For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் நுரையீரலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்ற இந்த ஒரு எளிய சமையலறை பொருள் போதும் ...!

காற்று மாசுபட்டால் நம் உடலில் பல ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது, அதில் மிகவும் முக்கியமான பிரச்சினை நுரையீரலில் ஏற்படும் பாதிப்பாகும்.

|

இந்தியாவில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் ஒரு முக்கிய பிரச்சினை காற்று மாசுபாடு ஆகும். காற்று மாசுபட்டால் இந்தியாவின் சில நகரங்கள் மனிதர்கள் வாழ தகுதியற்ற நகரங்களாக மாறிக்கொண்டே வருகிறது. அதில் முதலிடம் வகிப்பது டெல்லிதான். அதனை தொடர்ந்து மும்பை, சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களிலும் காற்றின் தரம் குறைந்துகொண்டே வருகிறது. இந்த பேரழிவு மனிதர்கள் நம்மால் ஏற்படுத்தப்பட்டது என்பதை மறந்துவிடாதீர்கள்.

simple ways to keep your lungs safe from toxic air pollution

காற்று மாசுபட்டால் நம் உடலில் பல ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது, அதில் மிகவும் முக்கியமான பிரச்சினை நுரையீரலில் ஏற்படும் பாதிப்பாகும். டெல்லியில் சில நிமிடங்கள் காற்றை சுவாசிப்பது பல சிகரெட்டுகள் குடிப்பதனால் ஏற்படுவது போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று ஆய்வுகள் கூறுகிறது. நாம் ஏற்படுத்தும் காற்று மாசுபாட்டால் இந்த நிலை விரைவில் மற்ற நகரங்களுக்கும் நிச்சயம் வந்துவிடும். இப்படிப்பட்ட காற்றை சுவாசிப்பதால் ஏற்படும் முதல் அபாயம் நுரையீரல் புற்றுநோய்தான். இந்த பதிவில் உங்கள் நுரையீரலை காற்று மாசுபாட்டிலிருந்து எப்படி பாதுகாக்கலாம் என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வீட்டிற்குள்ளேயே இருங்கள்

வீட்டிற்குள்ளேயே இருங்கள்

வரும் முன் காப்பது நல்லது என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். எனவே காற்று மாசுபாட்டிலிருந்து உங்களை பாதுகாக்க முதல் வழி வெளியில் சென்று மாசடைந்த காற்றை சுவாசிக்காமல் முடிந்தளவு வீட்டிற்குள்ளேயே இருப்பதாகும். குறிப்பாக அதிகாலை நேரத்தில்தான் காற்று மாசுபாடு மிகவும் அதிகமாக இருக்குமென ஆய்வுகள் கூறுகிறது. எனவே அந்த சமயத்தில் வெளியே செல்வதை தவிருங்கள்.

உட்புறங்களில் உடற்பயிற்சி

உட்புறங்களில் உடற்பயிற்சி

நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது வழக்கத்தை விட அதிக காற்றை சுவாசிப்பீர்கள். எனவே நீங்கள் வீட்டிற்குள்ளேயே உடற்பயிற்சி செய்வது நல்லது என அறிவுறுத்தப்படுகிறது. அதிகாலை பொழுதில் குழந்தைகளை வெளியே செல்ல அனுமதிக்காதீர்கள், அது அவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

காற்று மாசுபாட்டை கணக்கிடுங்கள்

காற்று மாசுபாட்டை கணக்கிடுங்கள்

நீங்கள் வெளியே செல்வதற்கு முன் காற்று மாசுபாட்டின் அளவை கணக்கீடு செய்துகொண்டு வெளியே செல்வது அவசியம். டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் வாழ்பவர்களாக இருந்தால் நீங்கள் நிச்சயம் வெளியே செல்வதற்கு முன் காற்றில் உள்ள மாசின் அளவை கணக்கிட்டுவிட்டு அதற்கேற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் செல்லவும்.

