For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யாருக்கெல்லாம் பெருங்குடல் புற்றுநோய் வர வாய்ப்பிருக்குன்னு தெரிஞ்சுக்கணுமா? இத படிங்க...

நடிகர் சாட்விக் போஸ்மேனின் உயிரைப் பறித்த பெருங்குடல் புற்றுநோயைப் பற்றி பலரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்களையும், யாருக்கெல்லாம் இந்நோயின் அபாயம் உள்ளது என்பன போன்ற விஷயங்கள் உள்ளன.

|

பிளாக் பாந்தர் திரைப்படத்தின் நடிகர் சாட்விக் போஸ்மேன் தனது 43 வயதில் பெருங்குடல் புற்றுநோயால் இறந்துவிட்டார் என்று அவரது குடும்பத்தினர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இந்த நடிகர் இந்நோயைக் கண்டறிந்ததில் இருந்து, கடந்த நான்கு ஆண்டுகளாக போராடிக் கொண்டிருந்துள்ளார். ஆனால் இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது வீட்டில் காலமானார். இவருக்கு 2016 ஆம் ஆண்டு மூன்றாம் நிலை பெருங்குடல் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

Factors That Increase Risk Of Colon Cancer

இக்கட்டுரையில் நடிகர் சாட்விக் போஸ்மேனின் உயிரைப் பறித்த பெருங்குடல் புற்றுநோயைப் பற்றி பலரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்களையும், யாருக்கெல்லாம் இந்நோயின் அபாயம் உள்ளது என்பதையும் காண்போம்.

MOST READ: உங்க நுரையீரலில் பிரச்சனை வரக்கூடாதா? அப்ப உடனே இந்த உணவுகளுக்கு 'குட்-பை' சொல்லுங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குடல் புற்றுநோய்/பெருங்குடல் புற்றுநோய்

குடல் புற்றுநோய்/பெருங்குடல் புற்றுநோய்

குடல் புற்றுநோயானது பெருங்குடலில் தொடங்குகிறது. பெருங்குடல் தான் நமது செரிமான மண்டலத்தின் இறுதி பகுதியாகும். பெரும்பாலும் இந்த புற்றுநோய் வயதானவர்களைத் தான் பாதிக்கிறது. இருப்பினும் இது எந்த வயதினருக்கும் ஏற்படலாம். வழக்கமாக பெருங்குடலினுள் சிறிய கட்டிகளாக ஆரம்பித்து, பின் கொத்தாக புற்றுநோயற்ற செல்களாக உருவாக தொடங்குகிறது. காலப்போக்கில் இந்த கட்டிகளுள் சில புற்றுநோய் கட்டிகளாக மாறக்கூடும்.

பாலிப்ஸ் என்னும் கட்டிகள் மிகச்சிறியவை என்றாலும், சில அறிகுறிகளையும் வெளிப்படுத்துகின்றன. அதனால் தான் கட்டிகள் இருப்பதை கண்டறிந்தவர்கள், பெருங்குடல் புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்க அடிக்கடி பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். சில சமயங்களில் இந்த கட்டிகள் புற்றுநோயாக மாறுவதற்கு முன்பே அகற்றப்படுகின்றன.

பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகள்

பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகள்

பெருங்குடல் புற்றுநோய் உள்ள பலருக்கு ஆரம்ப காலத்தில் எவ்வித அறிகுறியும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பிக்கும் போது, புற்றுநோய் கட்டிகளின் அளவு மற்றும் அது குடலில் இருக்கும் இடத்தைப் பொறுத்து அறிகுறிகள் வேறுபடும்.

