For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலையில் எழுந்ததும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுவதால் உடலில் நிகழும் அற்புதங்கள் குறித்து தெரியுமா?

நெய்யை அன்றாட உணவில் தினமும் ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. அதுவும் ஒரு ஸ்பூன் நெய்யை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடுவது, உடல் எடையை இயற்கை வழியில் குறைக்க உதவுகிறது.

|

இந்தியாவின் பண்டைய மருத்துவ முறையான ஆயுர்வேதத்தின் படி, காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. முக்கியமாக இது உடலில் உள்ள ஒவ்வொரு செல்களுக்கும் ஊட்டமளிக்கிறது. என்ன தான் நெய் உணவிற்கு நல்ல சுவையையும், மணத்தையும் தந்தாலும், இதில் கொழுப்புக்களும் உள்ளது. அதுவும் நெய்யில் 62% சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. இது உடலில் தீங்கு ஏதும் விளைவிக்காத நல்ல கொழுப்புக்களை உயர்த்துகிறது. மேலும் நெய்யில் ஒமேகா-3, ஒமேகா-6 மற்றும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன.

Benefits Of Eating 1 Spoon of Ghee Daily On An Empty Stomach In Tamil

இத்தகைய நெய்யை அன்றாட உணவில் தினமும் ஒரு ஸ்பூன் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. அதுவும் ஒரு ஸ்பூன் நெய்யை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடுவது, உடல் எடையை இயற்கை வழியில் குறைக்க உதவுகிறது. குறிப்பாக இதில் உள்ள பியூட்ரிக் அமிலம் மற்றும் நடுத்தர சங்கிலி ட்ரைகிளிசரைடுகள் உடலில் உள்ள கடினமான கொழுப்புக்களைக் கரைத்து வெளியேற்ற உதவுகிறது. ஆனால் எவ்வளவு நன்மைகள் நெய்யில் நிறைந்துள்ளதோ, அதே அளவில் அது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே தான் எதையும் அளவாக எடுக்க வேண்டும். இப்போது ஒருவர் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்னவென்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொலிவான பட்டுப் போன்ற சருமம்

பொலிவான பட்டுப் போன்ற சருமம்

நெய் ஒரு நேச்சுரல் மாய்ஸ்சுரைசர். இந்த நெய்யை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், அது உடலை உள்ளிருந்து சுத்தப்படுத்துகிறது. மேலும் இது சருமத்தை ஈரப்பதமாக்குகிறது மற்றும் சருமத்தில் உள்ள முகப்பரு மற்றும் சுருக்கங்களைக் குறைக்கிறது. சிறப்பான பலன் கிடைக்க, காலையில் எழுந்ததும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டதும், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை குடிக்க வேண்டும்.

இரத்த ஓட்டம் சீராகும்

இரத்த ஓட்டம் சீராகும்

தினமும் காலையில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுவது இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களான தமனிகள் தடிமனாவதைத் தடுத்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் இது உடலில் உள்ள செல்கள் ப்ரீ ராடிக்கல்களால் சேதமடைவதைத் தடுக்கிறது. இவை அனைத்தும் இதய ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவைக் கொண்டிருக்கின்றன.

எலும்பு மூட்டுகளுக்கு நல்லது

எலும்பு மூட்டுகளுக்கு நல்லது

நெய் மூட்டுக்களை இயற்கையாக உயவூட்டுகிறது. மேலும் இது கால்சியம் உறிஞ்சுவதை அதிகரிக்கிறது. நெய்யில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இது ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவதைத் தடுக்கிறது மற்றும் ஆர்த்ரிடிஸ் உள்ளவர்களுக்கு நல்லது. 50 வயதிற்கு மேற்பட்ட ஆஸ்டியோஆர்த்ரிடிஸ் உள்ள பெண்கள் நெய்யை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இதனால், உடலமைப்பு வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். அதுவும் காலையில் எழுந்ததும் தினமும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுவது இன்னமும் நல்லது.

கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்

கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்

வீட்டில் தயாரிக்கும் நெய்யில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்ற உதவுகிறது. மேலும் இது உடலை நச்சு நீக்கம் செய்கிறது. அதோடு இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் பல நாள்பட்ட நோய்களைத் தடுக்கிறது.

மூளைக்கு நல்லது

மூளைக்கு நல்லது

மூளை செல்களின் ஆரோக்கியத்திற்கும், சீரான செயல்பாட்டிற்கும் நல்ல கொழுப்புக்கள் அவசியம். இந்த நல்ல கொழுப்புக்கள் நெய்யில் உள்ளது. மேலும் இதில் புரோட்டீனும் உள்ளது. இது நரம்பியக்கடத்திகளின் இனப்பெருக்கத்தை தூண்டுகிறது. அதோடு நரம்புகளின் முடிவுகளை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. ஆகவே உங்கள் மூளை ஆரோக்கியமாக செயல்பட வேண்டுமென ஆசைப்பட்டால், காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுங்கள்.

ஆரோக்கியமான தலைமுடி

ஆரோக்கியமான தலைமுடி

காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுவது தலைமுடிக்கு நல்ல பொலியை அளிக்கிறது. மேலும் இது மயிர்கால்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது மற்றும் முடியின் வேர்களை வலுவாக்குகிறது. முக்கியாக பொடுகு தொல்லையில் இருந்து விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits Of Eating 1 Spoon of Ghee Daily On An Empty Stomach In Tamil

Here are some health benefits of eating 1 spoon of ghee on an empty stomach. Read on to know more...
Story first published: Tuesday, July 19, 2022, 17:54 [IST]
Desktop Bottom Promotion