உங்க விதைப்பை அடிக்கடி சுருங்கிடுதா?... உடனே பாத்ரூம் போய் இப்படி டெஸ்ட் பண்ணி பாருங்க...

Posted By: gnaana
Subscribe to Boldsky

இன்று சாதாரணமாக மாறிப்போன புற்றுநோய், முன்னரெல்லாம் கேள்விப் பட்டவுடனே, கேட்டவருக்கு உயிர்போகும் வகையில் இருந்தன, கேன்சரைப்பற்றிய அச்சங்கள். இளவயதில் 15 வயது முதல் 35 வயதுடைய இளையோருக்கு மிகவும் சாதாரணமாகத் தோன்றும் புற்றுநோய் என்று அறியப்படுவது, விதைப்பை புற்றுநோய்.

79 சதவீதம் விதைப்பை புற்று, நாற்பது வயதைக் கடந்தவர்களையே அதிகம் பாதிப்பதாக, அமெரிக்க தேசிய புற்றுநோய் கண்காணிப்பு மையம், தெரிவிக்கிறது. ஆயினும் அறுபது வயதைக் கடந்தவர்களுக்கு, விதைப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு, என்பது, மூத்த குடிமக்களுக்கு ஆறுதல் அளிக்கும் நிம்மதியான தகவலாக, இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பயப்படாதீங்க

பயப்படாதீங்க

பொதுவான தகவல்களைப் படிக்கும்போது, எல்லோருக்கும் மனதில் சற்றே அச்சம் தோன்றினாலும், அவர்களை முதலில் நாம் ஆசுவாசப்படுத்திவிட்டு, முழுமையாக விஷயத்துக்குள் செல்வதே, நன்மைதரும் ஒன்றாக இருக்கும். விதைப்பை புற்றுநோய் என்றவுடன், மனதில் அச்சமடையத் தேவையில்லை, முழுமையாக விதைப்பை புற்றுநோயை குணப்படுத்த முடியும் என்பதும், உயிர் ஆபத்தை தவிர்க்க முடியும் என்பதும்தான், நாம் முதலில் கவனத்தில் கொள்ளவேண்டிய தன்மைகளாகும்.

காரணிகள்

காரணிகள்

வியாதிகளை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்து, அதன் பாதிப்புகளை தவிர்த்துக் கொள்ளவே, நாம் விதைப்பை புற்றுநோயின் காரணிகளை அறிந்துகொள்ளப் போகிறோம். ஆரம்ப நிலையில் விதைப்பை புற்றுநோயை கண்டுபிடிப்பதால், அது நிணநீர் சுரப்பிகளில் பரவாமல் தடுத்து, விரைவில் குணப்படுத்தமுடியும்.

ஆயினும் அமெரிக்க புற்றுநோய் கட்டுப்பாட்டு மையம், பாதிப்பு உள்ளவர்கள், அனைவரும் சிகிச்சை எடுத்துக்கொள்ள, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக கால தாமதம் செய்துவிடுகின்றனர், என்கிறது.

காரணங்கள்

காரணங்கள்

பொதுவாக, விதைப்பையில் கட்டி ஏற்படுவதை, முன்கூட்டியே கணித்துவிடமுடியும். இருப்பினும், அந்தக் கட்டி, எதனால் ஏற்பட்டது, அது விதைப்பை புற்றுநோயை ஏற்படுத்தும் கட்டியா, அல்லது வேறு ஏதாவதா என்ற எண்ணம் பலருக்கு வரலாம்.

அறிகுறிகள்

அறிகுறிகள்

கண்களுக்குப் புலப்படாத வேறு சில காரணங்களும், இதர அறிகுறிகளும் இருக்கின்றன. அவற்றை அறிவதன் மூலம், ஆரம்ப நிலையிலுள்ள விதைப்பை புற்றுநோயை கண்டறிந்து, சிகிச்சை பெற்று விரைவில் குணமடைய முடியும்.

அதிக தோல் எடை, குடிப்பழக்கம், புகைபிடித்தல், முறையற்ற உணவுகள் மற்றும் வாழ்க்கைமுறைகள் காரணமாக விதைப்பை புற்றுநோய் வரலாம். சிலருக்கு பரம்பரை பாதிப்புகள் இருந்தாலும், விதைப்பை புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள்.

