Just In
- 9 hrs ago
க்ரீமி சிக்கன் கிரேவி
- 10 hrs ago
கொரோனா உடலில் தீவிரமாக பரவிவிட்டது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்... சீக்கிரம் ஹாஸ்பிடலுக்கு போங்க...!
- 14 hrs ago
வார ராசிபலன் (18.04.2021 முதல் 24.04.2021 வரை) - இந்த வாரம் அலுவலக வேலையில் கூடுதல் கவனம் தேவை…
- 15 hrs ago
இன்றைய ராசிப்பலன் (18.04.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவு எதையும் எடுக்கக்கூடாது…
Don't Miss
- Finance
கடும் சரிவில் பிட்காயின்.. இன்று மட்டும் 15% மேலாக வீழ்ச்சி.. கவலையில் முதலீட்டாளர்கள் !
- Sports
மார்கன், ரஸ்ஸல் விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரம்... பர்ப்பிள் கேப் ஓட்டத்தில் முதலிடத்தில் ஆர்சிபி பௌலர்!
- News
50 சதவீத விலை குறைப்பு.. குவிந்த மக்கள்.. திறப்பு விழா அன்றே மூடுவிழா கண்ட பிரியாணி கடை!
- Movies
வைரமுத்துவின் நாட்படு தேறல்… நாக்கு செவந்தவரே பாடல் வெளியானது!
- Automobiles
யம்மாடியோவ்... மஹிந்திரா மோஜோ பைக்கா இது!! சத்தியமா நம்ப முடியல
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மதுரையிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தினமும் ஒரு துண்டு பனை வெல்லத்தை சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் அற்புதங்கள் என்னென்ன தெரியுமா?
இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் பொதுவாக இருக்கும் மற்றும் பயன்படுத்தப்படும் ஓர் பொருள் தான் வெல்லம். இது சுவைக்காக சர்க்கரைக்கு மாற்றாக பல்வேறு சமையல்களில் பயன்படுத்தப்படுகிறது. அதோடு வெல்லத்தில் பனை வெல்லம், கரும்பு வெல்லம் என பல வகைகள் உள்ளன. இதில் பேரிச்சம் பனையில் இருந்து தயாரிக்கப்படுவது தான் பனை வெல்லம் மற்றும் கரும்பில் இருந்து தயாரிக்கப்படுவது கரும்பு வெல்லம் ஆகும்.
இதில் பனை வெல்லம் மிகவும் சுவையானது மட்டுமின்றி ஆரோக்கியமானதும் கூட. மேலும் இதன் மருத்துவ குணங்களால் இது மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த பனை வெல்லத்தை குளிர்காலத்தில் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் தினமும் ஒரு துண்டு பனை வெல்லத்தை சாப்பிடுவதும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இப்போது பனை வெல்லத்தை சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.
MOST READ: வயிற்றில் உள்ள கொழுப்பைக் கரைக்க காலையில் குடிக்க வேண்டிய பானங்கள்!

சளி மற்றும் இருமல்
பனை வெல்லம் வறட்டு இருமல் மற்றும் சளிக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது. இது சுவாசப் பாதையில் உள்ள சளியை கரையச் செய்து இருமலில் இருந்து விடுபட உதவும். அதோடு இது ஆஸ்துமா போன்ற சுவாச பிரச்சனைகளில் அவஸ்தைப்படுபவர்களுக்கு மிகவும் நல்லது.

ஊட்டச்சத்துக்களின் கிடங்கு
பனை வெல்லஙத்தில் உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ன. குறிப்பாக குளிர்காலத்தில் உடலில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்க தேவையான சத்துக்கள் உள்ளன. அதில் இரத்தத்தின் உற்பத்திக்குத் தேவையான இரும்புச்சத்தும், நரம்பு மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு உதவும் மக்னீசியம் சத்தும் குறிப்பிடத்தக்கவை.

எடை இழப்பிற்கு உதவும்
பனை வெல்லத்தில் பொட்டாசியம் ஏராளமான அளவில் உள்ளது. இது உடலில் தேங்கியுள்ள கெட்ட நீரைக் குறைப்பதோடு, எடை இழப்பை ஊக்குவிக்க உதவும் வயிற்றுப் உப்புசத்தையும் குறைக்கும். எனவே நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இறங்கியிருந்தால், பனை வெல்லத்தை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஆற்றல் அதிகரிக்கும்
உங்கள் உடலில் ஆற்றல் குறைவாக இருப்பது போல் உணரும் போது, பனை வெல்லத்தை சிறிது சாப்பிடுஙகள். இதில் உள்ள கலப்பு கார்போஹைட்ரேட்டுகள், வழக்கமான சர்க்கரையை விட வேகமாக உணவை ஜீரணிக்க உதவுகிறது. தினமும் பனை வெல்லத்தை ஒரு துண்டு சாப்பிட்டு வந்தால், உடலில் ஆற்றல் சீரான அளவில் இருக்கும். இதனால் நீண்ட நேரம் சுறுசுறுப்பாக செயல்பட முடியும்.

ஆரோக்கியமான செரிமானம்
குளிர்காலத்தில் அனைத்து வகையான பிரச்சனைகளும் எளிதில் வரக்கூடும். ஆனால் பனை வெல்லத்தை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், செரிமானம் சிறப்பாக நடைபெற்று, வயிற்று வலி போன்ற செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது. ஏனெனில் இது வயிற்றுக்குள் செரிமான நொதிகளை செயல்படுத்துகிறது மற்றும் குடல் பகுதிகளை சுத்தம் செய்ய உதவுகிறது.

மூட்டு வலி குறையும்
பனை வெல்லம் எலும்புகளை வலிமையாக்குகிறது. எனவே பனை வெல்லத்தை அன்றாடம் உணவில் சேர்த்து வந்தால், மூட்டு வலி மற்றும் பிற எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் குறையும். ஏனெனில் பனை வெல்லத்தில் எலும்புகளை வலிமையாக்கும் மற்றும் ஆரோக்கியமாக்கும் கால்சியம் அதிகளவில் உள்ளது.