For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்படி தலைவலி இருந்தா அதுக்கு கொரோனா-ன்னு அர்த்தம்... எச்சரிக்கையா இருங்க...

ஒரு ஆய்வின் படி கொரோனாவின் பிற பொதுவான மற்றும் உன்னதமான அறிகுறிகளில் தலைவலியும் ஒன்றாகும். இந்த அறிகுறியை குறைவான மக்கள் சந்தித்திருந்தாலும், இதுவும் ஒரு முக்கிய அறிகுறியாக குறிப்பிடப்படுகிறது.

|

பெரும்பாலான மக்கள் அன்றாடம் சந்திக்கும் ஒரு பொதுவான உடல்நல பிரச்சனைகளுள் ஒன்று தலைவலி. இந்த தலைவலி ஒருவருக்கு பல காரணங்களால் வரலாம். தற்போதைய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையாலும், ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கங்களாலும் அடிக்கடி தலைவலியால் ஒவ்வொருவரும் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். அதிலும் தற்போது மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை கொரோனா வைரஸ் தொடர்ந்து சீர்குலைத்து வருகிறது.

Coronavirus: How To Identify A Headache Caused By COVID-19?

உலகெங்கிலும் பீதியைத் தூண்டுவதைத் தவிர, ஒரு பெரும் குழப்பத்திற்கும், நிச்சயமற்ற தன்மைக்கும் ஒரு ஆதாரமாக மாறியுள்ளது. குறிப்பாக கொரோனாவில் அறிகுறிகள் என்று வரும் போது, அதன் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டிருப்பதைக் காணும் போது, கொரோனா குறித்த குழப்பம் இன்னும் அதிகமாகவே உள்ளது.

MOST READ: கற்பூரத்தோடு கிராம்பைப் போட்டு எரிங்க.. அப்புறம் நடக்கும் அதிசயங்களைப் பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தலைவலி - கொரோனா அறிகுறி

தலைவலி - கொரோனா அறிகுறி

ஒரு ஆய்வின் படி கொரோனாவின் பிற பொதுவான மற்றும் உன்னதமான அறிகுறிகளில் தலைவலியும் ஒன்றாகும். இந்த அறிகுறியை குறைவான மக்கள் சந்தித்திருந்தாலும், இதுவும் ஒரு முக்கிய அறிகுறியாக குறிப்பிடப்படுகிறது. இருப்பினும், ஒரு சாதாரண தலைவலிக்கும், கொரோனாவால் தூண்டப்பட்ட தலைவலிக்கும் இடையிலான வேறுபாட்டை அடையாளம் காண்பதில் ஒரு பெரும் சிரமத்தை சந்திக்க நேரிடும்.

கொரோனாவின் பொதுவான முக்கிய அறிகுறிகள்

கொரோனாவின் பொதுவான முக்கிய அறிகுறிகள்

கொரோனா வைரஸ் உலகெங்கிலும் பல வகையான அறிகுறிகளுக்கும் மற்றும் மருத்துவ நிலைகளுக்கும் வழிவகுத்துள்ளது. மேலும் இதன் பட்டியல் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் போது, அவற்றில் சில அறிகுறிகள் பாதிக்கப்பட்டவர்களிடையே மிகவும் பொதுவானதாகவும், பரவலாகவும் உள்ளன. அப்படிப்பட்ட சில பொதுவான முக்கிய அறிகுறிகள் பின்வருமாறு:

* காய்ச்சல்

* வறட்டு இருமல்

* தொண்டை வலி/தொண்டை புண்

* மூக்கு ஒழுகல் மற்றும் மூக்கடைப்பு

* நெஞ்சு வலி மற்றும் மூச்சுத் திணறல்

* களைப்பு

* இரைப்பை குடல் தொற்று

* வாசனை மற்றும் சுவை இழப்பு

கோவிட்-19 ஆல் ஏற்படும் தலைவலியை எவ்வாறு கண்டறிவது?

கோவிட்-19 ஆல் ஏற்படும் தலைவலியை எவ்வாறு கண்டறிவது?

நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறி: மருத்துவ ஆராய்ச்சி மற்றும் விமர்சனங்கள் என்னும் இதழில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, காய்ச்சல், இருமல், தசை வலி மற்றும் டிஸ்பீனியா ஆகியவற்றுக்குப் பிறகு தலைவலி ஐந்தாவது மிகவும் பொதுவான கோவிட்-19-இன் அறிகுறியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கோவிட் நோயாளிகளில் சுமார் 6.5 சதவீதம் முதல் 53 சதவீதம் வரை தலைவலி பரவுவதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதுவும் பலனளிக்காமல் இருக்கும்

எதுவும் பலனளிக்காமல் இருக்கும்

ஒரு சாதாரண தலைவலி மற்றும் கோவிட்-19 ஆல் ஏற்படும் தலைவலியும் ஒரே மாதிரி இருக்கலாம். இருப்பினும், கொடிய கொரோனா வைரஸால் ஏற்படும் தலைவலி லேசான வலியில் இருந்து திடீரென்று கடுமையான வலியையும் உண்டாக்கலாம். இது தவிர, கொரோனாவால் ஏற்படும் தலைவலி பொதுவான வலி நிவாரணிகளால் சரியாகாமல் இருப்பதுடன், வேறு எந்த ஒரு இயற்கை தீர்வுகளுக்கும் சரியாகாமல் இன்னும் மோசமான நிலையிலேயே இருக்கும்.

கோவிட்-19 நோய்த்தொற்றினால் ஏற்படும் தலைவலியானது மருத்துவ விளக்கத்தின் அடிப்படையில் குறைத்து மதிப்பிடப்பட்டதாக தெரிகிறது. ஏனெனில் தற்போது ஆய்வாளர்களின் கவனமானது கடுமையான சுவாச நோயாளிகளை நோக்கி உள்ளது என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்ன செய்வது?

என்ன செய்வது?

ஜலதோஷம் அல்லது ஒற்றைத் தலைவலி காரணமாக ஏற்படும் சாதாரண தலைவலிக்கும், கோவிட்-19 ஆல் தூண்டப்படும் தலைவலிக்கும் இடையேயான வித்தியாசத்தைக் கூறுவது என்பது மிகவும் கடினம் என்றாலும், கொரோனாவின் பிற அறிகுறிகளையும் நீங்கள் அனுபவித்தால், சற்றும் தாமதிக்காமல் உங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும். இதனால் உங்களை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதா என்பதை சோதனையின் மூலம் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Coronavirus: How To Identify A Headache Caused By COVID-19?

Here's how can you tell if your headache is triggered by COVID-19. Read on to know more...
Desktop Bottom Promotion