விதைப்பை தசைகளின் அழுத்தம்

விதைப்பை தசைகளின் அழுத்தம்

சிலருக்கு விதைப்பையில் ஏற்படும் கட்டியை உணரமுடியாத நிலை இருக்கும். அவர்களுக்கு விதைப்பையில் ஏற்படும் கடினமான இறுகியிருக்கும் தன்மையோ அல்லது அடிவயிற்றில் எதோ ஒன்று அழுத்துவது போன்ற உணர்வோ ஏற்படலாம். இதுபோன்ற நுண்ணிய அறிகுறிகள் எல்லாம் விதைப்பை புற்றுநோயின் அடிப்படை .காரணங்களாகும்

இதேபோல, விதைப்பை மற்றும் அடிவயிற்றில் ஏற்படும் அழுத்தத்தையும் நீங்கள் உணரமுடியும். இதற்கு, விதைப்பையில் சுரக்கும் கூடுதல் திரவமோ அல்லது கட்டியினால் பெரிதாகும் நிணநீர்ப் பாதையின் தொற்றினாலோ இருக்கலாம்.

வீங்கிய அல்லது சுருங்கிய விதைப்பைகள்.

வீங்கிய அல்லது சுருங்கிய விதைப்பைகள்.

விதைப்பை புற்றுநோய்க்கு மற்றுமொரு அறிகுறியாக குறிப்பிடுவது, விதைப்பை திடீரென வீங்குவது அல்லது திடீரென சுருங்குவதாகும். விதைப்பையில் ஏற்படும் இதுபோன்ற திடீர் மாற்றங்கள், சமச்சீரற்ற ஹார்மோன்களால் ஏற்படலாம்.

மேலும், டெஸ்டோஸ்டெரோன் குறைவினாலும் அல்லது ஈஸ்ட்ரோஜென் அதிகரிப்பதாலும், விதைப்பையில் சில வகையான கட்டிகள் ஏற்பட வாய்ப்புகளுண்டு.

கால்களில் ஏற்படும் வீக்கம்.

கால்களில் ஏற்படும் வீக்கம்.

விதைப்பை புற்றுநோய், இரத்தத்தை உறைய வைக்கும் தன்மை மிக்கதாக இருக்கிறது. விதைப்பை கட்டிகளின் பாதிப்புகள், நிணநீர் சுரப்பிகளின் வழியே பரவி, நரம்புகளில் இரத்த ஓட்டத்தைத் தடுத்து, கட்டிகளாக உறைய வைக்கிறது. இந்த இரத்தக் கட்டிகள் பொதுவாக, கால்களில் காணப்படுவதால், கால்கள் உடனே வீங்கிவிடுகின்றன. இதன்மூலம், கால்கள் பிடித்துக்கொண்டது போன்ற உணர்வுகள் ஏற்பட்டு, வலியால் கால்களை அசைப்பதற்கும், நடப்பதற்கும், சிரமப்படும் நிலை ஏற்பட்டு விடுகிறது. இந்த இரத்த உறைவானது, சமயங்களில், நரம்புகளில் ஆழமாகப் பரவி அதனால், உடலில் வலியையும், மூச்சுவிட சிரமத்தையும் ஏற்படுத்திவிடுகின்றன.

திடீர் மார்பு வளர்ச்சி

திடீர் மார்பு வளர்ச்சி

சில விதைப்பை கட்டிகள், மார்பு திசுக்களை மென்மையாக்கும் அல்லது மார்பு திசுக்களை அதிகரிக்கும் ஹார்மோன்களை, மிகையாக உற்பத்தி செய்ய வைக்கின்றன. இதனால் ஆண்களின் மார்பு வீங்கிப் பெருத்து, அவர்கள் கூச்சப்படும் அளவுக்கு பெரிதாகியிருக்கும். இதை கைனிகோமஸ்டியா என்பார்கள்.

சில விதைப்பை கட்டிகள், ஆண்களின் மார்பு வளர்ச்சியைத் தூண்டும், HCG எனப்படும் ஹியுமன் கொரியானிக் கோனடாட்ரோபின் எனும் ஹார்மோனை அதிகம் உற்பத்தி செய்வதால், ஆண்களின் மார்பு பெரிதாகி விடுகிறது. நோய்க்கட்டிகள் சுரக்கும் ஈஸ்ட்ரோஜென் எனும் பாலுணர்வு ஹார்மோன், ஆண்களின் மார்பு வளர்ச்சியை ஊக்கப்படுத்தி, அவர்களின் பாலியல் வாழ்க்கையின் ஆர்வத்தைக் குறைத்துவிடுகிறது.

