For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த உணவுப்பொருள்களை உங்கள் ஃப்ரீஸரில் வைத்து சாப்பிடுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் தெரியுமா?

சிலர் உணவுப்பொருட்கள் சீக்கிரம் கெட்டு விடக்கூடாது என்பதற்காக உணவை ஃப்ரீஜரில் வைக்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். இது உணவை ஃப்ரிட்ஜில் வைப்பதை விட மிகவும் மோசமான செயலாகும்.

|

இன்றைய காலகட்டத்தில் கிட்டதட்ட அனைவரின் வீட்டிலும் இருக்கும் ஒரு பொருள் என்றால் அது ஃப்ரிட்ஜ்தான். சமைத்த உணவிலிருந்து சமைக்கப்போகும் காய்கறி வரை என அனைத்தையும் சேமித்து வைக்கும் இடமாக பிரிட்ஜ் மாறிவிட்டது. அன்று சமைத்த உணவை அன்றே சாப்பிட்டு வந்த வரையில் அனைவரும் ஆரோக்கியாமாகத்தான் இருந்தோம். எப்போது இந்த ஃப்ரிட்ஜ் வந்ததோ அப்பொழுதே நமது ஆரோக்கியமும் பறிபோய்விட்டது.

Never keep these healthy foods in freezer

சிலர் உணவுப்பொருட்கள் சீக்கிரம் கெட்டு விடக்கூடாது என்பதற்காக உணவை ஃப்ரீஜரில் வைக்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். இது உணவை ஃப்ரிட்ஜில் வைப்பதை விட மிகவும் மோசமான செயலாகும். ஏனெனில் ஃப்ரீஜரில் உணவை வைக்கும் போது அது ஆரோக்கியமான உணவைக்கூட மோசமான உணவாக மாற்றக்கூடும். இந்த பதிவில் எந்தெந்த உணவுகளை ஃப்ரீஜரில் வைக்கக்கூடாது என்பதை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பால்

பால்

துரதிர்ஷ்டவசமாக பால் என்னும் ஆரோக்கிய பொருளை ஃப்ரீஜரில் வைப்பது அதன் தரத்தை மாற்றும். இது சாப்பிட பாதுகாப்பானது என்றாலும் இந்த பாலை காலை நேர காபிக்கோ அல்லது டீக்கோ பயன்படுத்தக்கூடாது.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கில் அதிக நீர்ச்சத்து உள்ளது. ஃப்ரீஜரில் உருளைக்கிழங்கை வைத்து எடுக்கும்போது அது உருளைக்கிழங்கை மென்மையானதாக மாற்றிவிடும். இந்த உருளைக்கிழங்கை சமைக்கும்போது அது உங்களின் உணவின் சுவையை மாற்றும், மேலும் அதில் உள்ள சில சத்துக்களும் வெளியேறுகிறது. பொதுவாக உருளைக்கிழங்கை ப்ரிட்ஜில் வைத்தே சாப்பிடக்கூடாது.

ஓட்டுடன் உடைய முட்டை

ஓட்டுடன் உடைய முட்டை

ஓட்டுடன் உடைய முட்டையை ஃப்ரீஜரில் வைப்பது மிகவும் தவறான செயலாகும். முட்டையில் உள்ள நீர்ச்சத்துக்கள் உறையும்போது அதன் பரப்பளவு அதிகரிக்கும், இதனால் முட்டையின் ஓடு உடையவோ அல்லது பாக்டீரியக்கள் தோற்று ஏற்படவோ வாய்ப்புள்ளது. எனவே ஒருபோதும் முட்டையை ஓட்டுடன் ஃப்ரீஜரில் வைக்காதீர்கள்.

MOST READ: இந்த 5 பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் உங்கள் வீட்டில் ஒருபோதும் வறுமை இருக்காது என்று கிருஷ்ணர் கூறுகிறார்

பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள்

பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள்

அதிக நீர்ச்சத்துள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றை ஒருபோதும் ஃப்ரீஜரில் வைக்காதீர்கள். குறிப்பாக வெள்ளரிக்காய், கீரை, தர்பூசணி போன்ற பொருட்களை ஃப்ரீஜரில் வைத்தால் அவற்றில் உள்ள நீர்சத்துகள் ஐஸ்கட்டிகளை உருவாக்கிவிடும். பிறகு அதனை உபயோகப்படுத்தும்போது அதன் உண்மையான சுவையும், வடிவமும் காணாமல் போயிருக்கும். சில சத்துக்களையும் நீங்கள் இழக்க நேரிடும்.

