For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டாட்டூ போடுவது புற்றுநோயை ஏற்படுத்துமா? ஆய்வு சொல்லும் அதிர்ச்சிகரமான உண்மை என்ன தெரியுமா?

டாட்டூ என்று அழைக்கப்படும் பச்சைக் குத்தும் பழக்கத்திற்கு பல நீண்ட கால வரலாறு உள்ளது. "டாட்டூ" என்ற வார்த்தை டஹிடியன் வார்த்தையான "டாடௌ" என்பதிலிருந்து தோன்றியதாக நம்பப்படுகிறது.

|

டாட்டூ என்று அழைக்கப்படும் பச்சைக் குத்தும் பழக்கத்திற்கு பல நீண்ட கால வரலாறு உள்ளது. "டாட்டூ" என்ற வார்த்தை டஹிடியன் வார்த்தையான "டாடௌ" என்பதிலிருந்து தோன்றியதாக நம்பப்படுகிறது, இதன் அர்த்தம் "குறியிடுவது". கடந்த காலத்தில், பச்சை குத்தல்கள் பெரும்பாலும் அடையாளம், அலங்காரம் அல்லது ஆன்மீக வெளிப்பாடாக பயன்படுத்தப்பட்டன. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில், பச்சை குத்தல்கள் கலை மற்றும் சுய வெளிப்பாட்டின் பிரபலமான வடிவமாகத் தொடர்கின்றன.

Common Myths and Facts About Tattoos in Tamil

பச்சைக் குத்திக் கொள்வது தற்போது ட்ரெண்டாக இருந்தாலும், பச்சைக் குத்தி கொல்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் அதனை சுற்றி இப்போதும் பல கட்டுக்கதைகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. டாட்டூ அணிவதில் இருக்கும் மூடநம்பிக்கைகள் என்ன மற்றும் அதனைப் பற்றிய உண்மைகள் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டாட்டூ போட்டவர்கள் இரத்த தானம் செய்ய முடியாது

டாட்டூ போட்டவர்கள் இரத்த தானம் செய்ய முடியாது

இது பாதி உண்மை, பாதி கட்டுக்கதை. முறையான ஸ்டெரிலைசேஷன் செய்யும் கடையில் டாட்டூ குத்தப்பட்டு, உரிய அதிகாரிகளால் சான்றளிக்கப்பட்டால், நீங்கள் ரத்த தானம் செய்ய முடியும். உங்கள் டாட்டூ கலைஞர் கிருமி நீக்கம் செய்யப்பட்ட இயந்திரங்களைப் பயன்படுத்துகிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

டாட்டூவில் நிறைய களிம்பு தடவுவது அது வேகமாக குணமடைய உதவுகிறது

டாட்டூவில் நிறைய களிம்பு தடவுவது அது வேகமாக குணமடைய உதவுகிறது

டாட்டூவில் அதிகப்படியான களிம்பு தடவுவது மேற்பரப்பு மட்டத்தில் குமிழ்கள் மற்றும் குணப்படுத்தும் சிக்கல்களை ஏற்படுத்தும், ஏனெனில் இதனால் சருமம் சுவாசிக்க முடியாது. மறுபுறம், டாட்டூவை மிகவும் உலர்வாக வைத்திருப்பது சருமத்தில் வெடிப்பை ஏற்படுத்தும்.

டாட்டூ போடும் முன் மது அருந்துவது அல்லது ஆஸ்பிரின் எடுத்துக்கொள்வது வலியைக் குறைக்கும்

டாட்டூ போடும் முன் மது அருந்துவது அல்லது ஆஸ்பிரின் எடுத்துக்கொள்வது வலியைக் குறைக்கும்

