For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடம்பில் உள்ள ஆக்சிஜன் அளவை வீட்லயே சரிபார்க்கணுமா? அப்ப இந்த 6-நிமிட சோதனை செய்யுங்க...

கோவிட் தொற்று ஏற்பட்டதும், ஆரம்பத்திலேயே உடலில் உள்ள ஆக்சிஜன் அளவை கவனித்து வந்தால், இதைத் தவிர்க்கலாம். அதற்கு 6 நிமிட சோதனை பெரிதும் உதவியாக இருக்கும்.

|

இந்தியா தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை எதிர்த்துப் போராடுகிறது. ஒவ்வொரு நாளும் 4 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா வழக்குகுள் பதிவாகிக் கொண்டிருக்கின்றன. மோசமான சூழ்நிலையை தொடர்ந்து எதிர்கொண்டு வருவதால், முகமூடி அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கைகளை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களை மனதில் கொண்டு தவறாமல் பின்பற்ற வேண்டியது அவசியமானதாக உள்ளது. அதோடு நமது உடலையும் சரியாக கண்காணிக்க வேண்டும்.

Covid-19: Take This Six-Minute Test To Check Your Oxygen Levels

மேலும் ஒருவருக்கு கோவிட் -19 சோதனை தேவையா இல்லையா என்பதை அறிய, கொரோனா அறிகுறிகளுள் ஏதேனும் ஒன்றை நீங்கள் அனுபவித்தவுடன் உங்கள் உடல் வெப்பநிலையை சரிபார்த்துக் கொள்வது முதல் படிகளில் ஒன்றாகும். அடுத்த கட்டமாக நுரையீரலின் செயல்பாட்டை சரிபார்க்க வேண்டும். அதற்கு 6 நிமிட சோதனை கொண்டு வீட்டிலேயே சோதிக்கலாம்.

MOST READ: இந்த பிரச்சனை இருக்குறவங்க உடம்புல கொரோனா வந்தா.. அது உயிருக்கே ஆபத்தை உண்டாக்கிடுமாம்... உஷார்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆக்சிஜன் பற்றாக்குறை

ஆக்சிஜன் பற்றாக்குறை

கொரோனா வைரஸின் இரண்டாவது அலையில் அதிகமான இறப்புக்கள் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் வீழ்ச்சியடைந்த ஆக்சிஜன் செறிவு ஆகும். லேசான சுவாசக்குழாய் தொற்று முதல் பல்வேறு நோய்கள் வரை கோவிட் நோய்த்தொற்று ஏற்படுத்துகிறது. முக்கியமாக கோவிட் ஹைப்போக்ஸியாவை ஏற்படுத்தி, பல உயிர்களைப் பறித்துள்ளது. ஹைப்போக்ஸியா என்பது உடலில் போதுமான ஆக்சிஜன் இல்லாத நிலையாகும். பெரும்பாலும் இதற்கென்று தனித்துவமான அறிகுறிகள் இல்லை. இருப்பினும் கோவிட் தொற்று ஏற்பட்டதும், ஆரம்பத்திலேயே உடலில் உள்ள ஆக்சிஜன் அளவை கவனித்து வந்தால், இதைத் தவிர்க்கலாம். அதற்கு 6 நிமிட சோதனை பெரிதும் உதவியாக இருக்கும்.

நுரையீரல் செயல்பாட்டை சரிபார்க்க உதவும் 6 நிமிட சோதனை

நுரையீரல் செயல்பாட்டை சரிபார்க்க உதவும் 6 நிமிட சோதனை

மகாராஷ்டிராவில், திடீரென்று கோவிட் வழக்குகள் பெருமளவில் அதிகரித்ததையும், ஆக்சிஜன் பற்றாக்குறையையும் தொடர்ந்து, 6 நிமிட சோதனைக்கு உட்படுத்தி நுரையீரலின் செயல்பாட்டை சரிபார்க்க மாநில அரசு மக்களைக் கேட்டுக் கொண்டது. அதுவும் கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய பரிசோதனையை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் வலியுறுத்தியது. நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் வெளியிட்ட அறிக்கையின் படி, லேசான அறிகுறிகள் உள்ளவர்கள் 6MWT (6-Minute Walk Test) சோதனை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் அறிகுறிகளை அனுபவிக்கும் ஒருவர் நோய்த்தொற்று ஏற்பட்ட நான்காவது அல்லது ஐந்தாவது நாளில் பரிசோதனை செய்ய வேண்டும்.

6MWT சோதனை

6MWT சோதனை

வழிகாட்டுதல்களின் படி, கொரோனா வைரஸின் அறிகுறிகளைக் காட்டும் ஒருவர் ஆக்ஸிமீட்டரின் உதவியுடன் அவர்களின் ஆக்ஸிஜன் அளவை சரிபார்க்க வேண்டும். பின்னர், ஆக்ஸிமீட்டரை விரலில் வைத்திருக்கும் போதே, சமமான மேற்பரப்பில் ஆறு நிமிட நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். ஆறு நிமிடங்களுக்குப் பிறகு ஆக்ஸிஜன் அளவு குறையவில்லை என்றால், அந்த நபர் ஆரோக்கியமாக கருதப்படுவார்.

யாரெல்லாம் இந்த சோதனை செய்யக்கூடாது?

யாரெல்லாம் இந்த சோதனை செய்யக்கூடாது?

ஒருவேளை ஆக்சிஜன் அளவு 93 க்குக் கீழே அல்லது 3 சதவிகிதம் குறைந்துவிட்டால் அல்லது நீங்கள் மூச்சுத் திணறலை அனுபவித்தால் நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால் ஏற்கனவே ஆஸ்துமா உள்ளவர்கள் இந்த பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்படுவதில்லை. மேலும், 60 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் தங்கள் நுரையீரல் செயல்பாட்டை சரிபார்க்க 6-க்கு பதிலாக 3 நிமிடங்கள் மட்டுமே நடக்க வேண்டும். அமெரிக்க நுரையீரல் கழகத்தின் கூற்றுப்படி, இந்த சோதனை இதயம், நுரையீரல் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கான சிகிச்சைகள் குறித்த பதிலைக் கண்காணிக்க உதவும்.

கோவிட்-19 சைலண்ட் ஹைபோக்ஸியாவை ஏற்படுத்தக்கூடும்

கோவிட்-19 சைலண்ட் ஹைபோக்ஸியாவை ஏற்படுத்தக்கூடும்

ஆக்சிமெட்ரி பரிசோதனையின் போது மூச்சுத்திணறல் இருப்பதாக அறியாத ஒரு நோயாளிக்கு சைலண்ட் ஹைபோக்ஸியா இருப்பதாக குறிப்பிடப்படுகிறது. அதாவது இந்நிலையில் மருத்துவர் எதிர்பார்ப்பதை விட ஆக்சிமெட்ரி குறைவாக வெளிக்காட்டும். சைலண்ட் ஹைபோக்ஸியா கொண்ட ஒருவர் மூச்சுத் திணறல் அல்லது சங்கடமாக இருப்பது போன்ற அறிகுறிகளை அனுபவிக்கக்கூடாது. ஆகவே நீங்கள் மூச்சுத் திணறல் பிரச்சனையை உணரவில்லை என்றாலும், கொரோனா வைரஸிற்கான அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், உடலில் ஆக்சிஜன் அளவை சரிபார்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Covid-19: Take this simple 6-minute walk test to check your health

Know all about your lung functionality if you are suffering from Covid-19. This 6-minute test can help check your oxygen levels at home.
Desktop Bottom Promotion