Latest Updates
-
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
உலகிலேயே முதன்முதலாக சீனாவில் மனிதரைத் தாக்கி மிரட்டும் பறவைக் காய்ச்சல்!
சமீபத்தில் சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில் புதிய வகை பறவைக் காய்ச்சல் வழக்கு ஒன்று பதிவாகியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
சமீபத்தில் சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில் புதிய வகை பறவைக் காய்ச்சல் வழக்கு ஒன்று பதிவாகியுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இதுவரை பறவைகளைத் தாக்கிய பறவைக் காய்ச்சல், மனிதரைத் தாக்கியது இல்லை. ஆனால் 41 வயதான ஒருவர் பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் அறிவித்தது.

அந்த அறிக்கையின் படி, பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அந்நபர் காய்ச்சல் மற்றும் பிற அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மே 28 ஆம் தேதி அவருக்கு H10N3 ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் அந்த நபர் எவ்வாறு வைரஸால் பாதிக்கப்பட்டார் என்பது குறித்த விவரங்களை கொடுக்கவில்லை. தற்போது அவர் எவ்வித பிரச்சனையும் இல்லாமல், மருத்துவமனையில் இருந்து வெளியேறும் அளவில் பூரணமாக குணமாகியுள்ளார்.

H10N3 ஏவியன் காய்ச்சல் என்றால் என்ன?
நோய் மற்றும் தடுப்பு மையங்களின் படி, ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா என்பது பறவைகளைத் தாக்கும் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வகை ஏ வைரஸ் தொற்றாகும். பறவை காய்ச்சல் என்று அழைக்கப்படும் இந்த வைரஸ் தொற்று பறவைகளை மட்டுமல்ல, மனிதர்களுக்கும், பிற விலங்குகளுக்கும் கூட பாதிப்பை ஏற்படுத்தும். பறவைக் காய்ச்சலில் பல விகாரங்கள் உள்ளன. அதில் H10N3 பல விகாரங்களில் ஒன்றாகும்.

பறவைக் காய்ச்சலின் அறிகுறிகள்
* இருமல்
* காய்ச்சல்
* தொண்டை புன்
* தசை வலி
* தலை வலி
* மூச்சு விடுவதில் சிரமம்
இன்னும் சில சமயங்களில் மூக்கு ஒழுகல், தும்மல், வாந்தி, வயிற்றுப் போக்கு மற்றும் கண் தொற்று போன்ற அறிகுறிகளையும் அனுபவிக்கலாம்.

எப்படி பரவுகிறது?
தேசிய சுகாதார ஆணையத்தின் கூற்றுப்படி, H10N3 ஒரு லேசான பாதிப்பை ஏற்படும் நோய்க்கிருமி. கோழிகளை அதிகம் தாக்கும் இந்த நோய்க்கிருமி, பெரிய அளவில் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு. பறவைக் காய்ச்சலின் மிகவும் பொதுவான வடிவம் பறவைகளுக்கு ஆபத்தானது மற்றும் தொற்றுள்ள கேரியருடன் தொடர்பு கொள்ளும் மனிதர்களையும், பிற விலங்குகளையும் எளிதில் தாக்கும்.
இந்த வைரஸ் மனிதனுக்கு மனிதன் தொடர்பு மூலம் பரவுவதாக இதுவரை அறியப்படவில்லை. ஆயினும்கூட, சில ஆராய்ச்சியாளர்கள் H5N1 மனிதர்களுக்கு ஒரு தொற்றுநோயாக மாறக்கூடும் என்று கவலை கொள்கின்றனர்.

பறவைக் காய்ச்சலின் H10N3 திரிபு ஆபத்தானதா?
ஆசியா மற்றும் பசிபிக் பிராந்திய அலுவலகத்தில் உள்ள உணவு மற்றும் வேளாண் அமைப்பின் நாடுகடந்த விலங்கு நோய்களுக்கான அவசர மையத்தின் பிராந்திய ஆய்வக ஒருங்கிணைப்பாளரான பிலிப் கிளாஸின் அறிக்கையின்படி, இந்த குறிப்பிட்ட வைரஸ் தொற்று பொதுவானது அல்ல. 40 ஆண்டுகளில் சுமார் 160 தனிமைப்படுத்தப்பட்ட வைரஸ்கள் மட்டுமே பதிவாகியுள்ளன. அதுவும் பெரும்பாலும் ஆசியாவிலும் வட அமெரிக்காவின் சில பகுதிகளிலும் உள்ள காட்டு வாத்துகளில் காணப்பட்டன. ஆனால் இதுவரை கோழிகளில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. கூடுதலாக, வைரஸின் மரபணு தரவுகளை பகுப்பாய்வு செய்து முந்தைய வைரஸ்களை ஒத்திருக்கிறதா அல்லது பல வைரஸ்களின் புதுமையான கலவையா என்பதை அடையாளம் காண வேண்டும் என்று அவர் கூறினார்.

இன்ஃப்ளூயன்ஸாவின் பல விகாரங்களைக் கொண்ட சீனா
சீனாவில் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸாவின் பல வேறுபட்ட விகாரங்கள் உள்ளன. அவற்றில் சில சீரற்ற அடிப்படையில் மக்களை பாதிக்கின்றன. 2016-2017 ஆம் ஆண்டில் H7N9 மாறுபாடு சுமார் 300 பேரைக் கொன்றுள்ளது. ஆனால் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் எவரும் இல்லை. தேசிய சுகாதார ஆணையத்தின் அறிக்கையின் படி, H10N3-யால் மனிதருக்கு நோய்த்தொற்று ஏற்பட்ட எந்த நிகழ்வுகளும் இதுவரை உலகில் பதிவாகவில்லை.



Click it and Unblock the Notifications
