும் கூட சிந்திப்பதே இல்லை. பால்க்ரேவ் கம்யூனிகேஷன் என்று இதழ் நடத்திய ஆய்வின் முடிவு, நீண்ட நேர உடற்பயிற்சி ஒருவரின் ஆயட்காலத்தை எதிர்மறையாக தாக்கி குறைக்கிறது என்று கூறுகிறது.

அசுரத்தனமான உடற்பயிற்சியால் வரும் பிரச்சனைகள்

அசுரத்தனமான உடற்பயிற்சியால் வரும் பிரச்சனைகள்

ஜப்பான் நாட்டில் தொழில்முறை கபுக்கி கலைஞர்களிடம் ஒரு ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. கபுக்கி என்பது அசுரத்தனமான வீரியமிக்க அசைவுகளை கொண்ட ஒரு கலை. இந்த கபுக்கி கலைஞர்களிடம் நடந்த ஆய்வின் முடிவில், அவர்களின் ஆயுளானது மற்றவர்களை விட குறைந்த காலமே இருப்பது கண்டறியப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள், தங்கள் ஆய்வில் கடுமையான செயல்களை செய்பவர்களின் ஆயட்காலத்தை, மிதமான செயல்கள் செய்பவர்களின் ஆயட்காலத்தோடு ஒப்பிட்டு பார்த்து மேற்சொன்ன முடிவுக்கு வந்தார்கள். இந்த ஆய்வு முடிவு பெரும்பாலானோர்க்கு பேரதிர்ச்சியாக இருந்தது. ஏனென்றால், பெரும்பான்மையானோர் உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்து நீண்ட நாட்கள் வாழலாம் என்று தவறாக எண்ணிக் கொண்டிருந்தார்கள். இந்த ஆய்வின் முடிவில் மிதமான அளவில் உடற்பயிற்சி செய்யும் பொழுது சிறப்பான பலன்களும், அதே சமயத்தில் அதிகபட்ச உடற்பயிற்சி பல சிக்கல்களையும் தரவல்லது என்றும் நிரூபணமானது.

சரி, ஒருவர் எவ்வளவு உடற்பயிற்சி செய்வது?

சரி, ஒருவர் எவ்வளவு உடற்பயிற்சி செய்வது?

ஒருவர் இத்தனை மணி நேரம்தான் உடற்பயிற்சி செய்யலாம் என்பது போன்ற ஒரு வரையறுக்கப்பட்ட அளவு நம்மிடம் இல்லை. இது உடலுக்கு அதிகமாக வேலையை கொடுப்பது பற்றிய ஒன்று. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான திறன் மற்றும் உடலமைப்பு இருக்கும். அதை பொறுத்து ஒருவர் உடற்பயிற்சி செய்ய வேண்டும். நீங்கள் தீவிர உடற்பயிற்சி செய்வதால் உங்களுக்கு உடனே பிரச்சனை ஏற்பட போவதில்லை, மாறாக பிற்காலத்தில் உங்கள் மூட்டுகளில் பிரச்சினை, தசை நார் கிழிவு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

முடிவு

முடிவு

மேலே சொன்ன மூட்டு மற்றும் தசை நார் பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? அப்படியென்றால் எப்பொழுதும் மிதமான தாக்கத்தை ஏற்படுத்த கூடிய மிதமான அளவிலான உடற்பயிற்சிகளை செய்யுங்கள். இவ்வாறு செய்வதாலும் உங்கள் உடலை உறுதியாகி ஆரோக்கியமாக வாழலாம். ஆனால் இதன் மூலம் இன்னொரு முக்கிய பலனும் உங்களுக்கு கிடைக்கிறது. ஆம், உங்களின் வாழ்நாள் பாதுகாக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Exercising Strenuously For Long Hours Can Shatter Your Dreams Of Living A Long Life

Exercising too much for long can make you live shorter. Moderate exercises or exercise in moderation is suggested by researchers.