For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பல் வலியை நொடியில் குணப்படுத்த நம் முன்னோர்கள் பயன்படுத்திய நம்பத்தகுந்த வழிகள் இதுதான்...!

|

மனிதர்களுக்கு ஏற்படும் வலிகளில் மிகவும் முக்கியமான வலி என்றால் அது பல் வலிதான். ஏனெனில் பல் வலி ஏற்படும் போது அவர்களால் உணவை சரியாக உண்ண முடியாது. உடலுக்கு போதுமான ஊட்டச்சத்தை வழங்கும் உணவு இல்லாதபோது தானாக நமது உடல் விரைவில் சோர்வடைய தொடங்கும். பல் வலி குணமாகும் வரை நம்மால் எந்த வேலையையும் கவனமாக செய்ய முடியாது. பல் வலி என்பது பற்களை மட்டுமல்லால் நமது ஒட்டுமொத்த உடலையும் பாதிக்கும் ஒரு விஷயமாகும்.

trusted home remedies for toothache

சொத்தை பல், ஈறுகளில் பிரச்சினை, உடைந்த பற்கள் என பல் வலி ஏற்பட பல காரணங்கள் உள்ளது. கடுமையான பல் வலி ஏற்படும்போது நாம் முதலில் தேடுவது மருத்துவரைத்தான். ஆனால் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கூறி விட்டு சென்றிருக்கும் நம் முன்னோர்கள் பல் வலியை விட்டு வைத்திருப்பார்களா?. நமது முன்னோர்கள் பயனப்டுத்திய மிகுந்த நம்பிக்கைக்குரிய பல் வலிக்கான எளிய வீட்டு வைத்தியங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிராம்பு எண்ணெய்

கிராம்பு எண்ணெய்

கிராம்பு என்பது பழங்காலம் முதலே பல் வலிக்காக சிறந்த மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் உள்ள யூஜினால் கலவை ஒரு இயற்கை மருந்தாகும். ஆனால் இதனை பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட இடத்தில் நீங்கள் கிராம்பு எண்ணெயை பயன்படுத்தும்போது அது ஈறுகளிலோ அல்லது நாக்கிலோ பட்டுவிட்டால் அது வலியை மோசமாக்கும். ஒரு பஞ்சு துணியில் இரண்டு சொட்டு கிராம்பு எண்ணெய் ஊற்றி அதனை வலி இருக்கும் பல் மீது வைத்து வலி குறையும்வரை அப்படியே வைத்திருக்கவும். மேலும் கிராம்பு தூள் அல்லது முழுகிராம்பை வலி இருக்கும் பல் மீது வைத்து அது இரசாயனத்தை வெளியிடும்படி கடிக்கவும். அரை மணிநேரத்தில் வலி குறையும்.

இஞ்சி மற்றும் சிவப்பு மிளகாய்

இஞ்சி மற்றும் சிவப்பு மிளகாய்

இஞ்சி மற்றும் சிவப்பு மிளகாய் இரண்டுமே வெப்ப குணமுடையதாகும். எனவே இந்த இரண்டையும் சமமான அளவில் எடுத்துக்கொண்டு தேவையான தண்ணீரை கொண்டு விழுதாக அரைத்து கொள்ளளவும். இந்த விழுதை ஒரு சிறிய துணியில் எடுத்துக்கொண்டு ஈறுகள் மற்றும் நாக்கின் மீது படாதவாறு வலி இருக்கும் பல் மீது வைக்கவும். இதனை தனித்தனியாகவும் பயன்படுத்தலாம். இவை இரண்டுமே சிறந்த வலிநிவாரணிகளாகும்.

உப்பு நீர்

உப்பு நீர்

கொதிக்கும் நீரில் ஒரு ஸ்பூன் உப்பை போட்டு அதன் மூலம் வாய் கொப்பளிப்பது பல் வலிக்கு சிறந்த வலிநிவாரணியாகும். இது பற்களில் எரிச்சல் மற்றும் வீக்கம் ஏற்படுவதை குறைக்கும். இந்த நீரை 30 நொடிகள் உங்கள் வாயிலேயே வைத்திருக்கவும் அதன் பின்னர் துப்பவும். உப்புநீர் பற்களை சுற்றியுள்ள இடங்களை சுத்தப்படுத்துவதோடு வீக்கத்தை ஏற்படுத்தும் அமிலங்களை வெளியேற்றும்.

