கொரோனா தடுப்பூசி உங்களை H3N2 வைரஸ் காய்ச்சலில் இருந்து பாதுகாக்குமா? ஆய்வுகள் சொல்வது என்ன?

கொரோனாவின் கோரத்தாண்டவம் இந்தியாவில் குறைந்து மக்கள் நிம்மதி மூச்சு விடும் வேலையில் அதனை சீர்குலைக்கும் வகையில் புதிதாக வந்துள்ளது H3N2 வைரஸ்.

கொரோனாவின் கோரத்தாண்டவம் இந்தியாவில் குறைந்து மக்கள் நிம்மதி மூச்சு விடும் வேலையில் அதனை சீர்குலைக்கும் வகையில் புதிதாக வந்துள்ளது H3N2 வைரஸ். தொடர்ந்து அதிகரித்து வரும் H3N2 வைரஸின் தொற்று மக்களிடையே அச்சத்தையும், கவலையையும் தூண்டியுள்ளது. H3N2 வைரஸ் அல்லது இன்ஃப்ளூயன்ஸா A வைரஸால் ஏற்படும் தொற்று அதிக காய்ச்சல், சுவாசப் பிரச்சனைகள், சோர்வு மற்றும் வறட்டு இருமல் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. 3 வாரங்கள் வரை உடலில் அறிகுறிகள் தென்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Can COVID Shots Protect Against H3N2 Influenza Flu in Tamil

இருப்பினும், 3 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவுவதையும், பல பிறழ்வுகள் உருவாகி வருவதையும் கவனித்து வருபவர்களால், நாடு முழுவதும் பரவி வரும் புதிய வைரஸால் அமைதியாக இருக்க முடியாது. நாட்டில் பெரும்பாலான மக்கள் 2-3 டோஸ்களில் எடுக்கப்பட்ட கோவிட் தடுப்பூசிகள் எடுத்துள்ளதால் கொரோனவை ஒத்த இந்த வைரஸுக்கு எதிராக இது பாதுகாக்குமா என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொரோனா தடுப்பூசி காய்ச்சலில் இருந்து பாதுகாக்குமா?

கொரோனா தடுப்பூசி காய்ச்சலில் இருந்து பாதுகாக்குமா?

இரண்டு வைரஸ்களுக்கும் அறிகுறிகள் ஒத்திருந்தாலும் அவை அடிப்படையில் இரண்டு வெவ்வேறு வைரஸ்கள் என்பதால் ஒருபோதும் கொரோனா தடுப்பூசி இந்த புதிய வைரஸிடமிருந்து உங்களை பாதுகாக்காது. கோவிட் தொற்றை உண்டாக்கும் வைரஸ் H3N2-ல் இருந்து முற்றிலும் வேறுபட்டது. அதற்கான தடுப்பூசிகள் வித்தியாசமாக இருக்கும், மேலும் கோவிட் தடுப்பூசி காய்ச்சலுக்கு எதிராகப் பாதுகாக்க உதவாது. குறிப்பிட்ட நோய்/வைரஸ்ஸுக்கு எதிரான போராட்டத்திற்கு நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தயார்படுத்த உதவும் பிற தடுப்பூசிகள், காய்ச்சல் தடுப்பூசிகள் உள்ளன என்று நிபுணர்கள் விளக்குகிறார்கள். எந்தவொரு வைரஸுக்கும் எதிரான தடுப்பூசி வைரஸின் தன்மை, அதன் உருவவியல், பெருக்க விகிதம் போன்றவற்றைப் பொறுத்து தயாரிக்கப்படுகிறது, எனவே குறிப்பிட்ட தடுப்பூசிகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வைரஸுக்கு ஏற்ப பதிலளிக்க மட்டுமே தூண்டும் என்பதை புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

இது உயிருக்கு ஆபத்தானதா?

இது உயிருக்கு ஆபத்தானதா?

H3N2 ஆன்டிஜெனிக் லேசான பிறழ்வு, ஆனால் உயிருக்கு ஆபத்தானது அல்ல. அது எந்த வைரஸாக இருந்தாலும், கொமொர்பிடிட்டி இருந்தால், இறப்புக்கான வாய்ப்புகள் அதிகம். எனவே H3N2 வைரஸுக்கு எதிராக நம் உடலை நாம்தான் தயார்படுத்த வேண்டும்.

காய்ச்சல் நோய்த்தொற்றின் இரண்டு உச்சநிலைகளை ஆண்டுதோறும் இந்தியா காண்கிறது

காய்ச்சல் நோய்த்தொற்றின் இரண்டு உச்சநிலைகளை ஆண்டுதோறும் இந்தியா காண்கிறது

பருவகால இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் நோய்த்தொற்றின் இரண்டு உச்சநிலைகளை இந்தியா அனுபவிக்கிறது, ஒன்று ஜனவரி முதல் மார்ச் வரை மற்றும் மற்றொன்று மழைக்காலத்திற்குப் பிறகு. இந்தியாவில் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களில் மூன்று துணை வகைகள் உள்ளன: இன்ஃப்ளூயன்ஸா A H1N1pdm09, Influenza A H3N2 மற்றும் Influenza B Victoria, இதில் இன்ஃப்ளூயன்ஸா H3N2 என்பது காய்ச்சலுக்கான நேர்மறை சோதனை மாதிரிகளில் முதன்மையான துணை வகையாகும். இது இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து வேகமாக பரவி வருகிறது.

யாரெல்லாம் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது?

யாரெல்லாம் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது?

H3N2 வைரஸ் ஒரு நபரின் நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தாக்குவதால் குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு அதிக ஆபத்து உள்ளது. குறிப்பாக, ஆஸ்துமா, இதய நோய், நீரிழிவு, உடல் பருமன் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ள குழந்தைகள் அல்லது பெரியவர்கள் H3N2 வைரஸால் பாதிக்கப்படுவதற்கான அதிக ஆபத்தில் உள்ளனர். கர்ப்பிணிப் பெண்களும் இந்த வைரஸால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் குழந்தைகள் மற்ற வைரஸ்களுக்கு ஆளாகாததால் குழந்தைகளுக்கு காய்ச்சல் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

H3N2 காய்ச்சலை உறுதி செய்யும் அறிகுறிகள்

H3N2 காய்ச்சலை உறுதி செய்யும் அறிகுறிகள்

லேசாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், நோய்த்தொற்றை உறுதிசெய்து, மருத்துவ உதவியை விரைவில் பெறுவது முக்கியம். H3N2 வைரஸ் தொற்றின் பொதுவான அறிகுறிகள் காய்ச்சல் அல்லது காய்ச்சலுடன் கூடிய குளிர், இருமல், தொண்டை புண், மூக்கு ஒழுகுதல் அல்லது சில சந்தர்ப்பங்களில் மூக்கு நெரிசல், தலைவலி மற்றும் சோர்வு. குழந்தைகள் மற்றும் சில சமயங்களில் பெரியவர்களும் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை அனுபவிக்கலாம். சுவாசிப்பதில் சிரமம் H3N2 வைரஸ் தொற்றுக்கான மற்றொரு தெளிவான அறிகுறியாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Tuesday, March 14, 2023, 18:30 [IST]
Desktop Bottom Promotion