For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த உடற்பயிற்சியை தினமும் செஞ்சா வாழ்நாள் அதிகரிக்கும் தெரியுமா?

நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அதே நேரத்தில் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும். அதற்கு முதலில் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும். இரண்டாவதாக நமது உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

|

நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அதே நேரத்தில் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும். அதற்கு முதலில் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும். இரண்டாவதாக நமது உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டும் நம்மிடம் இருந்தால், இதை வைத்தே நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் மற்றும் நீண்ட ஆயுளுடன் வாழ்வோம் என்று சொல்லிவிட முடியும்.

MOST READ: மீண்டும் வெடிக்கத் தொடங்கியுள்ள எபோலா வைரஸ் குறித்து கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள்!

மூன்றாவதாக ஒரு முக்கியமான அம்சம் உள்ளது. அது நமது கை பிடியின் வலிமையாகும். கை பிடியின் வலிமையை வைத்தும் நாம் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ்வோமா என்று சொல்ல முடியும். நமது கை பிடியின் வலிமையானது ஊறுகாய் இருக்கும் பாத்திரத்தின் மூடியைத் திறப்பதில் அல்ல. மாறாக அதைவிட வலிமையாக இருக்க வேண்டும். கை பிடியின் வலிமை குறைந்தால் எலும்பு முறிவு, மனநல குறைபாடு, மனச்சோா்வு, தூங்குவதில் பிரச்சினை, இரண்டாம் வகை சா்க்கரை நோய் மற்றும் விரைவில் மரணம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

MOST READ: மூக்கை வைத்தே ஒருவர் எப்படிப்பட்டவர் என்பதை சொல்ல முடியும் தெரியுமா? இதுல உங்க மூக்கு எந்த மாதிரி?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏன் கைப்பிடி வலிமை முக்கியம்?

ஏன் கைப்பிடி வலிமை முக்கியம்?

ஒருவருக்கு இதய நோய் அல்லது மற்ற ஏதாவது நோய்களின் மூலம் இறப்பு வருவதை அவரது கை பிடியின் வலிமையைக் கொண்டு முன்பே சொல்ல முடியும் என்று த லான்செட் பத்திாிக்கையில் வந்த ஆய்வு கூறுகிறது.

ஏனெனில் ஒருவருடைய கை பிடியின் வலிமை அவருடைய ஒட்டு மொத்த தசையின் அளவு மற்றும் அதன் வலிமையில் அடங்கி இருக்கிறது. உடலில் உள்ள ஒவ்வொரு பாகமும் இயங்க தசைதான் முக்கியமான காரணியாக இருக்கிறது.

ஒருவா் 30 வயதைக் கடக்கும் போது அவருடைய தசையின் அளவு மற்றும் அதன் வலிமை குறையத் தொடங்குகிறது. அதைத் தடுக்கக்கூடிய உடற்பயிற்சிகளைச் செய்து வந்தால் அவை நமது தசைகளில் செயல்பட்டு தசையின் அளவு குறையாமல் பாா்த்துக் கொள்ளும். மேலும் நம்மால் அதிகமான அளவு தசையை தக்கவைத்துக் கொள்ள முடிந்தால், அதன் மூலம் மேலும் அதிகமான அளவு தசையை அதிகாிக்க முடியும் என்று நிபுணா்கள் தொிவிக்கின்றனா்.

நமது தசையின் அளவை அதிகாித்து அதன் மூலம் நமது ஆயுட்காலத்தை நீட்டிக்க விரும்பினால் பின்வரும் உடற்பயிற்சிகளைச் செய்து வரலாம்.

விவசாயிகளின் நடை (Farmer's carry)

விவசாயிகளின் நடை (Farmer's carry)

விவசாயிகள் விவசாயக் கருவிகளைக் கைகளில் பிடித்துக் கொண்டு நடப்பது போல் செய்யும் உடற்பயிற்சி விவசாயிகளின் நடை என்று அழைக்கப்படுகிறது. அதாவது இந்த உடற்பயிற்சியைச் செய்வதற்கு முதலில் கால்களை அகற்றி நேராக நின்று கொள்ள வேண்டும். நம்முடைய இரண்டு பக்கமும் நம்மால் தூக்க முடிந்த பளுவை தரையில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் குந்துகாலிட்டு குனிந்து அதே நேரத்தில் முதுவை வளைக்காமல் நேராக வைத்து, வயிற்றையும் இறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது நமது இரண்டு பக்கமும் ஏற்கனவே வைத்திருந்த பளுக்களை இரண்டு கைகளாலும் எடுத்துக் கொள்ள வேண்டும். பளுக்கள் நமது தொடைகளுக்கு பக்கவாட்டில் இருக்க வேண்டும்.

