For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ஊட்டச்சத்து உங்களை கொரோனா வைரஸின் கொடூர தாக்குதலில் இருந்து காப்பாற்றுமாம் தெரியுமா?

வைட்டமின் டி என்பது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும், இது உங்கள் உடலை பாதுகாப்பதில் பல முக்கியப்பங்கை வகிக்கிறது.

|

கடந்த நான்கு மாதங்களாக உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விஷயமென்றால் அது கொரோனா வைரஸ்தான். இதற்கு முன்னாலும் பல தொற்றுநோய்கள் உலகத்தில் தோன்றியிருந்தாலும் உலகத்தையே முடக்கிப்போடும் அளவிற்கு இவ்வளவு மோசமான பேரழிவு ஏற்பட்டதில்லை. மக்களின் அன்றாட வாழ்க்கை முதல் பொருளாதாரம் வரை அனைத்துமே கொரோனா வைரஸால் நிலைகுலைந்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Can Vitamin D Lower Your Risk of Coronavirus?

நாட்டு மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கியிருக்கும் நிலையிலும் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நம்மால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும். கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருக்க ஒரே வழி தனிமைப்படுவதும், நம்முடைய நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதும்தான். நோயெதிர்ப்பு சக்தியை பொறுத்தவரை வைட்டமின் டி என்பது அத்தியாவசியமானதாகும் குறிப்பாக கொரோனாவிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க இது மிகவும் அவசியமானதாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வைட்டமின் டி

வைட்டமின் டி

வைட்டமின் டி என்பது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும், இது உங்கள் உடலை பாதுகாப்பதில் பல முக்கியப்பங்கை வகிக்கிறது. இந்த ஊட்டச்சத்து நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். வைட்டமின் டி நிறைந்த உணவுப்பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்வது கொரோனா வைரஸ் தாக்கும் வாய்ப்பை பெருமளவில் குறைக்கிறது என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கிறது.

கொரோனாவில் இருந்து எப்படி பாதுகாக்க வேண்டும்?

கொரோனாவில் இருந்து எப்படி பாதுகாக்க வேண்டும்?

COVID-19 க்கு தற்போது எந்த சிகிச்சையும் இல்லை என்பதையும், சமூக விலகல் மற்றும் சரியான சுகாதார நடைமுறைகளைத் தவிர வேறு எந்த தடுப்பு நடவடிக்கைகளும் இந்த நோயிடம் இருந்து உங்களை பாதுகாக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் உடலில் போதுமான அளவு வைட்டமின் டி இருப்பது அல்லது போதுமான அளவு வைட்டமின் டி உணவுகளை எடுத்துக் கொள்வதும் உங்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் மேலும் சுவாச நோய்களில் இருந்து உங்களை பாதுகாக்கும் என்று ஆராய்ச்சி முடிவுகள் கூறுகிறது. வைட்டமின் டி எப்படி உங்களை கொரோனாவிடம் இருந்து பாதுகாக்கிறது என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

வைட்டமின் டி எப்படி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது?

வைட்டமின் டி எப்படி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது?

உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தின் சரியான செயல்பாட்டிற்கு வைட்டமின் டி அவசியம், இது தொற்று மற்றும் நோய்களுக்கு எதிரான உங்கள் உடலின் முதல் செயல்பாடாகும். இந்த வைட்டமின் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது அழற்சி எதிர்ப்பு மற்றும் நோயெதிர்ப்பு பண்புகள் இரண்டையும் கொண்டுள்ளது மற்றும் நோயெதிர்ப்பு மண்டல பாதுகாப்புகளை செயல்படுத்துவதற்கு முக்கியமானது.

வைட்டமின் டி-ன் முக்கியத்துவம்?

வைட்டமின் டி-ன் முக்கியத்துவம்?

வைட்டமின் டி ஆனது டி-செல்கள் மற்றும் மேக்ரோபேஜ்கள் உள்ளிட்ட நோயெதிர்ப்பு உயிரணுக்களின் செயல்பாட்டை மேம்படுத்துவதாக அறியப்படுகிறது, அவை உங்கள் உடலை நோய்க்கிருமிகளுக்கு எதிராக பாதுகாக்கின்றன. உங்கள் உடலில் வைட்டமின் டி குறைவாக இருப்பது நோய்த்தொற்று, ஆரோக்கிய குறைபாடுகள், நோயெதிர்ப்பு தொடர்பான நோய்களுக்கு வழிவகுக்கும். கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட முக்கிய காரணம் உங்கள் உடலில் வைட்டமின் டி குறைவாக இருப்பதுதான்.

