For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா இருமல் எப்படி இருக்கும்-ன்னு தெரியுமா? இத படிங்க தெளிவாயிடுவீங்க...

|

கடந்த பத்து மாதமாக கோவிட்-19 என்னும் கொடிய தொற்றுநோயை எதிர்த்துப் போராடி வருகிறோம். 2020 ஆம் ஆண்டு வாழ்வில் மறக்க முடியாத ஒரு வருடமாக இருக்கும். உலகெங்கிலும் கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதே சமயம், கோவிட்-19 அறிகுறிகளின் பட்டியலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசியை உலகமே தீவிரமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், கோவிட்-19-இன் அசாதாரண அறிகுறிகளையும் கவனிக்க வேண்டியது அவசியம்.

அதிலும் குளிர்காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பலரும் சளி, இருமல் போன்ற உடல்நல பிரச்சனைகளால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருப்பர். இந்நிலையில் இருமல் கொரோனாவின் அறிகுறியாக கூறப்படுவதால், பலரும் நமக்கு இருமல் வருவதற்கு காரணம் காலநிலையா அல்லது கொரோனாவா என்ற குழப்பத்தில் இருப்பார்கள். ஆரம்பத்திலேயே கொரோனாவைக் கண்டறிந்து, உடனடி சிகிச்சையில் ஈடுபடுவதால், விரைவில் கொரோனாவில் இருந்து மீள முடியும். அதற்கு முதலில் ஒருவருக்கு வருவது சாதாரண இருமலா அல்லது கொரோனா இருமலா என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சாதாரண இருமல் Vs கொரோனா இருமல்

சாதாரண இருமல் Vs கொரோனா இருமல்

குளிர்காலம் வேகமாக நெருங்கி வருவதால், மாறிவரும் வானிலையால் ஏராளமான மக்கள் தொண்டை கரகரப்பு, சளி மற்றும் இருமல் போன்றவற்றால் பாதிக்கப்படுவதால், ஒரு 'ட்விண்டெமிக்' அச்சுறுத்தல் பெருகி வருகிறது. கொரோனா இருமலில் இருந்து சாதாரண இருமலுக்கான வித்தியாசத்தை அறிந்து கொள்வதன் மூலம், சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்து விரைவில் மீள உதவும். எனவே நீடித்த இருமலை சில நாட்களால் அனுபவிக்கும் போது, அச்சம் கொள்வது நிலைமையை மேலும் மோசமானதாக்கும் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததில் இருந்து, சாதாரண இருமல் கூட ஒருவரது பெரிய கவலைக்கு காரணமாகிவிட்டது.

கொரோனாவால் இருமல் ஏற்படுகிறது என்பதை எப்படி அறிவது?

கொரோனாவால் இருமல் ஏற்படுகிறது என்பதை எப்படி அறிவது?

இருமல் என்பது அனைத்துவிதமான சுவாச நோய்க்கான பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும். தற்போதைய சூழ்நிலையில் கொரோனா இருமலை எவ்வாறு உணர்வது என்பதை புரிந்து கொள்வது மிகவும் முக்கியம். கடந்த சில மாதங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், கொரோனா வைரஸின் லேசான பாதிப்பைக் கொண்டவர்களில் பெரும்பாலானோர் ஒரு பொதுவான கோவிட் இருமலை அனுபவித்ததாக கூறியுள்ளனர். அதில் வறண்ட, தொடர்ச்சியான மற்றும் கரடுமுரடான இருமல் பல நோயாளிகளுக்கு கொரோனா வைரஸின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாக காணப்படுவது தெரிய வந்துள்ளது.

வறட்டு இருமல் என்பது என்ன?

வறட்டு இருமல் என்பது என்ன?

தொடர்ச்சியான வறட்டு இருமல் என்பது இருமலின் போது சளி அல்லது கபம் உருவாகாமல் இருக்கும். மேலும் இருமலின் போது தொண்டையில் சளி உருவாவது போன்ற உணர்வு எதுவும் இருக்காது. ஒரு கோவிட் இருமல் பெரும்பாலும் மூச்சு திணறலை ஏற்படுத்தும். அதோடு காய்ச்சல், விவரிக்கமுடியாத உடல் சோர்வு போன்ற கொரோனா வைரஸின் பிற அறிகுறிகளும் அடிக்கடி காணப்படும். இருப்பினும், சில சமயங்களில், தொடர்ச்யின வறட்டு இருமல் மட்டுமே கொரோனா தொற்றின் அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே கவனமாக இருங்கள்.

எப்போது மருத்துவரைக் காண வேண்டும்?

எப்போது மருத்துவரைக் காண வேண்டும்?

உங்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் எதுவும் இல்லாமல் தொடர்ச்சியான வறட்டு இருமலால் அவஸ்தைப்பட்டால், அதே சமயம் உங்கள் குரலில் ஒரு கரகரப்பு தெரிந்தால், அது கொரோனா வைரஸின் அறிகுறியாக இருக்கலாம். அதுவும் இந்த கரகரப்பான வறட்டு இருமல் 3 முதல் 4 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்தால், காய்ச்சல், சோர்வு அல்லது மூச்சுத்திணறல் போன்ற பிற அறிகுறிகளையும் சந்திக்கலாம். இந்நிலையில் சற்றும் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

சத்துள்ள ஆகாரம் அவசியம் எடுக்கவும்

சத்துள்ள ஆகாரம் அவசியம் எடுக்கவும்

தற்போது சூழ்நிலையில் குளிர்காலங்களில் சத்துள்ள வைட்டமின் சி, ஜிங்க் போன்ற நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் உணவுகளை அதிகம் உட்கொள்வது நல்லது. அதோடு சளி பிடிக்காமல் பார்த்துக் கொள்வது இன்னும் சிறந்தது. மேலும் தவறாமல் முகக்கவசங்களைப் பயன்படுத்துவது, சமூக விலகலைப் பின்பற்றுவது, கைகளை அடிக்கடி கழுவுவது, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கசாயங்களைப் குடிப்பது போன்ற விஷயங்களையும் பின்பற்றுவது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Coronavirus Symptoms: How Does A COVID-19 Cough Actually Sound Like

With the winter season fast approaching, the threat of a ‘Twindemic’ has been looming large as a lot of people develop a scratchy throat and contract cold and cough during the changing weather.