இந்த அறிகுறி இருந்தா உடனே டாக்டர் கிட்ட போங்க... இல்ல நிலைமை ரொம்ப மோசமாயிடும்...

Posted By:
Subscribe to Boldsky
இந்த அறிகுறிகள் இருந்தால் ஆபத்து..!!- வீடியோ

ஆர்த்ரிடிஸ் என்றதும் நம்மில் பலரும் அது முதுமைக் காலத்தில் வரும் ஒரு மூட்டு சம்பந்தப்பட்ட நோய் என்று தான் நினைப்போம். இருப்பினும் இந்த ஆர்த்ரிடிஸ் பிரச்சனையானது இளம் வயதினரையும் தாக்குகிறது என்பது உண்மை. ஆர்த்ரிடிஸ் பிரச்சனையின் பொதுவான அறிகுறி மூட்டு வலி மற்றும் மூட்டுகள் மரத்துப் போதல் போன்றவை. ஆனால் ஆர்த்ரிடிஸ் இன்னும் ஏராளமான அறிகுறிகளை நமக்குச் சுட்டிக் காட்டும். அதுவும் ஆர்த்ரிடிஸ் ஒருவரைத் தாக்கிவிட்டது என்பதை நம் உடல் நமக்கு ஒருசில பிரச்சனைகளை திடீரென்று சந்திக்க வைக்கும்.

அந்த அறிகுறிகளை நாம் நன்கு கூர்ந்து கவனித்து, மருத்துவரை அணுகினால், ஆர்த்ரிடிஸ் பிரச்சனை தீவிரமடையாமல் தடுக்கலாம். ஒருவருக்கு ஆர்த்ரிடிஸ் என்னும் மூட்டு அழற்சி நோய் வருவதற்கு முக்கிய காரணம், மூட்டுக்களில் கொடுக்கப்படும் தொடர்ச்சியான அழுத்தம் அல்லது கஷ்டம் தான். நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் படி, 18 முதல் 44 வயதிற்குட்ட சுமார் 7.1 சதவீத இளம் வயதினருக்கு ஆர்த்ரிடிஸ் உள்ளது. அதே சமயம் 44 முதல் 65 வயதிற்குட்ட சுமார் 29.3 சதவீதத்தினருக்கும் ஆர்த்ரிடிஸ் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் ஆர்த்ரிடிஸின் ஆரம்ப அறிகுறிகளை முன்பே தெரிந்து வைத்திருந்தால், எளிதில் சிகிச்சை அளித்து, ஆர்த்ரிடிஸ் தீவிரமாவதைத் தடுக்கலாம். இவ்வளவு முறை ஆரம்ப அறிகுறிகளை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதற்கு காரணம், இப்பிரச்சனையின் ஆரம்ப அறிகுறிகள் அன்றாடம் நாம் சந்திக்கும் சாதாரண பிரச்சனைகளைப் போன்று தான் இருக்கும். இதனால் பலர் சரியாக கவனிக்காமல் விட்டுவிடுவார்கள்.

சரி, இப்போது ஆர்த்ரிடிஸின் ஆரம்ப கால அறிகுறிகள் குறித்து காண்போம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, உஷாராகிக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சோர்வு

சோர்வு

உடல் சோர்வு பல்வேறு விஷயங்களுக்கு அறிகுறியாக இருப்பதால், நீங்கள் மிகுந்த சோர்வை உணர்ந்தால், உடனே மருத்துவரை அணுகி ஆர்த்ரிடிஸ் உள்ளதா என்று சோதித்துக் கொள்ளுங்கள். ருமடாய்டு ஆர்த்ரிடிஸ் இருந்தால், ஒரே வாரத்தில் நாள்பட்ட சோர்வு, பசியின்மை, எடை குறைவு போன்றவற்றை சந்திக்க நேரிடும். சில சமயங்களில் உடல் சோர்வுடன், அவ்வப்போது மூட்டுக்களில் வலி அல்லது மரத்துப் போதலை அனுபவிக்கக்கூடும். ருமடாய்டு ஆர்த்ரிடிஸ் என்பது ஒ ஆட்டோ-இம்யூன் குறைபாடு. இது மூட்டுக்களில் அழற்சியை உண்டாக்கி வீக்கமடையச் செய்யும். எனவே கவனமாக இருங்கள்.

