Just In
- 5 hrs ago
உங்க குழந்தைகிட்ட இந்த அறிகுறிகள் இருந்தால் அவங்க பெரிய மனநல பிரச்சினையில் இருக்காங்கனு அர்த்தமாம்...!
- 8 hrs ago
யாரெல்லாம் பேரீச்சை பழம் சாப்பிடக்கூடாது தெரியுமா? இந்த நேரத்தில் பேரீச்சை சாப்பிடுவது நல்லதல்ல...!
- 8 hrs ago
உங்கள நாள் முழுக்க நீரேற்றமா வைத்திருக்க இந்த மாதிரி தண்ணீர் குடிங்க போதும்...!
- 8 hrs ago
இலங்கை ஸ்பெஷல் கத்திரிக்காய் கிரேவி
Don't Miss
- Movies
டூப் இல்லாமல் சண்டை காட்சிகளில் அசல்ட்டு செய்யும் நவரச நாயகன் கார்த்திக்!
- News
அஸ்ஸாமில் நூலிழை பலத்தில் பாஜக ஆட்சியை தக்க வைக்கும்.. டைம்ஸ் நவ் சர்வே!
- Finance
டாடா மோட்டார்ஸின் அதிரடி.. பயணிகள் வாகன வணிகத்தினை தனி நிறுவனமாக மாற்ற திட்டம்..!
- Automobiles
2021 ஜீப் காம்பஸில் கொண்டுவரப்பட்டுள்ள அப்கிரேட்கள் என்னென்ன? கார் வாங்கும்முன் இந்த வீடியோவை பாருங்க
- Sports
ஐபிஎல்லுக்காகவும் கொஞ்சம் விக்கெட்டுகளை விட்டு வைங்கப்பா... கலாய்த்த ரிக்கி பாண்டிங்
- Education
ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கொரோனா பரவலில் உள்ள 4 ஸ்டேஜ்கள் என்ன? அதில் இந்தியா எந்த ஸ்டேஜில் உள்ளது?
தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இதுவரை இந்த வைரஸ் தாக்கத்தால் சீனா பல உயிர்களை இழந்து மீண்டு வரும் நிலையில், இத்தாலியில் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்து வருகின்றனர். அமெரிக்காவிலும் ஏராளமானோர் இறந்து வருகின்றனர். தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகம் எடுத்துள்ளது. இதனால் பலரது மனதிலும் பல கேள்விகள் எழுகிறது. கொரோனா வைரஸ் பரவுவதில் நான்கு ஸ்டேஜ்/வகைகள் உள்ளன என்பது தெரியுமா? இதுவரை இந்தியா இந்த வைரஸ் பரவலின் இரண்டாம் ஸ்டேஜில் இருந்த நிலையில், தற்போது வேகம் எடுத்துள்ளதைப் பார்க்கும் போது மூன்றாம் ஸ்டேஜ்-க்கு சென்று விட்டதோ என்ற எண்ணம் எழுகிறது. அதென்ன நான்கு வகை என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இப்போது கொரோனா வைரஸ் பரவலின் அந்த 4 வகைகள் குறித்து தான் விரிவாகப் பார்ப்போம்.
MOST READ: கொரோனா வைரஸ் பற்றி சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

முதல் வகை அல்லது ஸ்டேஜ்-1
கொரோனா வைரஸ் பரவலின் ஸ்டேஜ்-1 என்பது இறக்குமதி செய்யப்பட்ட வழக்கு. அதாவது வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்களுக்கு கொரோனா இருப்பது தான் ஸ்டேஜ் 1. இத்தகையவர்களை விமான நிலையத்தில் கண்டுபிடித்து மருத்துவமனைக்கு அப்படியே கொண்டு சென்று சிகிச்சை அளிப்பார்கள். இந்த நிலையால் பாதிப்பு அதிகம் இருக்காது.
MOST READ: கொரோனா வைரஸ் எந்த பொருளில் எவ்வளவு காலம் உயிருடன் இருக்கும்-ன்னு தெரியுமா?

இரண்டாம் வகை அல்லது ஸ்டேஜ்-2
இரண்டாம் வகை கொரோனா பரவல் தான் ஸ்டேஜ் 2. இது உள்ளூர் பரிமாற்ற நிலை ஆகும். அதாவது வெளிநாட்டில் இருந்து வந்தவரின் மூலம் அவரது உறவினர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குவதாகும். உதாரணமாக, சீனாவில் இருந்து வந்த ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அந்த நபர் மூலம் வீட்டில் உள்ளோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுவது.
MOST READ: இந்த பொருட்களை தொட்டா மறக்காம கை கழுவுங்க... இல்லைன்னா கொரோனா வந்துடும்...

