For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கருப்பு பூஞ்சை Vs வெள்ளை பூஞ்சை Vs மஞ்சள் பூஞ்சை - இவற்றில் எது மிகவும் ஆபத்தானது? அறிகுறிகள் என்ன?

மஞ்சள் பூஞ்சை மிகவும் ஆபத்தானது என்றாலும், வெள்ளை பூஞ்சை கொரோனாவின் அறிகுறிகளைக் கொண்டுள்ளன மற்றும் ஸ்டெராய்டு எடுக்கும் சர்க்கரை நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

|

கொரோனா பெருந்தொற்றால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வரும் இந்த சூழ்நிலையில் சமீப காலமாக இந்தியாவில் 11,717 கருப்பு பூஞ்சை அல்லது மியூகோமிகோசிஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன. அதுவும் குறிப்பாக கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் கருப்பு பூஞ்சை வழக்குகள் அதிகபட்சமாக பதிவாகியுள்ளன.

Black Fungus vs White Fungus vs Yellow Fungus - Signs, Symptoms And Differences in Tamil

கோவிட்-19 க்கு எதிரான இந்த போரில், கருப்பு பூஞ்சை தொற்று எழுந்துள்ளது ஒரு பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. ஏற்கனவே சுகாதார அமைச்சகம் கருப்பு பூஞ்சையை ஒரு தொற்றுநோயாக அறிவித்துள்ளது. இந்த கருப்பு பூஞ்சையைத் தவிர, இந்தியாவின் அதிக மக்கட்தொகை கொண்ட மாநிலமான உத்தர பிரதேசத்தில் வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சை வழக்குகளும் பதிவாகியுள்ளன. இந்த மூன்று வகையான பூஞ்சை தொற்றுகளும் மிகவும் ஆபத்தானது. குறிப்பாக கொரோனாவில் இருந்து மீண்டு வருபவர்களுக்கு இந்த தொற்றுகள் மிகவும் அபாயகரமானது.

MOST READ: கொரோனாவில் இருந்து குணமானவங்க இந்த அறிகுறிகளை சந்திச்சா டாக்டரை சந்திக்கணுமாம்... இல்ல ஆபத்தாயிடும்..

இக்கட்டுரையில் கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை மற்றும் மஞ்சள் பூஞ்சை தொற்றின் அறிகுறிகளும், அவற்றிற்கான சிகிச்சைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருப்பு பூஞ்சை

கருப்பு பூஞ்சை

மியூகோர்மைகோசிஸ் என்று அழைக்கப்படும் கருப்பு பூஞ்சையில் மூன்று வகைகள் உள்ளன. அதில் முதல் வகை கருப்பு பூஞ்சை பொதுவாக நாசி குழிகள் மற்றும் பாராநாசல் சைனஸை பாதிக்கிறது மற்றும் இது கண்களை பாதித்து பார்வை இழப்பை உண்டாக்குகிறது. அதோடு மூளை வரையிலும் இந்த பூஞ்சை பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

மற்றொரு வகை மியூகோர்மைகோசிஸ் நுரையீரலை பாதித்து பல்மனரி மியூகோர்மைகோசிஸை உண்டாக்கும். மூன்றாம் வகை இரைப்பைக் குடல் மியூகோர்மைகோசிஸ் ஆகும்.

கருப்பு பூஞ்சை என்று எதனால் அழைக்கப்படுகிறது?

கருப்பு பூஞ்சை என்று எதனால் அழைக்கப்படுகிறது?

மியூகோர்மைகோசிஸின் மிகவும் ஆபத்தான பகுதி என்னவெனில், இந்த பூஞ்சைகள் 'ஆஞ்சியோஇன்வேசிவ்', அதாவது இவை இரத்தநாளங்களைப் படையெடுத்து, அவற்றை அழித்து திசு இறப்பை உண்டாக்கின்றன. இப்படி இந்த பூஞ்சை தாக்கிய பகுதியில் உள்ள திசுக்கள் இறக்கும் போது, அந்த பகுதி கருப்பு நிறமாக மாறுகிறது. ஆகவே தான் இது 'கருப்பு பூஞ்சை' என்று அழைக்கப்படுகிறது.

யாருக்கெல்லாம் கருப்பு பூஞ்சை தொற்றின் ஆபத்து அதிகம் உள்ளது?

யாருக்கெல்லாம் கருப்பு பூஞ்சை தொற்றின் ஆபத்து அதிகம் உள்ளது?