இவ்வாறு இரண்டு கைகளிலும் பளுக்களைப் பிடித்துக் கொண்டு மெதுவாக நடக்க வேண்டும். நமது கைகளில் வலி மற்றும் நடுக்கம் ஏற்பட்டு அந்தப் பளுக்களை நமது கைகள் விடும் வரை நடக்க வேண்டும். பின் நடப்பதை நிறுத்திவிட்டு அந்த பளுக்களைத் தரையில் வைக்க வேண்டும். இவ்வாறாக மூன்று முறை பளுக்களைக் கைகளில் தூக்கிக் கொண்டு நடக்கலாம்.

டெட்லிஃப்ட்

டெட்லிஃப்ட்

டெட்லிஃப்ட் உடற்பயிற்சியைச் செய்வதற்கு முதலில் கால்களை அகற்றி நின்று கொள்ள வேண்டும். ஒரு இரும்பு கம்பியின் இரண்டு பக்கங்களிலும் பளுக்களை பொருத்தி வைத்து அதை நமக்கு முன்பாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் மெதுவாக பிட்டத்தையும் இடுப்பையும் பின்பக்கம் தள்ளி முன்பக்கமாகக் குனிய வேண்டும். ஆனால் முதுகு வளையாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். அதே நேரம் வயிற்றை இறுக்கி வைத்துக் கொண்டு கால் முட்டிகளை மெதுவாக வளைக்க வேண்டும்.

இப்போது நமக்கு முன்பாக இருக்கும் பளுக்களை இரண்டு கைகளாலும் பிடித்துத் தூக்க வேண்டும். நமது முட்டி வரை தூக்கிக் கொண்டு நிமிர வேண்டும். கைகள் வளையாமல் நேராக இருக்க வேண்டும். பின் குனிந்து பளுக்களை தரையில் வைக்க வேண்டும். இவ்வாறு தொடா்ந்து 8 முதல் 12 தடவைகள் இவ்வாறு பளுவைத் தூக்கிக் கொண்டு குனிந்து நிமிரலாம்.

இரும்பு கம்பத்தில் தொங்குதல்

இரும்பு கம்பத்தில் தொங்குதல்

நமது தலைக்கு மேல் இருக்கும் இரும்பு கம்பத்தை இரண்டு கைகளாலும் பிடித்து தொங்க வேண்டும். கால்கள் தரையில் படாமல் இருக்க வேண்டும். இரண்டு கால் பாதங்களும் சற்று முன்புறம் இருக்குமாறு வைத்து உடல் ஆங்கில எழுத்தான சி வடிவில் இருப்பது போல் வைத்துக் கொள்ள வேண்டும். நம்மால் முடிந்த அளவு தொங்கலாம். இவ்வாறு பலமுறைத் தொங்கலாம்.

கை பிடியின் வலிமையை எவ்வாறு அதிகாிப்பது?

கை பிடியின் வலிமையை எவ்வாறு அதிகாிப்பது?

பந்து அல்லது மற்ற கருவிகளை இறுக்கிப் பிடிப்பதன் மூலம் நமது கை பிடியின் வலிமையை அதிகாிப்பதால் நீண்ட நாள் நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்க முடியாது. மாறாக மேற்சொன்ன கடினமான உடற்பயிற்சிகளைச் செய்வதன் மூலம் நமது கை பிடியின் வலிமையை அதிகாிக்க வேண்டும். அதன் மூலம் நமது தசையையும் வலுவாக்கி முழுமையான ஆரோக்கியத்தைப் பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

3 Exercises That Can Help You Live Longer

Here are three exercises to increase your muscle mass and thus longevity. Read on...
Desktop Bottom Promotion