Just In
- 4 hrs ago
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- 5 hrs ago
பாதாம் எண்ணெயை உங்க தலை முடியில இப்படி யூஸ் பண்ணா... கிடுகிடுன்னு முடி வளர்ந்து பளபளன்னு மின்னுமாம்!
- 6 hrs ago
வாஸ்துப்படி, இவற்றை வீட்டின் மாடிப்படிக்கு கீழே வெக்காதீங்க... இல்லன்னா அது உங்க முன்னேற்றத்தை தடுக்கும்...
- 6 hrs ago
ஆண்களே! உங்க மனைவி கள்ள உறவில் ஈடுபடுவதற்கு இதுதான் முக்கியமான காரணமாம்... ஷாக் ஆகாம படிங்க!
Don't Miss
- Automobiles
காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Movies
வலியால் அவதிப்பட்ட குஷ்பு.. விமானநிலையத்தில் இதுகூடவா இல்லை.. மன்னிப்பு கேட்ட ஏர் இந்தியா!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
2022-ல் தனக்குள்ள ஆரோக்கிய பிரச்சனைப் பற்றி மனம் திறந்த பிரபலங்கள்!
நடிகர், நடிகைகள் மக்களை மகிழ்விப்பதற்கு பல வித்தியாசமான படங்களில் நடிப்பதோடு, பலருக்கு முன் உதாரணமாகவும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களும் மனிதர்கள் தானே, அவர்களுக்கும் உடலில் பல பிரச்சனைகள் இருக்கத்தானே செய்யும். இருப்பினும் பல பிரபலங்கள் தங்களுக்கு இருக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள். முடிந்தவரை அதை மறைக்கவே முயற்சிப்பார்கள். ஆனால் தற்போது நிறைய பிரபலங்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை மட்டுமின்றி, தங்களுக்கு உள்ள ஆரோக்கிய பிரச்சனைகளையும் மக்களிடம் சமூக வலைத்தளங்கள் மூலமாக பகிர்ந்து கொள்கிறார்கள்.
அந்த வகையில் 2022 ஆம் ஆண்டில் பல பாலிவுட் பிரபலங்கள் தங்களுக்கு இருக்கும் மற்றும் தாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளைப் பற்றி பகிர்ந்துள்ளார்கள். அவற்றில் சில பிரபலங்கள் அனுபவிக்கும் ஆரோக்கிய பிரச்சனையானது நாம் இதுவரை கேட்டிராத அரிய வகை நோயாக உள்ளன. இப்போது 2022-ல் தனக்குள்ள ஆரோக்கிய பிரச்சனை குறித்து மனம் திறந்த அந்த பிரபலங்களைப் பற்றி காண்போம்.

1. வருண் தவான்
பாலிவுட் நடிகரான வருண் தவான் சமீபத்தில் தான் போராடிக் கொண்டிருந்த வெஸ்டிபுலர் ஹைப்போஃபங்க்ஷன் என்னும் பிரச்சனை குறித்து மனம் திறந்து பேசினார். வெஸ்டிபுலர் ஹைப்போஃபங்க்ஷன் என்பது காது கேளாமை பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது காதின் உள் பகுதி போதுமான அளவு செயல்படுத்துவதை நிறுத்தும் போது ஏற்படுத்தும். இந்நிலையில் மூளைக்கு தவறான செய்திகள் அனுப்பப்படும்.

2. சமந்தா ரூத் பிரபு
மிகவும் பிரபலமான தென்னிந்திய நடிகையான சமந்தா ரூத் பிரபு அக்டோபர் மாதத்தில் தனது இன்ஸ்டாகிராம் மூலம் தான் மயோசிடிஸ் என்னும் ஆட்டோ-இம்யூன் நோயால் போராடி வருவதாக தெரிவித்தார். மேலும் இன்ஸ்டாவில் தனது கையில் IV சொட்டு மருந்தை ஏற்றிய நிலையில் அமர்ந்திருக்கும் போட்டோவையும் வெளியிட்டார். மேலும் அவர் தனது உடல்நிலை மெதுவாக முன்னேறிக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். மயோசிடிஸ் என்பது தசைகளை பலவீனப்படுத்தி, கடுமையான வலியை ஏற்படுத்துவதோடு, ஒருவரை மிகுதியாக சோர்வடையச் செய்கிறது.

3. பாத்திமா சனா ஷேக்
நடிகை பாத்திமா சனா ஷேக் தனது பாலிவுட் படமான 'டங்கல்' முதல் எப்லிப்ஸி என்னும் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வருகிறார். மேலும் இவர் தனது இந்த வலிப்பு நோய் குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்தும் வருகிறார். அப்படி பகிரும் போது, அவர் தற்போது மருந்துகள் மற்றும் உடற்பயிற்சிகளின் உதவியுடன் குணமடைய முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

4. நிதி டெய்லர்
இந்திய நடிகையான நிதி டெய்லர் சமீபத்தி டான்ஸ் ரியாலிட்டி ஷோ ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கும் போது வழுக்கி விழுந்தார். அப்போது அவர் தனது உடல்நிலை குறித்தும் பேசியிருந்தார். அதில் நிதி தான் குழந்தையாக இருக்கும் போது, அவரது இதயத்தில் ஓட்டை இருந்ததாகவும், அதனால் அவரால் சோர்வு தரும் செயல்களான நடனம் போன்றவற்றை செய்ய முடியாமல் இருந்ததாகவும் தெரிவித்தார்.

5. யாமி கௌதம்
நடிகை யாமி கௌதம் கெரடோசிஸ் பிலாரிஸ் என்னும் மிகவும் அரிய வகை சரும நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சருமத்தில் கரடுமுரடான திட்டுக்கள் இருப்பதோடு, சருமத்தில் பருக்கள் போன்ற சிறிய புடைப்புகள் இருக்கும். இருப்பினும் யாமி கௌதம் தனது இன்ஸ்டா பக்கத்தில், போட்டோக்களை வெளியிடுவதில் தான் மிகவும் சுயநினைவுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார். இவரது உடல்நிலையைக் குறித்து விரிவாக அறிய, அவரது இன்ஸ்ட்டா பக்கத்தைப் பாருங்கள். அங்கு அவர் தெளிவாக தனது உடல்நிலை குறித்து கூறியுள்ளார்.