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சர்க்கரை நோயாளிகள் ஸ்டெராய்டுகளை எடுக்கும் போது, கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்படுவதற்கான அதிக வாய்ப்புள்ளது. இதைத் தடுக்க ஸ்டெராய்டுகளை தேவையில்லாமல் அதிகம் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். எப்போது ஒருவர் ஸ்டெராய்டு எடுக்க வேண்டுமென்றால், நுரையீரலில் உள்ள அழற்சி கட்டுப்படுத்த முடியாத அளவில் இருக்கும் போது, அதைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்க வேண்டும். அதே நேரத்தில், ஸ்டெராய்டுகள் நோயாளியின் நோயெதிர்ப்பு சக்தியை குறைக்கிறது மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்களின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.

வெள்ளை பூஞ்சை

வெள்ளை பூஞ்சை

வெள்ளை பூஞ்சையானது கேண்டிடா குழுவில் இருந்து வந்தது. இந்த பூஞ்சை நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், எச்.ஐ.வி, புற்றுநோய், மாற்று அறுவை சிகிச்சை, சர்க்கரை நோய் போன்றவர்களை பாதிக்கிறது. இது ஒரு தொற்றுநோய் அல்ல. ஆனால் இந்த பூஞ்சை உள்ள பகுதியை ஒருவர் சுவாசிக்கும் போது, அந்த பூஞ்சை எளிதில் ஒருவரது உடலுக்குள் நுழைந்து முக்கிய உறுப்புகளுக்கு பரவி சிக்கல்களை ஏற்படுத்திவிடும்.

மஞ்சள் பூஞ்சை

மஞ்சள் பூஞ்சை

மஞ்சள் பூஞ்சை ஒரு பூஞ்சை தொற்று. ஆனால் இது உடலுக்குள் புகுந்து பரவ ஆரம்பிக்கும் போது மிகவும் ஆபத்தானதாகிறது. இந்த பூஞ்சை தொற்றை அவ்வளவு எளிதில் கண்டறிய முடியாது. இத்தொற்று பெரும்பாலும் தாமதமாகவே கண்டறியக்கூடியதாக இருக்கும். மஞ்சள் பூஞ்சையின் சிறப்பியல்பை நிர்வகிப்பது மிகவும் கடினம் மற்றும் இந்த பூஞ்சை தொற்று மிகவும் ஆபத்தானது. எனவே ஆரம்பத்திலேயே இந்த தொற்றினை அறிய வேண்டியது அவசியம். அஸ்பெர்கிலஸ் என்னும் மஞ்சள் பூஞ்சை, பொதுவாக பாராநாசல் சைனஸ்கள், கால்கள் ஆகிய பகுதிகளை தாக்க ஆரம்பித்து, பின் உடலின் மற்ற உறுப்புகளுக்கும் பரவுகிறது.

கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சை தொற்றின் அறிகுறிகள்:

கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சை தொற்றின் அறிகுறிகள்:

கருப்பு பூஞ்சையின் அறிகுறிகள்

கொரோனாவில் இருந்து மீண்டு 2-6 வாரத்திற்குள் ஆன எந்த ஒரு நோயாளியும் முகத்தின் ஒரு பக்கத்தில் வலி, கடுமையான தலைவலி, கண்கள் மற்றும் அதை சுற்றிலும் வீக்கம், நாசியில் இருந்து ப்ரௌன் அல்லது கருப்பு நிற வெளியேற்றம், மூக்கடைப்பு மற்றும் பல் ஆடுவது போன்ற அறிகுறிகளை கண்காணிக்க வேண்டும். கருப்பு பூஞ்சை தொற்றின் அறிகுறிகளானது தீவிரத்தை பொறுத்தது.

* மூக்கடைப்பு

* இரத்தப்போக்கு

* மூக்கில் இருந்து வெளியேற்றம்

* முகத்தில் வலி

* வீக்கம்

* உணர்வின்மை

* மங்கலான பார்வை

* கண்களில் இருந்து நீர் வருவது

வெள்ளை பூஞ்சையின் அறிகுறிகள்

வெள்ளை பூஞ்சையின் அறிகுறிகள்

வெள்ளை பூஞ்சையின் அறிகுறிகளும் கொரோனாவின் அறிகுறிகளைப் போன்று தான் இருக்கும். CT- ஸ்கேன் அல்லது எக்ஸ்ரே மூலம் வெள்ளை பூச்சை நோய்த்தொற்றைக் கண்டறியலாம். வெள்ளை பூஞ்சையின் அறிகுறிகள் பின்வருமாறு:

