For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க சாப்பிடும் இந்த உணவுகளில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளதாம்... இது மாரடைப்பை ஏற்படுத்துமாம்!

ஐஸ்கிரீம், கேக்குகள் மற்றும் பேஸ்ட்ரிகள் அனைத்திலும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளன. அத்துடன் இதில் சர்க்கரை, ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் ஏராளமான கலோரிகளும் நிறைந்துள்ளன.

|

கொலஸ்ட்ரால் என்பது மனித உடலில் காணப்படும் மெழுகு போன்ற பொருளைக் குறிக்கிறது. இது ஹார்மோன்கள், வைட்டமின் டி மற்றும் கொழுப்புகளை ஜீரணிக்க தேவையான பித்த உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லின் இன்றியமையாத அங்கமாகும். இது செல் சவ்வுகளுக்கு வலிமையையும் நெகிழ்வுத்தன்மையையும் அளிக்கிறது. கொலஸ்ட்ரால்கள் இரண்டு வகைகளாகும். ஒன்று எல்.டி.எல், இது பெரும்பாலும் "கெட்ட கொலஸ்ட்ரால்" என்று குறிப்பிடப்படுகிறது. ஏனெனில் இது தமனிகளில் பிளேக் கட்டமைப்புடன் தொடர்புடையது. மற்றொன்று ஹெச்.டி.எல், இது "நல்ல கொலஸ்ட்ரால்". இது உங்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.

Daily Food Items That May Be Causing High Cholesterol in tamil

இது உங்கள் உடலில் இருந்து அதிகப்படியான கொழுப்பை வெளியேற்ற உதவுகிறது. ஆனால், கெட்ட கொலஸ்ட்ரால், உங்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும். கெட்ட கொலஸ்ட்ரால் நிறைந்த சில அன்றாட உணவுப் பொருட்கள் உள்ளன. அத்தகைய உணவுகளை ஒருவர் அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அவை என்னென்ன உணவுகள் என்று இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பதப்படுத்தப்பட்ட இறைச்சி

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

பதப்படுத்தப்பட்ட இறைச்சி பெரும்பாலும் இறைச்சியின் கொழுப்புகளால் நிறைந்திருக்கும். இவற்றை நீங்கள் அதிகமாக உட்க்கொள்ளும்போது, அதிக அளவு கொலஸ்ட்ரால் மற்றும் நிறைவுற்ற கொழுப்பை பெறுகிறீர்கள். இது ஏற்கனவே அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்களின் இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஆதலால், இந்த உணவை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது.

 சிவப்பு இறைச்சி

சிவப்பு இறைச்சி

மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி உள்ளிட்ட சிவப்பு இறைச்சிகளில் பொதுவாக நிறைவுற்ற கொழுப்புகள் அதிகம் காணப்படுகின்றன. ஹாம்பர்கர்கள், விலா எலும்புகள், பன்றி இறைச்சி சாப்ஸ் மற்றும் ரோஸ்ட்கள் ஆகியவை இறைச்சியின் கொழுப்புகளாகும். ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் நிபுணர்களின் கூற்றுப்படி, இறைச்சியை முற்றிலுமாகத் தவிர்க்கக் கூடாது. எப்போதாவது சாப்பிடுவது ஆரோக்கியமானது. 3-அவுன்ஸ் பகுதி அளவிற்கு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். சர்லோயின், பன்றி இறைச்சி அல்லது பைலட் மிக்னான் போன்ற மெல்லிய கொழுப்பு உணவுகளை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், தோல் இல்லாத கோழி அல்லது வான்கோழி மார்பகம், மீன் மற்றும் பீன்ஸ் போன்ற நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் குறைவாக உள்ள புரதங்களுடன் இறைச்சியை மாற்ற வேண்டும்.

பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு

பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு

குக்கீகளும் ரொட்டியும் சுவையாக இருந்தாலும் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பவை. இந்த உணவில் அதிகளவு வெண்ணெய், சுவைக்காக சேர்க்கப்படும் பொருட்கள் மற்றும் சர்க்கரை சேர்க்கப்படுவது உங்கள் உடலுக்கு எந்த நன்மையையும் செய்யாது. குறிப்பாக இரத்தத்தில் ஏற்கனவே கொழுப்பின் அளவு அதிகரித்தவர்களுக்கு, இது ஆபத்தான சுகாதார நிலையை உருவாக்கலாம்.

வறுத்த உணவு

வறுத்த உணவு

வறுத்த மற்றும் பொரித்த உணவுகள் ஆற்றல் அடர்த்தி அல்லது கலோரி எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இது அவற்றை ஆரோக்கியமற்றதாக ஆக்குகிறது. அத்தகைய உணவுகளை ஏர் பிரையரில் தயாரிக்கவும் அல்லது ஆரோக்கியமான சமையல் எண்ணெயைப் பயன்படுத்தி சமைக்க வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

துரித உணவு

துரித உணவு

ஆய்வுகளின்படி, துரித உணவுகள் இதய நோய் மற்றும் உடல் பருமன் உள்ளிட்ட பல நாள்பட்ட சுகாதார நிலைகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன. துரித உணவுகளை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகமாகவும், தொப்பை கொழுப்பு அதிகமாகவும், வீக்கம் அதிகமாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இது உங்கள் உடல் எடையையும் அதிகரிக்கும்.

இனிப்புகள்

இனிப்புகள்

ஐஸ்கிரீம், கேக்குகள் மற்றும் பேஸ்ட்ரிகள் அனைத்திலும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளன. அத்துடன் இதில் சர்க்கரை, ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் ஏராளமான கலோரிகளும் நிறைந்துள்ளன. இவை பெரும்பாலும் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். அதே வேளையில், அவை உடல் பருமன், நீரிழிவு, இதய நோய் மற்றும் சில வகையான புற்றுநோய்களை உருவாக்குவதற்கு காரணமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Daily Food Items That May Be Causing High Cholesterol in tamil

Here we are talking about the Daily Food Items That May Be Causing High Cholesterol in tamil.
Story first published: Wednesday, August 10, 2022, 15:40 [IST]
Desktop Bottom Promotion