முதுகு வலி

முதுகு வலி

முதுகு வலியும், மூச்சுத் திணறலும், வேறு பல வியாதிகளுக்கு காரணமாக, அறிகுறிகளாகக் கூறப்பட்டாலும், கீழ் முதுகு வலி மற்றும் மூச்சுத் திணறல், மிகவும் முற்றிய நிலையிலுள்ள விதைப்பை புற்றுநோயின் அறிகுறிகள் என்று எச்சரிக்கிறார், டாக்டர். கில்லிகன். முற்றிய நிலையிலுள்ள கட்டியின் பாதிப்புகள் விதைப்பையை விட்டு வெளியேறி, நிணநீர் மண்டலத்தில் கலந்து, வயிற்றின் பின்புறத்தில், கீழ் முதுகில், வலியை ஏற்படுத்தி விடுகின்றன.

மூச்சுத் திணறல்.

மூச்சுத் திணறல்.

மூச்சுத் திணறல் என்பது, கடுமையான அறிகுறியாகும். விதைப்பை புற்றுநோயின் பாதிப்புகள், நுரையீரல்வரை பரவிவிட்டதையே, மூச்சுத் திணறல் குறிக்கிறது. இதனால் நுரையீரல் திசுக்கள் பாதிக்கப்பட்டு, மூச்சுக் காற்று உள் நுழைந்து வெளியேறுவது, பெரிதும் சிரமமான ஒன்றாக மாறிவிடுகிறது.

இவற்றைத்தவிர முற்றிய நிலைகளில், உடல் சோர்வு, தலைவலி, எதிலும் முடிவெடுக்க முடியாத குழப்பமான மனநிலை, உடல் எடை குறைதல் போன்றவையும், இதர காரணங்களாக அமைய வாய்ப்புகளுண்டு. இதுபோன்ற அறிகுறிகளில், மருத்துவரை உடனே அணுகுவதன் மூலம், விரைவில் குணமாக வாய்ப்புகள் உண்டாகும், என்கிறார், டாக்டர்.கில்லிகன்.

சோதிக்கும் முறை.

சோதிக்கும் முறை.

குளிக்கும் சமயங்களில், விதைப்பைகளை, கைகளால் மெதுவாக தடவி சோதித்து, இயல்பாக இருக்கிறதா அல்லது கைகளில் ஏதேனும் விநோதமாக தட்டுப்படுகிறதா, என்பதை அறிந்துகொள்ளமுடியும். புதிதாக ஏதேனும் கட்டி இருப்பது போல் உணர்கிறீர்கள் என்றால், உடனு மருத்துவரிடம் சென்று பரிசோதித்து ஆலோசனை பெறுங்கள்.

சிகிச்சை முறை

சிகிச்சை முறை

புற்றுநோய்க் கட்டிகளை உறுதிசெய்தபின், அவற்றின் தன்மைகளைப் பரிசோதித்து, கட்டிகளை ஆபரேஷன் செய்து அகற்றுவது அல்லது ரேடியேஷன் மற்றும் கீமோதெரபி எனும் சிகிச்சை முறைகளை மேற்கொள்வது என்று, இவற்றில் எதுதேவையோ, அதை மருத்துவர்கள் முடிவுசெய்வார்கள். கட்டிகள் சிறுபட்டாணி போன்ற அளவில் தென்பட்டவுடனேயே, மருத்துவரை அணுகி சிகிச்சைகள் மேற்கொள்வதன் மூலம், விதைப்பை புற்றுநோயை, ஆரம்பத்திலேயே, குணப்படுத்திவிடமுடியும்.

விஞ்ஞான வளர்ச்சிகள் ஏராளம் வந்துவிட்டாலும், விதைப்பை புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால், பலரும் நோய் முற்றியநிலைகளிலேயே மருத்துவ சிகிச்சை மேற்கொள்கின்றனர், இதனால் பாதிப்புகள் உடலில் பரவி, சிகிச்சை செய்ய முடியாமல் ஏற்படும் உயிரிழப்புகளை, தவிர்க்கமுடியவில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

the 5 testicular cancer symptoms no one tells you about

Although it's one of the less common forms of cancer, testicular cancer is still pretty scary — especially because, compared to other types of cancer, it's more likely to strike the younger you are. "Testicular cancer is the most common cancer in men aged 15 to 35.