மிளகுக்கீரை டீ

மிளகுக்கீரை டீ

மிளகுக்கீரை டீ என்பது சுவை மற்றும் அதிக பயன்களை கொண்டதாகும். காய்ந்த மிளகுக்கீரை இலைகளை கொதிக்கும் நீரில் 20 நிமிடம் போட்டு கொதிக்கவைக்கவும். டீ குளிர்ந்த பிறகு அதனை குடிக்கவும் அல்லது வாய் கொப்பளிக்கவும். இதிலுள்ள டேனின் உங்களுக்கு வீக்கத்தை ஏற்படுத்துவதை குறைக்கும். சூடான டீ பேக்கை வலி இருக்கும் பல் மீது வைப்பது உடனடியான நிவாரணத்தை வழங்கும்.

MOST READ: தூங்குவதற்கு முன் நீங்கள் செய்யும் சிறிய செயல்கள் அதிர்ஷ்டத்தை உங்கள் வீடு தேடி வர செய்யும்...!

ஹைட்ரஜன் பெராக்சைடு

ஹைட்ரஜன் பெராக்சைடு

உங்கள் வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கவும், அசௌகரியங்களைக் குறைக்கவும் ஹைட்ரஜன் பெராக்ஸைடை 3% பயன்படுத்தவும். இது உடனடி நிவாரணத்தை வழங்கும், பல் வலியால் ஏற்படும் காய்ச்சலையும் குணப்படுத்தும். இது பல் வலியை குறைக்க மட்டும்தான், எனவே இதனை பற்களின் மீது தேய்த்து வலி குறைந்தவுடன் சூடான நீரில் வாய் கொப்பளிக்கவும்.

ஐஸ்கட்டி

ஐஸ்கட்டி

ஒரு சிறிய பிளாஸ்டிக் பையில் ஐஸ்கட்டியை வைத்து அதனை ஒரு துணி கொண்டு மூடவும். இதனை உங்கள் பற்களின் மீது 15 நிமிடங்கள் வைக்கவும். இது உங்கள் பல் வலியை விரைவில் குணமாக்கும். மேலும் ஐஸ்கட்டி கொண்டு உங்களை கையை மசாஜ் செய்வது பல் வலியை குணமாக்கும் என்று பழங்கால மருத்துவம் கூறுகிறது. ஏனெனில் உங்கள் கை குளிர்ச்சியை உணரும்போது அது மூளைக்கு வலியை குறைக்கும் சிக்னலை அனுப்பும். ஐஸ்கட்டியை துணியால் சுற்றி அதனை கட்டை விரலுக்கும், சுட்டு விரலுக்கும் இடையே உள்ள பகுதியில் மசாஜ் செய்யவும்.

வெள்ளைப்போளம் அல்லது மிரஹ்

வெள்ளைப்போளம் அல்லது மிரஹ்

மிரஹ் என்பது புதர்செடிகளில் இருந்து எடுக்கப்படும் ஒரு பிசின் ஆகும். இது உங்கள் வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழிப்பதுடன் வீக்கத்தையும் குறைக்கும். 1 ஸ்பூன் மிரஹை 2 கப் நீரில் கலந்து 30 நிமிடம் வைக்கவும். இதை வடிகட்டி நன்கு குளிர வைக்கவும். இதை 1 ஸ்பூன் எடுத்துக்கொண்டு அதனை தண்ணீரில் கலந்துகொண்டு ஓர் நாளைக்கு 6 முறை குடிக்கவும்.

வினிகர் மற்றும் பிரவுன் பேப்பர்

வினிகர் மற்றும் பிரவுன் பேப்பர்

இன்னொரு பிரபலமான நாட்டு மருத்துவம் என்னவெனில் ஒரு சிறிய துண்டு பிரவுன் பேப்பரை வினிகரில் நனைத்து அதனை வலி இருக்கும் பல் மீது வைத்து அழுத்தம் கொடுக்கவும். இது கொடுக்கும் வெப்பமான உணர்வு உங்களின் பல் வலியை குறைக்கும்.

MOST READ: உடற்பயிற்சி இல்லாமலே தொடை மற்றும் பின் பக்க தசையை குறைக்க இதை சாப்பிட்டாலே போதும்..!

அக்குபஞ்சர்

அக்குபஞ்சர்

அக்குபஞ்சர் மூலம் உங்கள் பல் வலியை விரைவில் குறைக்கலாம். உங்கள் இடக்கையின் கட்டைவிரலை கொண்டு உங்கள் வலதுகையின் சுட்டு விரல் மற்றும் கட்டை விரல் இணையும் இடத்தில் நன்கு அழுத்தம் கொடுக்கவும். இதனை இரண்டு நிமிடம் தொடர்ந்து செய்யவும். இது நல்ல ஹார்மோன்களான எண்டோர்பினை சுரக்கச்செய்து உங்கள் வலியை உடனடியாக குறைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: health
English summary

9 trusted home remedies for toothache

Cavities, loose fillings, a cracked tooth, an abscess, or a sinus condition can all bring on the dreaded toothache pain. Check out these trusted home remedies for toothache.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more