* குடல் பழக்கத்தில் தொடர்ச்சியான மாற்றம். அதாவது மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு

* இரத்தம் கலந்த மலம்

* தொடர்ச்சியான அடிவயிற்று அசௌகரியங்களான வாய்வுத் தொல்லை, வயிற்று வலி அல்லது வயிற்று பிடிப்புகள்

* மலம் முழுவதையும் வெளியேற்ற முடியவில்லை என்ற உணர்வு

* விவரிக்கப்படாத எடை இழப்பு, களைப்பு மற்றும் பலவீனம்

பெருங்குடல் புற்றுநோயின் அபாய காரணிகள்:

பெருங்குடல் புற்றுநோயின் அபாய காரணிகள்:

வயது

யாருக்கு வேண்டுமானாலும் பெருங்குடல் புற்றுநோய் வரலாம் என்றாலும், அதைக் கண்டறிந்தவர்களில் பெரும்பாலானோர் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள். மேலும் ஆய்வுகளும் பெருங்குடல் புற்றுநோய் இளம் வயதினரை விட 50 வயதிற்கு குறைவானவர்களிடம் அதிகரித்து வருவதாக கண்டறிந்துள்ளன. ஆனால் இது ஏன் என்று மருத்துவர்களுக்கு உறுதியாக தெரியவில்லை.

ஆப்பிரிக்க-அமெரிக்க இனம்

ஆப்பிரிக்க-அமெரிக்க இனம்

ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தைச் சேர்ந்தவர்கள் பிற இனங்களை விட அதிகமாக பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

குடல் அழற்சி பிரச்சனைகள்

குடல் அழற்சி பிரச்சனைகள்

பெருங்குடல் அழற்சி நோய், அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி மற்றும் கிரோன் நோய் போன்றவை பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.

குடும்ப வரலாறு

குடும்ப வரலாறு

உங்கள் இரத்த உறவினர்கள் யாருக்கேனும் பெருங்குடல் புற்றுநோய் இருந்தால், உங்களுக்கும் இந்நோய் வருவதற்கான வாய்ப்புள்ளது. அதிலும் உங்கள் குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு இந்நோய் இருப்பின், உங்களுக்கு இந்த புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகமாக உள்ளது.

அதிக கொழுப்பு மற்றும் குறைவான நார்ச்சத்துள்ள உணவு

அதிக கொழுப்பு மற்றும் குறைவான நார்ச்சத்துள்ள உணவு

மேற்கத்திய உணவு முறை பெருங்குடல் புற்றுநோயை அபாயத்தை அதிகரிக்கிறது. ஏனெனில் மேற்கத்திய உணவில் கொழுப்பு அதிகமாகவும், நார்ச்சத்து குறைவாகவும் உள்ளது. ஆய்வுகளில் அதிகப்படியான மாட்டிறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை சாப்பிடுபவர்களுக்கு பெருங்குடல் புற்றுநோயின் அபாயம் அதிகம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளன.

உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை

உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை

உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையை மேற்கொள்பவர்களுக்கு பெருங்குடல் புற்றுநோயின் அபாயம் அதிகம் உள்ளது. ஏனெனில் இவர்கள் உடலுக்கு போதிய வேலை கொடுக்காமல் இருப்பதால், உடல் பருமன் அதிகரிக்கிறது மற்றும் சர்க்கரை நோயின் அபாயமும் அதிகரிக்கிறது. சொல்லப்போனால் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் இரண்டுமே பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் முக்கிய காரணிகளுள் ஒன்று.

புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல்

புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல்

அளவுக்கு அதிகமாக மது அருந்துபவர்கள் மற்றும் அதிகமாக புகைப்பிடிப்பவர்களும் அதிக ஆபத்தில் உள்ளனர். இத்தகையவர்கள் மது மற்றும் சிகரெட் பழக்கத்தை கைவிடுவதோடு, பெருங்குடல் புற்றுநோய் உள்ளதா என்பதை சோதித்துக் கொள்வது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Black Panther Star Chadwick Bozeman Dies Of Colon Cancer: Factors That Increase Risk Of Colon Cancer

Black Panther Star Chadwick Bozeman Dies Of Colon Cancer: Everything You Need To Know About This Condition
Desktop Bottom Promotion