மூட்டுக்கள் சிவந்து இருப்பது

மூட்டுக்கள் சிவந்து இருப்பது

ஆர்த்ரிடிஸ் இருந்தால், மூட்டு இணைப்புக்கள் சிவந்து காணப்படும். இப்படி மூட்டு இணைப்புக்கள் சிவந்து இருந்தால், அது மூட்டு இணைப்புக்களின் யூரிக் அமில கற்கள் படிந்துள்ளது என்று அர்த்தம். இதை கீல்வாதம் என்று அழைப்பர். ஒருவருக்கு கீல்வாதம் இருந்தால், கால்களின் பெரிய விரலில் தான் ஏற்படும். எனவே உங்கள் கால் பெருவிரல் சிவந்தோ, வீங்கியோ மற்றும் வலியுடனோ இருந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

வீக்கம்

வீக்கம்

மூட்டு இணைப்புக்களில் வீக்கமானது கடுமையாக இருந்தால், அவர்களுக்கு ஆர்த்ரிடிஸ் உள்ளது என்று அர்த்தம். பெரும்பாலும் இது ஒருவரது செயல்பாடு மற்றும் டயட்டைப் பொறுத்தது. ஒருவரது மூட்டுக்கள் வீக்கமடைவதற்கு சைனோவியல் திரவத்தின் அதிகப்படியான உற்பத்தி மற்றும் சைனோவியல் திரவத்தில் மாற்றம் இருந்தால், அதன் விளைவாக மூட்டுக்களில் கடுமையான வலியை அனுபவிக்கக்கூடும்.

மூட்டுக்கள் சூடாக இருப்பது

மூட்டுக்கள் சூடாக இருப்பது

உங்களது கைகள் மிகவும் சூடாக இருப்பது போல் உணர்கிறீர்களா? அப்படியானால் அது ஆர்த்ரிடிஸ் பிரச்சனைக்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். அதுவும் முட்டுப் பகுதிகள் சூடாகவும், கடுமையான வலியுடனும் இருந்தால், அதுவும் அர்த்ரிடிஸ் நோய்க்கான அறிகுறியே. எனவே இதை சாதாரணமாக உடல் வெப்பம் என்று நிரனத்து விட்டுவிடாமல், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

நீண்ட நேரம் சௌகரியமாக இருக்க முடியாது

நீண்ட நேரம் சௌகரியமாக இருக்க முடியாது

ஆர்த்ரிடிஸ் வரப் போகிறது என்பதை உணர்த்தும் ஆரம்ப கால அறிகுறிகளுள் ஒன்று, உட்கார்ந்து படம் அல்லது வேலைப் பார்க்கும் போது, கடுமையான மூட்டு வலியை சந்திக்கக்கூடும். இது உங்களுக்கு இப்படியே நீட்டித்திருந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள். ஏனெனில் இதுவும் ஆர்த்ரிடிஸ் நோய்க்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

புடைப்புக்கள்

புடைப்புக்கள்

எதிர்பாராத விதமாக கை விரல்களில் புடைப்புக்கள் ஏற்பட்டுள்ளதா? அப்படியெனில் அது ஆர்த்ரிடிஸ் பிரச்சனைக்கான அறிகுறிகளுள் ஒன்றாகும். இந்த புடைப்புக்கள் ருமடாய்டு புடைப்புக்கள் என்று அழைக்கப்படும். இந்த புடைப்புக்களானது தோலுக்கு அடியில் மூட்டுக்களுக்கு அருகே உருவாகும். இந்த புடைப்புக்கள் சிறிய அல்லது பெரிய அளவில், மூட்டுக்களுக்கு அருகில் இருக்கும். எனவே உங்கள் கை விரல்களில் இம்மாதிரியான புடைப்புக்கள் இருந்தால், உடனே மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெறுங்கள்.

காய்ச்சல் போன்ற அறிகுறிகள்

காய்ச்சல் போன்ற அறிகுறிகள்

ஆரித்ரிடிஸ் சில சமயங்களில் காய்ச்சலையும் அறிகுறியாக வெளிக்காட்டும். உடலினுள் ஏதேனும் ஒரு பகுதியில் கடுமையாக அழற்சி ஏற்பட்டிருந்தால், அதை நம் உடல் நமக்கு காய்ச்சலின் மூலம் வெளிப்படுத்தும். அதிலும் ஒருவருக்கு உடல் சோர்வுடன், அதிகளவு காய்ச்சல், வியர்வை மற்றும் பசியின்மை போன்றவை இருந்தால், அவர்களுக்கு ஆர்த்ரிடிஸ் இருக்க வாய்ப்புள்ளது.