MOST READ: ரோபோவால் கொடூரமாக கொல்லப்பட்டவர் முதல் நடனமாடியே கும்பலாக இறந்தவர்கள் வரை... உலகின் மோசமான மரணங்கள்

சுவாசக்கோளாறுகள்

சுவாசக்கோளாறுகள்

குறைந்த வைட்டமின் டி அளவுகள் காசநோய், ஆஸ்துமா மற்றும் நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய் (சிஓபிடி), அத்துடன் வைரஸ் மற்றும் பாக்டீரியா சுவாச நோய்த்தொற்றுகள் உள்ளிட்ட சுவாச நோய்கள் ஏற்பட காரணமாகிறது. மேலும் வைட்டமின் டி குறைபாடு நுரையீரல் செயல்பாட்டை குறைப்பதுடன் இணைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் முதலில் தாக்குவது நமது நுரையீரலைத்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இது உங்கள் உடலின் சுவாச நோய்த்தொற்றுகளுக்கு எதிராக போராடும் திறனை பாதிக்கலாம்.

வைட்டமின் டி எடுத்துக்கொள்வது COVID-19 க்கு எதிராக பாதுகாக்குமா?

வைட்டமின் டி எடுத்துக்கொள்வது COVID-19 க்கு எதிராக பாதுகாக்குமா?

தற்போது வரை COVID-19 க்கு சிகிச்சை கண்டறியப்படவில்லை. பல ஆய்வுகள் வைட்டமின் டி குறைபாடு நோயெதிர்ப்பு செயல்பாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் சுவாச நோய்களை உருவாக்கும் அபாயத்தை குறைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சில ஆய்வுகள் வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு ஒட்டுமொத்த சுவாச நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளது. வைட்டமின் டி குறைபாடுள்ளவர்கள் மற்றும் போதுமான அளவு வைட்டமின் டி உள்ளவர்கள் இடையே நடத்தப்பட்ட ஆய்வில் வைட்டமின் டி போதுமான அளவு உள்ளவர்களுக்கு சுவாசக்கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.

நுரையீரல் செயல்பாடு

நுரையீரல் செயல்பாடு

வைட்டமின் டி உணவுகள் ARI எனும் நுரையீரல் குறைபாட்டை ஏற்படுத்தும் வாய்ப்பை 12 சதவீதம் குறைக்கிறது. தினமும் வைட்டமின் டி உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் கொரோனா தாக்குதலில் இருந்து உங்களை பெரும்பாலும் பாதுகாத்துக் கொள்ளலாம். அதேசமயம் இடைவெளி விட்டு எடுத்துக்கொள்ளும் போது அதன் செயல்திறன் குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் போன்ற சுவாச நோய்களை உருவாக்கும் அபாயத்தில் இருக்கும் வயதானவர்களில் வைட்டமின் டி பொருட்கள் இறப்பைக் குறைப்பதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து தப்பிக்கலாமா?

கொரோனாவில் இருந்து தப்பிக்கலாமா?

வைட்டமின் டி உணவுகள் உங்களை கொரோனாவில் இருந்து நிச்சயம் பாதுகாக்கும் என்று ஆய்வுகள் கூறவில்லை. ஆனால் வைட்டமின் டி குறைபாடு நிச்சயம் நீங்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்பை அதிகரிக்கும் என்று கூறுகிறது. வைட்டமின் டி குறைபாடு இருப்பது நோயெதிர்ப்பு செயல்பாட்டிற்கு தீங்கு விளைவிப்பதன் மூலம் ஒட்டுமொத்த தொற்று மற்றும் நோயால் ஏற்படும் பாதிப்பை அதிகரிக்கும். வயதானவர்களுக்கு கொரோனா வைரஸ் அதிக தாக்கத்தை ஏற்படுத்த காரணம் அவர்களின் வைட்டமின் டி குறைபாடுதான்.

MOST READ: விட்டுக்கொடுத்து காதலிக்கவும் விட்டுட்டு போகமாக காதலிக்கவும் இந்த ராசிக்காரங்களால்தான் முடியுமாம்...

வைட்டமின் டி உணவுகள்

வைட்டமின் டி உணவுகள்

நாம் பெரும்பாலும் சாப்பிடும் உணவுகளில் வைட்டமின் டி குறிப்பிட்ட அளவில் இருக்கிறது. ஆனால் இதுபோன்ற இக்கட்டான காலக்கட்டங்களில் வைட்டமின் டி உணவுகளை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். கொழுப்பு நிறைந்த மீன்கள், ஆரஞ்சு ஜுஸ், சோயா மில்க், சீஸ், முட்டையின் வெள்ளைக்கரு, காளான், கீரை போன்ற உணவுகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Can Vitamin D Lower Your Risk of Coronavirus?

Read to know does vitamin D lower your risk of Coronavirus
Story first published: Tuesday, April 7, 2020, 14:26 [IST]
Desktop Bottom Promotion