மூன்றாம் வகை அல்லது ஸ்டேஜ்-3
மூன்றாம் வகை கொரோனா பரவல் தான் ஸ்டேஜ்-3. இது சற்று அபாகரமான வகை மற்றும் அதிர்ச்சியளிக்கக் கூடிய வகையும் கூட. ஏனெனில் இந்த வகை பரவலில், வெளிநாட்டில் இருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர், கோவில் அல்லது மாலுக்கு சென்று தெரியாத பலருடன் இருக்கக்கூடும். இந்நிலையில் அவருக்கு அருகில் தெரியாத ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், அது தான் ஸ்டேஜ்-3. அதாவது கொரோனா தாக்கப்பட்ட ஒருவர் மூலம் யாரென்றே தெரியாத ஒருவருக்கு வைரஸ் தாக்கினால், அது தான் ஸ்டேஜ்-3.

நான்காம் வகை அல்லது ஸ்டேஜ்-4
நான்காம் வகை கொரோனா பரவலை ஸ்டேஜ்-4 என்று கூறுவர். இதை ஆங்கிலத்தில் எபிடமிக்/பேன்டமிக் என்று அழைப்பர். அதாவது பாதிக்கப்பட்ட ஒருவர் மூலம் வேறொருவருக்குப் பரவி, அவரிடமிருந்து சம்பந்தமே இல்லாத ஒருவருக்கு பரவி என பெருகிக் கொண்டே போகும் நிலை ஆகும். சீனா, இத்தாலி போன்ற நாடுகள் இந்த ஸ்டேஜ்ஜில் தான் பல உயிர்களை இழந்தது. எதிர்காலத்தில் இந்தியாவிற்கும் இந்நிலை ஏற்படலாம்.
MOST READ: 40 வயதிற்கு மேலானவர்களை அதிகம் குறி வைக்கும் கொரோனா வைரஸ்.. ஏன்? அதைத் தடுப்பது எப்படி?

இந்தியா எந்நிலையில் உள்ளது?
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை இந்தியா இரண்டாம் வகை பரவலான ஸ்டேஜ்-2-ல் தான் இருந்தது. ஆனால் ஓரிரு நாட்களாக ஓரிரு இடங்களில் வரும் கொரோனா வழக்குகளைப் பார்க்கும் போது, இந்தியா மூன்றாம் வகை பரவலான ஸ்டேஜ்-3-க்கு சென்றுவிட்டதோ என்று தான் தோன்றுகிறது.
MOST READ: கொரோனா வைரஸ் உடலின் எந்த உறுப்புக்களை பாதித்து உயிரைப் பறிக்கிறது தெரியுமா?

எப்படி கட்டுப்படுத்துவது?
கொரோனா வைரஸ் மிகவும் அபாயகரமானது. அதுவும் தடுப்பு மருந்து எதுவும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், நிச்சயம் அனைவரும் இந்த வைரஸிற்கு அஞ்சி தான் ஆக வேண்டும். கண்ணுக்கு தெரியும் எதிரியைக் கூட அச்சமின்றி போராடி வெற்றி பெற முடியும். ஆனால் கண்ணுக்கு தெரியாத கிருமிக்கு நிச்சயம் அஞ்சி, நம்மை நாமே சுத்தமாகவும் சமூக தொடர்பின்றி வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கி இருக்க வேண்டியது அவசியம்.

அலட்சியத்தால் இத்தாலி சந்தித்த விபரீதம்
இந்தியா ஸ்டேஜ்-3-க்கு சென்றுவிட்டால், இந்த வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் கடினம். எனவே தான் இந்திய அரசாங்கம், ஊரடங்கு என்னும் சிறப்பான ஒரு வழியைக் கடைப்பிடிக்க மக்களை அறிவுறுத்துகிறது. இத்தாலி நாட்டில் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் இறப்பதற்கு, ஆரம்பத்திலேயே இத்தாலி அரசாங்கம் கூறிய ஊரடங்கை அலட்சியப்படுத்தி முறையாக பின்பற்றாமல், சமூக தொடர்புடன் இருந்தது தான் காரணம் என தகவல்கள் கூறுகின்றன.
MOST READ: கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க சாப்பிடக்கூடாத உணவுகள் என கூறப்படுபவைகள்!

144 தடை
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல மாநிலங்களும் 144 தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதனால் மக்களிடம் சமூக தொடர்பு துண்டிக்கப்பட்டு, கொரோனா வைரஸ் பரவலை எளிதில் தடுக்க முடியும். ஆனால் இதற்கு ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் மிகவும் முக்கியம் என்பதை மறவாதீர்கள்.