* இருமல்

* காய்ச்சல்

* வயிற்றுப்போக்கு

* நுரையீரலில் கரும்புள்ளிகளுடன் ஆக்சிஜன் அளவு குறைவது

* வீக்கம்

* நோய்த்தொற்றுகள்

* தொடர்ச்சியான தலைவலி

* வலிகள்

மஞ்சள் பூஞ்சையின் அறிகுறிகள்

மஞ்சள் பூஞ்சையின் அறிகுறிகள்

மஞ்சள் பூஞ்சையின் சில முக்கிய அறிகுறிகள் சோர்வு, மோசமான பசி அல்லது பசியின்மை, எடை இழப்பு அல்லது மோசமான மெட்டபாலிசம் மற்றும் கண்கள் சுருங்கி இருப்பது. மஞ்சள் பூஞ்சையின் பிற தீவிர அறிகுறிகள் பின்வருமாறு:

* நிமோனிடிஸின் ஹைபர்சென்சிட்டிவிட்டி

* குழியுடன் நிமோனியா

* பூஞ்சை சுவருடன் நிமோனியா

* குழி மற்றும் பூஞ்சை சுவருடன் நிமோனியா

கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சை தொற்றிற்கான சிகிச்சைகள்:

கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சை தொற்றிற்கான சிகிச்சைகள்:

கருப்பு பூஞ்சை தொற்றிற்கான சிகிச்சைகள்

கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒரு ENT நிபுணரை அணுக வேண்டும் மற்றும் மூளையை ஒரு MRI ஸ்கேன் செய்ய வேண்டும். இத்தொற்றை உறுதிப்படுத்த சி.டி ஸ்கேன் அல்லது இரத்த பரிசோதனை என்று வேறு எதுவும் தேவையில்லை. ஆம்போடெரிசின் (Amphotericin) மற்றும் பிசவகோனசோல் (Bisavaconazole) ஆகியவை கருப்பு பூஞ்சை நோயாளிகளுக்கு வழங்கப்படும் பொதுவான மருந்துகள் ஆகும். நோய்த்தொற்று எவ்வளவு தூரம் பரவியது என்பதைப் பொறுத்து மருத்துவர் அறுவை சிகிச்சை செய்யலாம்.

வெள்ளை பூஞ்சை தொற்றிற்கான சிகிச்சைகள்

வெள்ளை பூஞ்சை தொற்றிற்கான சிகிச்சைகள்

வெள்ளை பூஞ்சை தொற்று பொதுவாக கிடைக்கக்கூடிய பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளைக் கொண்டே குணப்படுத்தக்கூடியது மற்றும் இதற்கு கருப்பு பூஞ்சை போன்ற விலையுயர்ந்த ஊசி தேவையில்லை. இந்த பூஞ்சை தொற்றுக்கு சர்க்கரை நோயுடன் நேரடி தொடர்பு இல்லை. ஆனால் சர்க்கரை நோயாளிகளுக்கு பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளுக்கான வாய்ப்புள்ளதால், இத்தொற்று ஏற்படவும் வாய்ப்புள்ளது.

மஞ்சள் பூஞ்சை தொற்றிற்கான சிகிச்சைகள்

மஞ்சள் பூஞ்சை தொற்றிற்கான சிகிச்சைகள்

மஞ்சள் பூஞ்சை தொற்றிற்கு அறியப்பட்ட ஒரே சிகிச்சை ஆம்போடெரிசின் பி ஊசி ஆகும். இது ஒரு பூஞ்சை எதிர்ப்பு மருந்து மற்றும் இது கருப்பு பூஞ்டிச தொற்றிற்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்த தொற்றிற்கான அறிகுறிகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் மற்றும் நோயாளிகளை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

மூன்று பூஞ்சை தொற்றுகளுக்குமான தடுப்பு நடவடிக்கைகள்

மூன்று பூஞ்சை தொற்றுகளுக்குமான தடுப்பு நடவடிக்கைகள்

* பூஞ்சை தொற்றானது பொதுவாக மோசமான சுகாதாரத்தால் பரவுகிறது. எனவே நல்ல சுகாதார பழக்கங்களைக் கொண்டிருப்பது மிகவும் அவசியம். அதோடு உங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பூஞ்சை அல்லது பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்க வீட்டில் உள்ள கெட்டுப் போன உணவுப் பொருட்களை அவ்வப்போது அகற்ற வேண்டும்.

* ஈரப்பதம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே உங்கள் ஈரப்பதம் அளவை 30% முதல் 40% வரை வைத்திருங்கள்.

* மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில், பூஞ்சை தொற்றுகளைத் தடுக்க சிறந்த வழி வென்டிலேட்டர்கள்/ஆக்ஸிஜன் சிலிண்டர்களை சுத்தமாக வைத்திருப்பது ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Black Fungus vs White Fungus vs Yellow Fungus - Signs, Symptoms And Differences in Tamil

Black Fungus vs White Fungus vs Yellow Fungus Differences in Tamil: Let us understand the 3 fungal infections and their signs, symptoms and treatment.
Desktop Bottom Promotion