Just In
- 2 hrs ago
Today Rasi Palan 04 February 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் யோசிக்காமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம்...
- 9 hrs ago
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- 10 hrs ago
ஆண்களே! உங்க அக்குள் பகுதி அசிங்கமா கருமையா மாறாம தடுக்க... நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
- 10 hrs ago
உங்க வீட்டில் செல்வம் அதிகம் சேர வேண்டுமா? அப்ப இந்த பொருட்களை வாங்கி வீட்டுல வையுங்க...
Don't Miss
- News
சாதரா சிட் பண்ட் பணமோசடி வழக்கு.. நளினி சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கம்! அமலாக்க துறை உத்தரவு
- Technology
108எம்பி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான ஒப்போ 5ஜி போன்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
- Movies
தளபதி 67 டைட்டில் லியோ... வெல்கம் ட்வீட் செய்த CSK.. விஜய் ரசிகர்களுக்கு அடுத்த சர்ப்ரைஸ்?
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
உங்களுக்கே தெரியாமல் நீங்க செய்யும் இந்த தவறுகள் உங்க சிறுநீரகத்தை செயலிழக்க வைக்குமாம் தெரியுமா?
நமது உடலில் 24 மணிநேரமும் வேலை செய்யும் உறுப்புகளில் முக்கியமானது சிறுநீரகம். உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் சிறுநீரகம் இன்றியமையாத உறுப்பாகும். இது உங்கள் இரத்தத்தை வடிகட்டுகிறது, கழிவுகளை நீக்குகிறது, உடலின் திரவ சமநிலையை கட்டுப்படுத்துகிறது மற்றும் எலக்ட்ரோலைட்டுகளின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.
ஒரு நாளைக்கு உடலின் இரத்தம் சிறுநீரகங்கள் வழியாக 40 முறை செல்கிறது. அதனால்தான் உங்கள் சிறுநீரகங்களை கவனித்துக்கொள்வது மற்றும் ஆரோக்கியமான தேர்வுகளை செய்வதன் மூலம் அவற்றைப் பாதுகாப்பது முக்கியம். ஆனால் சில பழக்கங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை மறைமுகமாக பாதிக்கும்.

அதிகப்படியாக புரதம் சாப்பிடுவது
புரதம் இரத்தத்தில் அதிக அளவு அமிலத்தை உருவாக்குகிறது, இது அமிலத்தன்மையை ஏற்படுத்தும், சிறுநீரகங்களால் போதுமான அமிலத்தை அகற்ற முடியாது, இது சிறுநீரகத்துடன் பல உறுப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும்.

அதிக உப்பு உட்கொள்வது
உப்பு அதிகம் உள்ள உணவுகளில் நிறைய சோடியம் உள்ளது, இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் சரியான நேரத்தில் சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கும். சமீபத்திய ஆய்வின் படி, அதிகப்படியான உப்பு சிறுநீரகத்தில் நேரடி திசு விளைவை ஏற்படுத்துகிறது, ஹைபர்டிராபி மற்றும் ஃபைப்ரோஸிஸைத் தூண்டுகிறது. அதிக உப்பு சிறுநீரகக் கற்களை உண்டாக்கும்.

அதிகளவு வலிநிவாரணிகளை எடுத்துக்கொள்வது
தொடர்ச்சியான தலைவலியானது சில வலிநிவாரணிகளை எடுத்துக்கொள்ள வைக்கலாம், ஆனால் அவற்றை அதிகமாகப் பயன்படுத்துவது சிறுநீரகத்திற்கு ஆபத்தானது. அவை உங்கள் வலிகளைத் தணிக்கும், ஆனால் சிறுநீரக புற்றுநோயையும் உண்டாக்கும். இன்டர்னல் மெடிசின் காப்பகங்களில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, வலி நிவாரணிகளின் நீண்டகால பயன்பாடு சிறுநீரக புற்றுநோயின் அபாயத்தை 50% அதிகரிக்கிறது.

பதப்படுத்தப்பட்ட உணவை அதிகமாக உண்பது
பதப்படுத்தப்பட்ட உணவு உங்களின் சுவை தேடலை பூர்த்தி செய்யலாம், ஆனால் அந்த உணவுகள் உண்மையில் உங்கள் சிறுநீரகங்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சோடியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகமாக இருப்பதால் சிறுநீரக நோய்க்கு வழிவகுக்கும்.

போதுமான தூக்கமின்மை
தூக்கம் உங்கள் உடலை புத்துயிர் பெற உதவுகிறது. உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு தூக்கம் முக்கியமானது. நீங்கள் சோர்வாக இருந்தால் உடனடியாக தூங்கச் செல்லுங்கள். சிறுநீரக செயல்பாடு தூக்க-விழிப்பு சுழற்சியால் கட்டுப்படுத்தப்படுகிறது, இது உறுப்பு 24x7 இன் பணிச்சுமையை ஒருங்கிணைக்க உதவுகிறது. குறைவான தூக்கம் சிறுநீரக செயல்பாட்டில் சரிவை ஏற்படுத்தும்.

அதிகளவு மது அருந்துதல்
சிறுநீரகத்தை ஆரோக்கியமாக பராமரிக்க மது அருந்துவதை கண்டிப்பாக குறைக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு கிளாஸ்களுக்கு மேல் மது அருந்துவது நாள்பட்ட சிறுநீரக நோயின் ஆபத்தை இரட்டிப்பாக்குகிறது என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது
சிறுநீரகங்களில் உள்ள திரவங்களின் ஓட்டத்தை சீராக்க போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியம். உடலில் நீரேற்றத்தை சரியான அளவில் பராமரிப்பது சிறுநீரகங்கள் நச்சுகளை வெளியேற்றும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உகந்த சிறுநீரக ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத தேவையாக உலக சுகாதார நிறுவனத்தால் பட்டியலிடப்பட்டுள்ளது.

அதிகளவு சர்க்கரை
சர்க்கரை ஒரு அமைதியான கொலையாளி மற்றும் உணவில் அதிகப்படியான சர்க்கரை நீரிழிவு, உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும், இது உங்கள் சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கலாம்.