For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஃபேன் இல்லாம தூங்க மாட்டேன்னு அடம்பிடிக்கிற ஆளா நீங்க?... அது எவ்ளோ டேன்ஞ்சர்னு பாருங்க...

தூங்கும் நேரங்களில் ஏன் மின்விசிறியை ஓட விடக்கூடாது என்பதற்கான காரணங்களும் விளைவுகளும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.

|

மின் விசிறிகளின் ப்ளேடுகளில் தூசி சேகரிக்கப்படுவதால், ஒவ்வாமை வினைகள் மூலம் எளிதில் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். வெயிலின் கொடுமை தாங்க முடியாத காரணத்தால் பலரும் மின்விசிறியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சூடு குறைந்து உடல் ஆசுவாசம் அடைகிறது.

Image Courtesy

அதே சமயம், மின் விசிறியை மிக அருகில் வைத்துக் கொண்டு உறங்குபவர்கள் சில எதிர்மறை விளைவுகளையும் சந்திக்க நேருகிறது. இதற்குக் காரணம், மின்விசிறியில் படியும் அழுக்கு. சரியாக சுத்தம் செய்யப்படாத மின்விசிறியில் அழுக்கு படிவதால் சில எதிர்மறை விளைவுகள் உண்டாகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பயன்கள்

பயன்கள்

மின்விசிறியின் நன்மைகள் பல. வெப்பத்தைக் குறைத்து நமக்கு காற்றை தருவது மட்டுமல்ல, நமது தூக்கத்தின் தன்மையை மேம்படுத்துவதும் மின்விசிறிதான். "திறந்திருக்கும் ஜன்னல் அல்லது மின்விசிறி, எதுவாக இருந்தாலும், அதில் இருந்து வெளிப்படும் குளிர்ச்சியான காற்று, மக்களுக்கு சிறந்த முறையில் சுவாசத்தைத் தருகிறது. ஆனால் காற்று மிகவும் வறட்சியாக இருக்கக் கூடாது", என்று ஓஹியோவில் உள்ள கிளீவ்லாந்து கிளினிக்கின் ஹெட் அண்ட் நெக் நிறுவனத்தில் உள்ள மருத்துவர் மைக்கல் பென்னிஞர் கூறுகிறார்.

ஒலி

ஒலி

மின்விசிறியின் பலன்களில் ஒன்று, அதில் இருந்து ஒரு வெள்ளை ஒலி உற்பத்தியாகிறது. அல்லது சாதகமான அதிர்வெண் கொண்ட ஒலி அதாவது ஹம்மிங் உருவாகிறது. இந்த ஒலியால் மக்கள் எளிதில் தூங்க முடிகிறது. ஆனால் மின்விசிறியை தூரமாக வைத்துக் கொண்டு உறங்குவது நல்லது. தூரமாக இருக்கும்போது மின்விசிறி காற்றை சுழற்றி அதே ஒலியை எழுப்பக் கூடும் என்று அவர் கூறுகிறார்.

தசை இறுக்கம்

தசை இறுக்கம்

நீங்கள் தூங்கி எழுந்தவுடன் உங்கள் தசைகள் வறண்டு இருப்பதை உணர்ந்திருக்கிறீர்களா? ஆம் என்றால், உங்கள் மின்விசிறியை உங்களுக்கு மிகவும் நெருக்கமாக வைத்துக் கொள்ளாமல் சற்று தூரத்தில் வைத்து உறங்கிப் பாருங்கள். உங்கள் தசைகளில் அல்லது உடலின் குறிப்பிட்ட இடத்தில் இறுக்கம் மற்றும் வறட்சி ஏற்படுவதற்குக் காரணம், குளிர்ந்த காற்று, ஒரு குறிப்பிட்ட உடல் பகுதியில் படுவதால், அந்த இடத்தின் தசைகள் இறுக்கமாகி வலி உண்டாகிறது.