இறைச்சி

இறைச்சி

ஃப்ரீஜரில் இருந்து எடுத்து சமைத்தது போக மீதமுள்ள இறைச்சியை ஒருபோதும் மீண்டும் ஃப்ரீஜரில் வைக்காதீர்கள். ஏனெனில் அப்படிப்பட்ட இறைச்சிகள் சாதாரண இறைச்சியை விட இரு மடங்கு பாக்டீரியாக்களை ஈர்க்கும். இதற்கு ஒரேவழி தேவைப்படும்போது மட்டும் இறைச்சி வாங்குவதுதான்.

யோகர்ட்

யோகர்ட்

நிபுணர்களின் கருத்துப்படி யோகர்ட் கெட்டுபோவதற்கு முன் அதனை ஃப்ரீஜரில் வைத்து சாப்பிடுவதில் எந்த தவறும் இல்லை. இதில் உள்ள நல்ல செய்தி என்னவென்றால் ஃப்ரீஜரில் வைப்பதால் யோகர்ட்டின் எந்த சத்தும் குறைவதில்லை, ஆனால் அதனை உருகவைக்கும்போது அதன் அமைப்பு மற்றும் க்ரீம் போன்றவற்றை அது இழந்துவிடும். இது உங்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தலாம். ஃப்ரீஜரில் வைக்கப்பட்ட யோகார்ட்டை விட சாதாரண யோகார்ட்டில் நீர்சத்துகள் அதிகம் இருக்கும்.

சாப்பாடு

சாப்பாடு

சாப்பாட்டை வீணாக்க கூடாது என்பதற்காக அதனை ஃப்ரீஜரில் வைக்கும் பழக்கம் பலருக்கும் உள்ளது. ஆனால் இது மிகவும் தவறான ஒரு பழக்கமாகும். இதனால் ஆபத்து இல்லையென்றாலும், ஆனால் அந்தத் சாப்பாட்டில் சுவையோ, சத்துக்களோ எதுவும் இருக்காது.

MOST READ: இப்படி பிரபோஸ் பண்ணினா பெண்களால நோ சொல்லவே முடியாதாம்... ட்ரை பண்ணிபாருங்க...

கிரேவி

கிரேவி

மீதமான குழம்பை என்ன செய்வது என்ற குழப்பம் பெரும்பாலும் அனைத்து சமையலறையிலும் தோன்றும் ஒரு பிரச்சினையாகும். பிடித்த குழம்பாக இருந்தால் அதனை ஃப்ரீஜரில் வைத்து சாப்பிடும் பழக்கம் கிட்டதட்ட அனைவருக்கும் உள்ள ஒரு பழக்கமாகும். ஃப்ரீஜரை விட்டு எடுத்தபின் அந்த குழம்பு மிகவும் கட்டியாக மாறிவிடும். மேலும் இது சமைத்தபோது இருந்த சுவையுடனும் இருக்காது.

பூண்டு

பூண்டு

உணவின் சுவைக்காக சேர்க்கப்படும் பொருள்களில் முக்கியமானது பூண்டு. தேசிய உணவு பாதுகாப்பு மையத்தின் ஆலோசனை படி பூண்டானது ஃப்ரீஜரில் வைக்கப்படும்போது கடிமானதாக மாறிவிடும், மேலும் அதன் சுவை கசப்பு சுவையாக மாறிவிடும். இந்த பூண்டை உணவில் சேர்க்கும்போது அது உணவின் மொத்த சுவையையும் மாற்றக்கூடும்.

சில மசாலாப்பொருட்கள்

சில மசாலாப்பொருட்கள்

ஃப்ரீஜரில் வைப்பதால் உணவின் சுவையை மாற்றுவது பூண்டு மட்டுமல்ல, வெங்காயம், மிளகாய் போன்ற பொருட்களின் சுவையும் கூட மாறக்கூடும். இவை மட்டுமின்றி மிளகு, பச்சை மிளகாய், கிராம்பு போன்ற பொருட்களும் கூட ஃப்ரீஜரில் வைக்கும்போது தன் சுவையை இழக்கக்கூடும்.

MOST READ: பெண்களே! இந்த குணம் உள்ள ஆண்களை ஒருபோதும் நம்பிவிடாதீரகள் என்று நம் வேதங்கள் கூறுகிறது...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Never keep these healthy foods in freezer

Keeping these healthy foods in the freezer can lead to gross meals or even health risks. Check out the list of foods which never keep in freezer.
Desktop Bottom Promotion