For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலும், மனமும் எப்போதும் புத்துணர்ச்சியோடு இருக்கணுமா? அப்ப இத மட்டும் தவறாம செய்யுங்க...

உண்மையில் உங்கள் உடம்பும் மனமும் ஆரோக்கியமாக இருப்பதே சிறந்த வாழ்க்கை முறை. அதை நோக்கி ஒவ்வொருவரும் போக வேண்டும். அப்பொழுது தான் உங்கள் வாழ்க்கை அழகானதாகவும், சந்தோஷமாகவும் அமையும்.

|

இந்த நவீன காலத்தில் எல்லோரும் மன அழுத்தம், பயம், பதட்டம் மற்றும் அழுத்தம் என்று ஏராளமான பிரச்சனைகளை சந்திக்கின்றனர். சரி இதையெல்லாம் விட்டு வெளியேற நினைத்தாலும் அவர்களுக்கு நேரமில்லை. ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கி அவர்கள் போக நினைத்தால் கூட வேலை வேலை என்று நேரமே கிடைக்காமல் போகிறது. இதனால் அவர்களுக்கு தங்கள் உடலையோ மனதையோ ஆறுதல் படுத்த வாய்ப்பே கிடைப்பதில்லை.

5 Life Hacks For A Refreshed Body, Mind And Soul

உண்மையில் உங்கள் உடம்பும் மனமும் ஆரோக்கியமாக இருப்பதே சிறந்த வாழ்க்கை முறை. அதை நோக்கி ஒவ்வொருவரும் போக வேண்டும். அப்பொழுது தான் உங்கள் வாழ்க்கை அழகானதாகவும், சந்தோஷமாகவும் அமையும். அந்த வகையில் உங்கள் மனதையும் உடலையும் புத்துணர்ச்சியுடன் வைக்க இந்த 5 விஷயங்கள் பெரிதும் உதவியாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நடைப்பயணம்

நடைப்பயணம்

தினமும் காலார நடப்பது உங்கள் உடம்பை உற்சாகமாக வைக்க உதவுகிறது. ஏனெனில் நடைப்பயணம் மூலம் நமக்கு இரண்டு நல்ல விஷயங்கள் நடக்கின்றன. காலையில் எழுந்து நடைபயிற்சி மேற்கொள்ளும் போது சுத்தமான ஆக்ஸிஜன் காற்றை உடம்பு சுவாசிக்க முடியும். இது நமது மூளைக்கு போதுமான ஆக்ஸிஜனை வழங்குகிறது. இது நமது தசைகளின் நீட்சித் தன்மைக்கு உதவுகிறது. வெறும் 10 - 15 நிமிடங்கள் நடந்தாலே எனர்ஜட்டிக்காகவும், உற்சாகமாகவும் நாள் முழுவதும் திகழ்வீர்கள்.

மெய்யான உலகத்திற்கு வாருங்கள்

மெய்யான உலகத்திற்கு வாருங்கள்

இப்பொழுது எல்லாம் நாம் நிறைய நேரம் நேரத்தை கழிப்பது சோஷியல் மீடியாக்களில் மட்டுமே. இந்த மாதிரி சோஷியல் மீடியாவில் மூழ்கிக் கிடப்பதை விடுத்து உங்கள் நடப்பு வேலைகளில் கவனம் செலுத்தலாம். நிஜ உலகிற்கு வந்து மனிதர்களோடு சகஜமாக பழக முயலலாம். முதலில் உங்கள் மொபைலில் உள்ள தேவையில்லாத ஆப்களை டெலிட் செய்யுங்கள். இதனால் அடிக்கடி தேவையில்லாத மெசேஜ்கள் என்று உங்களை தொந்தரவு செய்யக் கூடும். உங்கள் உடல் நலத்தை பேணுவதில் கவனம் செலுத்த முற்படுங்கள்.

பல பணிகளை செய்யாதீர்கள்

பல பணிகளை செய்யாதீர்கள்

மக்கள் பல நேரங்களில் எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுக் கொண்டு டென்ஷனுக்கு உள்ளாகி விடுகிறார்கள். சில நேரங்களில் வேண்டுமானால் அது உங்களுக்கு நன்மை தரலாம். ஆனால் பல நேரங்களில் டென்ஷன் தான் வரும். ஒரே நேரத்தில் இரண்டு படகுகளை வரிசைப்படுத்த முடியாததை போல அங்கொரு கால் இங்கொரு கால் என்று வேலைப் பளுவை இழக்காதீர்கள். பலபணிகளை செய்வது உங்களுக்கு திருப்தியான ஒரு முடிவை தராது. எல்லாம் அரைகுறையாக நிற்பது போன்று தோன்றும். சாமுவேல் ஸ்மைல்ஸின் வார்த்தைகள் கூறுவது "பல விஷயங்களைச் செய்வதற்கான குறுகிய வழி ஒரு நேரத்தில் ஒரு காரியத்தைச் செய்வதே சிறந்தது" என்பதாகும்.

தியானம் உதவுகிறது

தியானம் உதவுகிறது

தியானம் உங்களின் உள்ளுணர்வை உணர ஒரு அரிய வாய்ப்பு. உங்களால் கையாள முடியாத சூழ்நிலை, மன அழுத்தம் போன்றவற்றிற்கு தியானம் சிறந்தது. தியானம் செய்த பல பேர்கள் நேர்மறையான தீர்வை கண்டுள்ளனர். தியானம் செய்யும் போது இரத்த ஓட்டம் மேம்படுகிறது, மூளை சிறப்பாக செயல்படுகிறது, மன அழுத்த ஹார்மோன் குறைக்கப்படுகிறது. எனவே தினமும் 15 நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்து தியானம் செய்யுங்கள். இது உங்கள் உடலையும் மனதையும் புத்துணர்வாக வைக்கும்.

காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி

காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி

காலையில் எழுந்ததும் உங்கள் உடம்பிற்கு லேசான உடற்பயிற்சி செய்வது நல்லது. இதற்கு நீங்கள் நீண்ட நேரம் த்ரட் மில்லில் ஓட வேண்டிய அவசியம் இல்லை. சில முறை சூரிய நமஸ்காரம் போன்ற யோகாக்களை செய்தாலே போதும்.

மேற்கண்ட டிப்ஸ்கள் மூலம் உங்கள் மனதையும் உடல் நலத்தையும் ஆரோக்கியமாக புத்துணர்வோடு பேண முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Life Hacks For A Refreshed Body, Mind And Soul

Here are some life hacks for a refreshed body, mind and soul. Read on...
Desktop Bottom Promotion