முகத்தில் படுதல்

முகத்தில் படுதல்

பொதுவாக மின்விசிறியை முகத்தின் அருகில் வைத்துக் கொண்டு உறங்குபவர்களுக்கு முகம் மற்றும் கழுத்தில் ஒரு வலி ஏற்படும். காலையில் கழுத்து பகுதியில் இறுக்கமாக இருப்பதை போல் நீங்கள் உணர்ந்தால், இரவு முழுவதும் அந்த இடத்தில் தொடர்ந்து காற்று பட்டதன் அறிகுறி என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம் என்று ஒரு வலைத்தளம் கூறுகிறது.

சரும பிரச்னைகள்

சரும பிரச்னைகள்

ஒருவேளை உங்கள் உடலின் உட்பகுதியில் பாதிப்பு இல்லையென்றாலும், உங்கள் உடலின் மேல்புறம் சில பாதிப்புகளை அடையலாம். அதிகமான மற்றும் தொடர்ச்சியான காற்றின் வெளிப்பாட்டால், வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு அவர்க சருமத்தில் கட்டிகள் போன்றவை தோன்றலாம். சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் இந்த சமயத்தில் லோஷன் அல்லது மாயச்ச்சரைசெர் பயன்படுத்தலாம். மின்விசிறிகளில் அதிகமாக தூசி படியும்.

குறிப்பாக அதன் ப்ளேடுகளில் தூசி அதிகமாக சேரும். அவற்றை சரியாக சுத்தம் செய்யாமல் விடும்போது, சில தூசி பூச்சிகள் உருவாகின்றன. இந்த தூசி பூச்சிகள் ஒவ்வாமை பாதிப்பால் அவதிப்படுகிறவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம். இரவு முழுவதும் மின்விசிறி ஓடிக் கொண்டே இருப்பதால், இந்த தூசி பூச்சிகள் மூலம் பல தீய கழிவுகள் உங்கள் அறையில் சேரலாம்.

ஆஸ்துமா

ஆஸ்துமா

ஒவ்வாமை, ஆஸ்துமா மற்றும் நோய் எதிர்ப்பிற்கான அமெரிக்கன் அகாடமி கூறுவது, இந்த பூச்சிகள் தான் ஆஸ்துமாவை அதிகரிக்க செய்வது என்பதாகும். ஆகவே இந்த ஒவ்வாமை பாதிப்பை கொண்டிருப்பவர்கள் தொடர்ந்து உங்கள் மின்விசிறி மற்றும் படுக்கையை சுத்தமாக வைத்துக் கொள்வதன்மூலம் இந்த ஒவ்வாமை உண்டாக்கும் பூச்சிகளில் இருந்து தப்பிக்கலாம்.

சுத்தம்

சுத்தம்

அதாவது, மின்விசிறி என்பது ஒரு பாதுகாப்பான தூக்கத்தைத் தருவதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், வறண்ட சருமம், ஒவ்வாமை விளைவுகள், அல்லது வறண்ட தசைகள் ஆகிய பாதிப்புகளைக் கொண்டவர்கள் மின்விசிறி பயன்பாட்டில் சில மாற்றங்கள செய்து கொள்வதால் மற்றும் அதனை தூய்மையாக வைத்துக் கொள்வதால் சிறப்பான பலன்களைப் பெற முடியும்.

ஆடை

ஆடை

மெல்லிய ஆடைகளை அணிவது, போதுமான நீரை படுக்கை அருகில் வைத்துக் கொண்டு அடிக்கடி பருகுவது, அல்லது உறங்குவதற்கு முன்பு குளிப்பது போன்றவையும் இரவில் உண்டாகும் வெப்பத்தைக் குறைக்க உதவும் மற்ற வழிகளாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Sleeping With A Fan On Could Be Bad For Your Health

Reasons Why Sleeping With A Fan On Could Be Bad For Your Health.
Desktop Bottom Promotion