ஆல்கஹால் மற்றும் ஆஸ்பிரின் உண்மையில் இரத்தத்தை மெலிதாக்கும், அதாவது அவை செயல்பாட்டின் போது அதிக இரத்தப்போக்கை ஏற்படுத்தும். உங்கள் உடல் பொதுவாக இரத்த இழப்பைக் கட்டுப்படுத்துவதில் முனைப்புடன் இருக்கும், ஆனால் நீங்கள் வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளும்போது, உங்கள் இரத்தமானது சாதாரண உறைதல் செயல்முறைக்கு போதுமான தடிமனாக இருக்காது. இது, குணப்படுத்துதல் மற்றும் வண்ண தீவிரம் ஆகியவற்றில் சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

டாட்டூக்களை அழிக்க முடியாது

டாட்டூக்களை அழிக்க முடியாது

டாட்டூ அணிவது பொதுவாக நிரந்தரமாகக் கருதப்பட்டாலும், லேசர் தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள் பச்சை குத்துவதை ஓரளவு அல்லது முழுமையாக அகற்றுவதை சாத்தியமாக்கியுள்ளன. பச்சை குத்துவதன் செயல்திறன், பச்சை குத்தலின் அளவு, இடம் மற்றும் வயது, அத்துடன் மையின் நிறம் மற்றும் நபரின் தோல் வகை போன்ற காரணிகளைப் பொறுத்து இது மாறுபடும்.

டாட்டூ அணிவது புற்றுநோய் அல்லது ஆரோக்கிய பிரச்சினையை ஏற்படுத்தலாம்

டாட்டூ அணிவது புற்றுநோய் அல்லது ஆரோக்கிய பிரச்சினையை ஏற்படுத்தலாம்

பச்சை குத்திக்கொள்வது புற்றுநோய் அல்லது பிற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. இருப்பினும், நோய்த்தொற்று அல்லது பிற சிக்கல்களின் அபாயத்தைக் குறைக்க, சான்றளிக்கப்பட்ட டாட்டூ ஸ்டுடியோவைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். டாட்டூவை சரியான முறையில் குணப்படுத்துவதை உறுதிசெய்ய, பின் பராமரிப்பு வழிமுறைகளைப் பின்பற்றுவதும் முக்கியம்.

பச்சை குத்தியவுடன் உடனடியாக வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும்

பச்சை குத்தியவுடன் உடனடியாக வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும்

இது உண்மைதான். புதிதாக பச்சை குத்தப்பட்ட சருமத்தில் நீட்டக்கூடிய பயிற்சிகளைத் தவிர்க்க முயற்சிக்க வேண்டும். தோல் சிராய்ப்பு அபாயத்தைக் குறைக்க உங்கள் டாட்டூ முற்றிலும் குணமாகும் வரை நீங்கள் சரும உராய்வு ஏற்படும் விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். மிக முக்கியமாக, பச்சை குத்திய பிறகு உடற்பயிற்சி செய்வதற்கு முன் குறைந்தபட்சம் 48 மணிநேர இடைவெளி இருக்க வேண்டும்.

சருமத்தில் போடும் டாட்டூவை விட எலும்பில் போடப்படும் டாட்டூ வலிமிகுந்ததாக இருக்கும்

சருமத்தில் போடும் டாட்டூவை விட எலும்பில் போடப்படும் டாட்டூ வலிமிகுந்ததாக இருக்கும்

இது உண்மை தான். உண்மையில், மெல்லிய தோல் மற்றும் எலும்பின் மீது ஊசி தொடர்ந்து குத்தும்போது, அது அதிக வலியை உண்டாக்கும். இருப்பினும், உடலில் அதிக கொழுப்பு மற்றும் சருமம் உள்ள பகுதிகள், அந்த ஊசிக்கு ஒரு குஷனாக செயல்படுகிறது, அதனால்தான் வலி குறைவாக இருக்கும். இதன் பொருள் உங்கள் முதுகுத்தண்டில் பச்சை குத்திக்கொள்வது உங்கள் தொடையில் அல்லது மார்பில் டாட்டூ போட்டுக் கொள்வதை விட மிகவும் வேதனையானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Common Myths and Facts About Tattoos in Tamil

Check out the common myths and misconceptions about tattoos.
Story first published: Wednesday, January 11, 2023, 17:49 [IST]
Desktop Bottom Promotion