For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இளம்வயதிலேயே நரைமுடி இருக்கிறதா உங்களுக்கு இந்த நோய் இருக்க வாய்ப்புள்ளது ஜாக்கிரதை...!

ரைமுடி ஏற்பட உணவுப்பழக்கங்கள் ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும் அதைத்தவிர வேறு சில காரணங்களும் உள்ளது. சிலசமயம் நரைமுடி இருப்பது சில நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

|

இன்றைய இளைஞர்களுக்கு இருக்கும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று இளநரை ஆகும்.நம் முன்னோர்களின் காலத்தில் 60 வயதை கடந்தவர்களின் முடி கூட கருமை நிறம் மாறாமல் அப்படியே இருக்கும். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் 20 வயதில் உள்ள இளைஞர்ளுக்கு ஏன் சிலசமயம் பதின்ம வயதுகளில் இருப்பவர்களுக்கு கூட இளநரை உள்ளது. இதற்கு காரணம் மாறிவிட்ட நமது வாழ்க்கைமுறைதான்.

does premature white hair is a sign of hyperthyroidism

நரைமுடி ஏற்பட உணவுப்பழக்கங்கள் ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும் அதைத்தவிர வேறு சில காரணங்களும் உள்ளது. சிலசமயம் நரைமுடி இருப்பது சில நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம். அந்த நோய்கள் சிறிய நோயாகவும் இருக்கும், பெரிய ஆபத்துக்களை ஏற்படுத்தும் நோயாகவும் இருக்கும். இந்த பதிவில் இளநரை ஏற்பட காராம் மற்றும் இளநரை எந்தெந்த நோயின் அறிகுறியாக இருக்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மரபியல்

மரபியல்

இளம் வயதிலேயே உங்களுக்கு நரைமுடி வர முக்கிய காரணம் இதுதான். உங்கள் மரபணுக்கள் மூலமாகத்தான் இது ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. சிலருக்கு 20 வயதை அடையும் முன்பே இந்த பிரச்சினை வந்துவிடும். மரபணுக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதற்கும் முன்பாகவே ஏற்பட வாய்ப்புள்ளது.

மெலனின் குறைபாடு

மெலனின் குறைபாடு

பெரும்பாலான நபர்களுக்கு போதுமான அளவு மெலனின் இல்லாதது இளம் வயதிலேயே நரை ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. மெலனின் சுரப்பு என்பது நீங்கள் எடுத்துக்கொள்ளும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் புரதத்தை பொறுத்து அமைகிறது. இவை குறையும்போது அது உங்கள் உடலில் மெலனின் அளவை குறைக்கும். இதனால் இளநரை ஏற்படலாம். மெலனின் குறையும்போது அது உங்கள் உடலில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். இளநரை என்பது உங்கள் உடலின் வளர்ச்சிதை மாற்றம் சீராக இல்லை என்பதன் அறிகுறியாகும்.

ஹார்மோன் சமநிலையின்மை

ஹார்மோன் சமநிலையின்மை

நம் உடலின் அனைத்து சீரான செயல்பாடுகளுக்கும் ஹார்மோன்கள் சமநிலையில் இருக்க வேண்டியது அவசியம். அவ்வாறு ஹார்மோன்கள் சமநிலையின்றி இருக்கும்போது அவை முதலில் தாக்கத்தை ஏற்படுத்துவது சருமத்திலும், முடியின் மீதும்தான். ஹார்மோன்களின் சுரப்பு சரியாக இல்லாதபோது இளநரை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அப்படி இளநரை இருந்தால் உங்களுக்கு ஹார்மோன் குறைபாடுகள் இருக்கவும் வாய்ப்புள்ளது.

MOST READ:எந்தெந்த ராசிக்காரங்களுக்கு இந்த காதலர் தினத்தில் லவ் செட் ஆகப்போகுது தெரியுமா?

மருத்துவ பிரச்சினைகள்

மருத்துவ பிரச்சினைகள்

சில மருத்துவ பிரச்சினைகள் உங்கள் முடியில் நிறமி இழப்பை ஏற்படத்தலாம். குறிப்பாக வைட்டமின் பி12 குறைபாடு, பிட்யூட்டரி சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சினை போன்ற பிரச்சினைகள் இருந்தால் இளநரை ஏற்படலாம். ஹைப்போதைராய்டு பிரச்சினை உள்ளவர்களுக்கு இளநரை ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். ஒருவேளை 20 வயதுகளில் இருப்பவர்களுக்கு இளநரை பிரச்சினை ஏற்பட்டால் அவர்கள் தைராய்டு பரிசோதனை எடுத்துக்கொள்வது நல்லது.

மனஅழுத்தம்

மனஅழுத்தம்

தொடர்ச்சியான வேலைகளால் ஏற்படும் மனஅழுத்தம் உங்களுக்கு இளநரை ஏற்பட முக்கிய காரணமாகும். அதுமட்டுமின்றி அதிகளவு தவறான உணவுகள் உண்பது மற்றும் அதிகளவு மது அருந்துவது போன்ற வெளிப்புற பிரச்சினைகளும் உங்களுக்கு இளநரையை ஏற்படுத்தும்.

சுற்றுசூழல் மாசு

சுற்றுசூழல் மாசு

சிலசமயம் உங்களின் தவறுகள் எதுவும் இலையென்றாலும் உங்களால் தலைமுடி வெள்ளையாவதை தடுக்க முடியாது.அதற்கு காரணம் நாம் வாழும் சமூகமாக கூட இருக்கலாம். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இப்பொழுது காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. இதனால் காற்றில் உள்ள பல வேதியியல் பொருட்கள் உங்கள் தலைமுடியின் நிறத்தை மாற்றக்கூடும்.

MOST READ:வீட்ல சும்மா இருக்கும்போது வாய் நமநமனு இருக்கா? எதையாவது சாப்பிட்டு குண்டாகுறீங்களா? இத பண்ணுங்க

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: health
English summary

does premature white hair is a sign of hyperthyroidism

When you notice a white hair in your early 30s and sometimes, even 20s then it must be a heath issue. It is one of the major signs of Hyperthyroidism.
Story first published: Thursday, January 17, 2019, 11:56 [IST]
Desktop Bottom Promotion