கீழே ஆர்த்ரிடிஸ் பிரச்சனை தீவிரமாகாமல் இருக்க தவிர்க்க வேண்டிய உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றையும் படித்து, அந்த உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.

எண்ணெயில் வறுத்த உணவுகள்

எண்ணெயில் வறுத்த உணவுகள்

எண்ணெயில் வறுத்த உணவுகளான சிப்ஸ், சமோசா, ப்ரைடு சிக்கன் போன்றவை நம் வாய்க்கு சுவையானதாக இருக்கலாம். ஆனால் இவற்றை உட்கொண்டால், அதனால் உடல் எடை அதிகரிப்பதோடு, உயர் கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகளால் அவஸ்தைப்பட நேரிடும். அதோடு விரைவில் ஆர்த்ரிடிஸ் பிரச்சனையும் வந்துவிடும்.

க்ளுட்டன் உணவுகள்

க்ளுட்டன் உணவுகள்

தற்போது ஏராளமானோர் க்ளுட்டன் இல்லாத உணவுகளையே உட்கொள்கின்றனர். க்ளுட்டன் அதிகம் நிறைந்த கோதுமை உணவுகளான பிரட், சப்பாத்தி, பிஸ்கட் போன்றவை, மனித உடலுக்கு நச்சுமிக்கவை. இவை செரிமான பிரச்சனைகள், சரும அலர்ஜி மற்றும் சில சமயங்களில் ஆர்த்ரிடிஸ் பிரச்சனையைக் கூட உண்டாக்கும்.

பால் பொருட்கள்

பால் பொருட்கள்

பால் பொருட்களான பால், தயிர் போன்றவை ஆரோக்கியமானவை தான். ஆனால் இதை ஒருவர் அளவுக்கு அதிகமாக அன்றாடம் குடித்து வந்தால், அதனால் பால் பொருட்களில் உள்ள புரோட்டீன் மூட்டு இணைப்புக்களைச் சுற்றியுள்ள தசைகளில் அழற்சி மற்றும் எரிச்சலை உண்டாக்கி, ஆர்த்ரிடிஸ் பிரச்சனையை வரவழைக்கும். எனவே அளவுக்கு அதிகமாக பால் பொருட்களை சேர்க்காமல், அளவாக சேர்த்து பயனடையுங்கள்.

கத்திரிக்காய்

கத்திரிக்காய்

கத்திரிக்காய் ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி தான். இருப்பினும் இந்த காய்கறியை அதிகம் சாப்பிட்டால், அது ஆர்த்ரிடிஸ் போன்ற மூட்டு அழற்சி நோயை உண்டாக்கி மோசமாக்கும். ஆகவே கத்திரிக்காயை அளவுக்கு அதிகமாக சாப்பிடாதீர்கள்.

சர்க்கரை நிறைந்த உணவுகள்

சர்க்கரை நிறைந்த உணவுகள்

சர்க்கரை நிறைந்த உணவுகளான இனிப்பு பலகாரங்கள், சாக்லேட், மில்க் ஷேக், குளிர் பானங்கள், பழச்சாறுகள் போன்றவற்றை அன்றாடம் உட்கொண்டு வந்தால், உடல் பருமன், சர்க்கரை நோய், பல் சொத்தை போன்றவற்றால் அவஸ்தைப்படக்கூடும். அதே சமயம் இவை ஆர்த்ரிடிஸ் பிரச்சனையை உண்டாக்கும் என்பது தெரியுமா? ஆய்வுகளிலும் சர்க்கரை அதிகம் நிறைந்த உணவுகள் மூட்டு இணைப்புக்களில் அழற்சியை உண்டாக்கி, ஆர்த்ரிடிஸை ஏற்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே கவனமாக இருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Unexpected Signs Of Early-Onset Arthritis

Here are some unexpected signs of early onset arthritis. Read on to know more...
Story first published: Saturday, March 17, 2018, 9:30 [IST]