மாசு எதிர்ப்பு முகமூடி

மாசு எதிர்ப்பு முகமூடி

உங்கள் மூக்கை மட்டும் துணியை வைத்து மூடிக்கொண்டால் காற்று மாசுபாட்டிலிருந்து தப்பித்து கொள்ளலாம் என்று நீங்கள் நம்புபவராக இருந்தால் அது உங்கள் அறியாமையின் அறிகுறியாகும். போக்குவரத்து காவலர்கள் மாட்டியிருக்கும் சிறிய முகமூடிகள் உங்களை காற்றுமாசுபாட்டில் இருந்து பாதுகாக்கும் என்று நினைக்காதீர்கள். எனவே உங்களை பாதுகாக்கும் மாசு எதிர்ப்பு முகமூடி எதுவென நன்கு ஆராய்ந்து அதனை வாங்கி பயன்படுத்துங்கள்.

MOST READ: உங்கள் ராசிப்படி இந்த ஆண்டின் எந்த மாதம் உங்களுக்கு சோதனைகள் நிறைந்த மாதமாக இருக்கும் தெரியுமா?

வெல்லம் சாப்பிடுங்கள்

வெல்லம் சாப்பிடுங்கள்

இது ஒரு மிகசிறந்த வழி ஆகும். வெல்லம் சாப்பிடுவது மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால் உங்கள் உடலில் சேரும் நச்சுப்பொருட்களை வெளியேற்றும். வெல்லம் ஒரு இயற்கை சுத்திகரிப்பான் ஆகும், மேலும் வெல்லம் சாப்பிடுவது ஆஸ்துமா மற்றும் சுவாச பிரச்சினைகளின் அறிகுறிகளை குணப்படுத்தக்கூடும். மேலும் இது பல ஒவ்வாமைகளை குணப்படுத்தக்கூடும்.

யூகலிப்டஸ் எண்ணெய்

யூகலிப்டஸ் எண்ணெய்

யூகலிப்டஸ் எண்ணெய் உங்கள் உடலில் உள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றக்கூடும். எனவே நீங்கள் நீராவி பிடிக்கும்போது அதில் சில துளிகள் யூகலிப்டஸ் எண்ணெய் கலந்து பிடிப்பது உங்களின் சுவாசப்பாதைகளில் உள்ள தடைகளை சரிசெய்கிறது.

இஞ்சி

இஞ்சி

காற்று மாசுபாட்டால் உங்களுக்கு தொண்டை பிரச்சினைகள் ஏற்படும்போது அதனை சரிசெய்ய இஞ்சி மற்றும் துளசியை பயன்படுத்துவது உங்கள் தொண்டை பிரச்சினைகளை குணமாக்கும்.

காற்றின் தரத்தை சோதிக்கும் ஆப்

காற்றின் தரத்தை சோதிக்கும் ஆப்

தொழில்நுட்பத்தால் பல பிரச்சினைகள் இருந்தாலும் அதில் சில நன்மைகள் இருக்கத்தான் செய்கிறது. உங்கள் போனில் காற்றின் தரத்தை சோதிக்கும் ஆப்களை பதிவு செய்துகொள்ளுங்கள். இந்த ஆப் மூலம் வீட்டிலிருந்து வெளியே செல்வதற்கு முன்னரே காற்றின் தரத்தை சோதித்துக் கொள்ளலாம்.

MOST READ: இந்த செயல்களை செய்பவர்களின் மரணம் மிகவும் வலி நிறைந்ததாக இருக்கும் என்று கருடபுராணம் கூறுகிறது...!

செடிகள்

செடிகள்

செடிகள் வளர்ப்பது உங்களுக்கு சிறந்த பலன்களை அளிக்கும். அந்த வகையில் சில செடிகளை வீட்டிற்குள் வளர்ப்பது உங்கள் நீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்திகரிக்க உதவும். எனவே மூங்கில், அத்திமரம் போன்றவற்றை உங்கள் வீட்டில் வளர்ப்பதை வழக்கமாக கொள்ளுங்கள். இது நீங்கள் சுவாசிக்கும் காற்றை வடிகட்டி அதன் தரத்தை அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

simple ways to keep your lungs safe from toxic air pollution

The air quality hits a new low every passing year in India. It is severely harmful to our health in a lot of other ways as well.
Desktop Bottom Promotion