Just In
- 1 hr ago
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்…!
- 5 hrs ago
தலைசுற்ற வைக்கும் உலகின் சில விசித்திரமான பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்... சிரிக்காதீங்க...!
- 10 hrs ago
இந்த ராசிக்காரங்களுக்கு குருபகவான் முழு யோகங்களையும் வாரி வழங்குவார் தெரியுமா?
- 22 hrs ago
வாஸ்துவின் படி உங்கள் புத்தாண்டு காலண்டரை இந்த திசையில வைச்சுறாதீங்க...இல்லனா பிரச்சினைதான்...!
Don't Miss
- News
அண்ணியும்.. மைத்துனனும் சேர்ந்து.. காட்டி கொடுத்த கண்ணாடி வளையல்..இப்ப ஜெயிலில்!
- Technology
சியோமியின் உலகளாவிய துணைத் தலைவர் ரஜினிக்குக் கூறிய வாழ்த்து என்ன தெரியுமா?
- Sports
183 ஆட்டோகிராப் வாங்காம விடமாட்டேன்.. இன்னும் 30தான் பாக்கி.. தோனி ரசிகரின் அன்புத் தொல்லை!
- Education
விண்ணப்பித்துவிட்டீர்களா? ஐடிபிஐ வங்கி வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
- Movies
அமேசானில் பிகில் ரிலீஸ்.. ட்வீட் போட்ட அர்ச்சனாவிடம் கலெக்ஷன் கேட்டு நச்சரிக்கும் நெட்டிசன்ஸ்!
- Finance
ஆஹா... ஜியோ வேலையக் காட்ட ஆரம்பிச்சுட்டாங்கய்யா..! அந்த ரீசார்ஜ் திட்டம் காலியாம்..!
- Automobiles
சிட்ரோன் சி5 ஏர்க்ராஸ் எஸ்யூவி இந்திய வருகை எப்போது?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உங்களின் பாலியல் ஆசைகள் குறையாமல் இருக்க இந்த உணவுகளை கட்டாயம் சாப்பிடுங்கள்
நமது உடலின் ஆரோக்கியத்திற்கு தூக்கமும், மகிழ்ச்சியான மனநிலையும் மிகவும் அவசியமானதாகும். அதற்கு நமது உடலின் ஹார்மோன்கள் சமநிலையின்மையில் இருக்க வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஹார்மோன் செரோடோனின் ஆகும். நமது மூளையின் ஆரோக்கியம் மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க இந்த ஹார்மோன் மிகவும் அவசியமானதாகும்.
செரோடோனின் ஹார்மோன் அமினோ அமிலம் மற்றும் டிரிப்தோபானால் உருவாக்கப்படுகிறது. உணவுகளில் இருந்து பெறப்படும் டிரிப்தோபன் மூளைக்கு கட்டுப்படுத்தப்படுகிறது. மூளையில் இந்த டிரிப்தோபன் செரோடோனினாக மாற்றப்படுகிறது. உங்கள் மனநிலை மகிழ்ச்சியாக இருக்க ஹார்மோன் மிகவும் அவசியமானதாகும். இந்த பதிவில் செரோடோனின் ஹார்மோன் குறைபாட்டால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன அதை சரிசெய்ய என்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதை பார்க்கலாம்.

செரோடோனின் குறைபாடு
செரோடோனின் ஹார்மோன்தான் நமது மூளையிலிருந்து மற்ற உடலுறுப்புகளுக்கு சிக்னல்களை அனுப்புவதாகும். இதில் குறைபாடு ஏற்படும்போது அது ஒட்டுமொத்த உடல் இயக்கத்தையும் பாதிக்கும். மேலும் தூக்கமின்மை, மனஅழுத்தம், சோர்வு, பதட்டம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். அனைத்திற்கும் மேலாக செரோடோனின் குறைபாடு உங்கள் பாலியல் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆம் செரோடோனின் குறைபாடு உங்களின் பாலியல் ஆசையை வெகுவாக குறைக்கும். இந்த குறைபாட்டை டயட் மூலமோ அல்லது டிரிப்தோபன் இருக்கும் உணவுகள் மூலமோ குணப்படுத்தலாம்.

