Latest Updates
-
மசாலா பன் தோசையும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 30 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு கேட்டது கிடைக்கும் நாளாக இருக்குமாம் -
புதன் மேஷ ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
1/4 கப் வேர்க்கடலை இருந்தா தேங்காய் சேர்க்காத இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிந்தால் பலாத்காரமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
சனி-புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: மே மாதம் இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
1 கப் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஒருடைம் இந்தோனேஷியன் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் ட்ரை பண்ணுங்க.. -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை இதுதான்! -
உங்களுக்கு புற்றுநோய் வராம தடுக்கணுமா? இந்த பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கோங்க -
Mothers Day 2026: 50 வயதை எட்டிய ஒவ்வொரு தாய்மாரும் தினமும் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்!
ஆண்களே ஆண்மையை அதிகரிக்க வேண்டுமா? அப்ப மறக்காம இத படிங்க...
ஆண்கள் தங்களின் உணவுப் பழக்கவழக்கத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்தாலே, நிச்சயம் அனைத்துவிதமான வைட்டமின்களையும் பெறலாம்.
ஊட்டச்சத்துக்கள் என்று வரும் போது அதில் வைட்டமின்கள் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த வைட்டமின்களின் உதவியுடன் தான், உடலுக்குத் தேவையான சத்துக்களை முழுமையாக பெற முடியும். ஆனால் எதிர்பாராத விதமாக ஆண்கள் தங்களின் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துக்களைப் பெறுவதில்லை. இதன் விளைவாக ஆண்கள் ஊட்டச்சத்துக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு, பல முக்கியமான பாலியல் பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

எனவே தான் ஆண்கள் எப்போதும் தங்களின் டயட்டில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தங்களின் உணவுப் பழக்கவழக்கத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்தாலே, நிச்சயம் ஆண்கள் அனைத்துவிதமான வைட்டமின்களையும் பெறலாம். பொதுவாக இரண்டு வகையான வைட்டமின்கள் உள்ளன. ஒன்று கொழுப்பில் கரையும் வைட்டமின்கள், மற்றொன்று நீரில் கரையும் வைட்டமின்கள். இப்போது ஆண்களுக்குத் தேவையான முக்கியமான வைட்டமின்கள் எவையென்று காண்போம்.

வைட்டமின் சி
இந்த வைட்டமின் மிகவும் நல்லது. ஏனெனில் இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும் மற்றும் பாதிக்கப்பட்ட இணைப்புத்திசுக்கள், எலும்புகள், பற்கள் மற்றும் குருத்தெலும்புகளை சரிசெய்து பராமரிக்கும். மேலும் வைட்டமின் சி இரும்புச்சத்தை உறிஞ்சும் செயல்பாட்டில் முக்கிய பங்கை வகிக்கிறது. அதோடு இது ஆண்களின் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
ஒருவருக்கு போதுமான அளவு வைட்டமின் சி கிடைக்காவிட்டால், இரத்த சோகை அபாயம் அதிகரிக்கும்; பற்களை இழக்க நேரிடும்; மூட்டு வலி மற்றும் முடி உதிர்வு பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும்.

வைட்டமின் சி நிறைந்த உணவுகள்
* சிட்ரஸ் பழங்கள்
* குடைமிளகாய்
* ப்ராக்கோலி
* பசலைக்கீரை
* பெர்ரிப் பழங்கள்
* தக்காளி
* உருளைக்கிழங்கு
* முட்டைக்கோஸ்
* கிவிப் பழம்

வைட்டமின் ஏ
வைட்டமின் ஏ சருமம், மூக்கு மற்றும் உதடுகளின் வெளிப்புறத்திற்கு நல்லது. ஏனெனில் இது தான் நல்ல வடிவத்தைக் கொடுக்கிறது. அதுமட்டுமின்றி, இது பார்வையை மேம்படுத்தும் மற்றும் செரிமானம், சிறுநீரக பாதைகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
ஒருவரது உடலில் வைட்டமின் ஏ குறைவாக இருந்தால், மாலைக்கண் நோய் ஏற்படுவதோடு, வறட்சியான மற்றும் சொரசொரப்பான சருமத்தைப் பெறக்கூடும்.

வைட்டமின் ஏ நிறைந்த உணவுகள்
* கேரட்
* கல்லீரல்
* பால்
* வெண்ணெய்
* சீஸ்
* பசலைக்கீரை

வைட்டமின் டி
தசைகள், எலும்புகள் மற்றும் பற்களை வலிமையாக பராமரிப்பதற்கு வைட்டமின் டி சத்து மிகவும் முக்கியம். இது கால்சியம் சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. அதுமட்டுமின்றி, இது தசைகளின் இறுக்கம், எலும்புகளின் அடர்த்தி, சீரான இதயத் துடிப்பு மற்றும் நரம்புகளின் வழியே செய்திகளை கடத்துவது போன்றவற்றிற்கு அத்தியாவசியமானது.
வைட்டமின் டி குறைபாடு ஒரு குழந்தைக்கு ஏற்பட்டால், அது ரிக்கட்ஸ் என்னும் எலும்பு நோயை உண்டாக்கும். அதுவே பெரியோர்க்கு என்றால் எலும்பு மெலிவு நோயை ஏற்படுத்தும்.

வைட்டமின் டி நிறைந்த உணவுகள்
* பால்
* மீன் எண்ணெய்கள்
* வெண்ணெய்
* முட்டையின் மஞ்சள் கரு

வைட்டமின் கே
வைட்டமின் கே உடலுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இது இரத்த உறைவு திறனை உருவாக்குகிறது. மேலும் இது உங்கள் வெட்டுக்கள் மற்றும் காயங்களை குணப்படுத்த உதவுகிறது. ஒருவருக்கு வைட்டமின் கே குறைபாடு இருந்தால், சருமத்தில் சிறு கீறல் ஏற்பட்டாலும், இரத்தம் எளிதில் மிகவும் வேகமாக வெளியேறும்.

வைட்டமின் கே நிறைந்த உணவுகள்
* முட்டைக்கோஸ்
* ப்ராக்கோலி
* காலிஃப்ளவர்
* தில் ஊறுகாய்
* சோயா பீன்ஸ்
* கீரை வகைகள்

வைட்டமின் பி2
வைட்டமின் பி2 உணவுகளை ஆற்றலாக மாற்றும் செயல்பாட்டில் முக்கிய பங்கை வகிக்கிறது. மேலும் இது சரும ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும், கண் பார்வைக்கு நல்லது மற்றும் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
வைட்டமின் பி2 குறைபாடு ஒருவருக்கு இருந்தால், உதடுகளின் முனைகளின் வெடிப்புகள், தொண்டைப் புண், சரும அரிப்புக்கள், ஊதா நிறத்தில் நாக்கு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

வைட்டமின் பி2 நிறைந்த உணவுகள்
* பிரட்
* செரில்கள்
* பால் பொருட்கள்
* பச்சை இலைக் காய்கறிகள்
* சிக்கன்
* மீன்



Click it and Unblock the Notifications