கடல் உணவுகள்
செரோடோனின் ஹார்மோனின் சுரப்பை அதிகரிக்கும் உணவுகளில் முதல் இடம் வகிப்பது கடல் உணவுகள் ஆகும். நல்ல கொழுப்புகள் அதிகமிருக்கும் கடல் உணவுகளான டூனா மீன், நண்டு, மெக்ரஸ், சால்மன் மற்றும் மீன் எண்ணெய் போன்ற உணவுகளை உங்கள் தினசரி உணவில் சேர்த்துகொள்ளுங்கள்.

இறைச்சி
புரோட்டின் மட்டுமின்றி இறைச்சிகளில் செரோடோனினும் அதிகம் உள்ளது. செரோடோனின் இயற்கையாகவே அதிகமுள்ள உணவு இறைச்சியாகும். மாட்டிறைச்சி, ஈரல் மற்றும் சிக்கன் போன்றவை செரோடோனின் அதிகம் உள்ள பொருட்களாகும். இவை செரோடோனின் குறைபாட்டை எளிதில் நீக்கக்கூடியவை.

முட்டை
முட்டையின் வெள்ளைக்கரு செரோடோனின் அதிகம் உள்ள மற்றொரு பொருளாகும். எளிதில் கிடைக்கக்கூடிய, அனைவரும் விரும்பும் பொருளான முட்டையில் செரோடோனினுடன் வேறு பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் உள்ளது. ஆனால் அதிகளவு வெள்ளைக்கரு சாப்பிடுவதை தவிர்க்கவும், ஏனெனில் இதிலுள்ள அதிகளவு கொழுப்பு இதய ஆரோக்கியதிற்கு நல்லதல்ல.
MOST READ: இந்த 4 ராசியில் பிறந்த ஆண்கள் பெண்களை எளிதில் கவர்ந்துவிடுவார்களாம் தெரியுமா?

பால் பொருட்கள்
பால் பொருட்களான பால், தயிர், மோர், வெண்ணெய், பன்னீர் போன்றவற்றில் செரோடோனின் அதிகமுள்ளது. ஊட்டச்சத்துக்கள் மட்டுமின்றி டோபுவிலும் அதிகளவு செரோடோனின் உள்ளது. இது சோயாவில் செய்யப்படுவதாகும். எனவே உங்களுக்கு சோயாவின் சத்துக்களும் கிடைக்கும்.

பாப்கார்ன்
கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளில் உள்ள நார்ச்சத்துக்கள் உங்களை மகிழ்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க உதவக்கூடியவை. அதற்கு மிகச்சிறந்த உதாரணம் பாப்கார்ன். இது ஊட்டச்சத்துக்களை மட்டுமின்றி செரோடோனினையும் அதிகளவு கொண்டுள்ளது.

நட்ஸ்
பாதாம், முந்திரி, வேர்க்கடலை, வால்நட் போன்றவை செரோடோனின் சுரப்பிற்கு அதிகம் உதவுகிறது. அதுமட்டுமன்றி இதனை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் உடலுக்கு இரும்புச்சத்தை கொடுக்கும். இது நீங்கள் படுக்கையில் சிறப்பாக செயல்பட உதவும். இதில் உள்ள அமினோ 3 அமிலங்கள் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

காய்கறிகள்
காய்கறிகளான பூண்டு, கீரை, உருளைக்கிழங்கு, ப்ரோக்கோலி, பீன்ஸ், முட்டைகோஸ், வெங்காயம் போன்ற காய்கறிகள் செரோடோனின் உருவாக்கத்தில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்த காய்கறிகள் உங்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடியவைதான். இவை உங்களுக்கு செரோடோனின் உற்பத்தியில் மட்டுமன்றி ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

விதைகள்
விதைகள் செரோடோனின் முக்கிய ஆதாரமாக இருக்கிறது. இவற்றில் புரோட்டினம் பொட்டாசியம், ஜின்க், இரும்புச்சத்து, வைட்டமின் பி, கால்சியம் போன்றவை உள்ளது. பூசணிக்காய் விதைகள், தர்பூசணி விதைகள், எள், ஆளி விதைகள், சூரியகாந்தி விதைகள் போன்றவை செரோடோனின் உற்பத்தியில் முக்கியப்பங்கு வகிக்கிறது.