For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதிகப்படியான அதிர்ச்சையை தாங்கிக் கொள்ள முடியாத தன்மை உங்களிடம் இருக்கிறதா?

அதிகப்படியான அதிர்ச்சையை தாங்கிக் கொள்ள முடியாத தன்மை உங்களிடம் இருக்கிறதா அப்படியானால் அதனை எதிர்கொள்வது எப்படி என்பதை இந்தக் கட்டுரையில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

|

சந்தோசமான விஷயமோ அல்லது அதிர்ச்சிகரமான துக்கமான விஷயமோ எதிர்பாராத நேரத்தில் கேட்ட விஷயத்தினால் அதிர்ச்சிய்டைந்து ஒரு நிமிடமோ அல்லது நாள் முழுவதும் பிற விஷயங்களில் கவனம் செலுத்த முடியாமல் நீங்கள் ஸ்தம்பித்து நிற்கிறீர்களா? அப்படியென்றால் இந்த கட்டுரை உங்களுக்காகத்தான்.

சந்தோசம், மகிழ்ச்சி,துக்கம்,கோபம் ஆகியவை எல்லாம் மிகச் சாதரணமாக நாம் தினமும் கடந்து வர வேண்டிய விஷயங்கள் தான். ஆனால் இதன் தாக்கம் நம் உடலில் அதிகப்படியாக மாற்றங்களை உருவாக்குவது, அதிக ஆக்ரோசமாக்குவது அல்லது எதுவுமே செய்யவிடாமல் தடுப்பது ஆகியவற்றை தான் போஸ்ட் ட்ராமெட்டிக் ஸ்ட்ரஸ் என்கிறோம்.

இந்த நோய்க்கான அறிகுறிகள் ஒவ்வொருத்தருக்கும் வெவ்வேறு விதமாக இருந்திடும். சிலருக்கு உடனேயே வெளிப்படும், சிலருக்கு சில நாட்கள் கழித்து, இன்னும் சிலருக்கோ மாதக்கணக்கில் கூட ஆகலாம். இவர்களை விட இவர்களைச் சுற்றியிருப்பவர்களுக்கு தான் பிரச்சனை அதிகம். இது ஒரு வகை மன அழுத்தம் தான், ஆனால் அவை தீவிரமாக நம்மிடத்திலிருந்து வெளிப்படுவதினால் தான் இது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்குமோ என்று பயம் ஏற்படுகிறது. இதனை தீர்க்க அல்லது கட்டுப்படுத்த சில அவசியமான குறிப்புகள் .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிகுறிகள் :

அறிகுறிகள் :

முகத்தில் எப்போதும் பயத்துடனும் அல்லது படபபடப்புடனும் இருப்பார்கள். எதையாவது நினைத்து பயந்து கொண்டோ அல்லது ஆக்ரோசமான வார்த்தைகளை சொல்லிக் கொண்டும் கத்திக் கொண்டும் இருப்பார்கள். சிலர் அமைதியாக ஒடுங்கி இருப்பார்கள், சிலர் கொன்றுவிடும் ஆக்ரோசத்தோடு கையில் கிடைப்பதையெல்லாம் தூக்கி உடைக்கும் பழக்கம் கொண்டவராக இருப்பார்.

டென்ஷன் ஆனா இப்டி தான் கத்துவாரு என்று பலரும் சாதரணமாக எடுத்துக் கொள்வதினால் தான் இந்தப் பிரச்சனை மீகத்தீவிரமான அளவினை எட்டுகிறது.

சைக்கோதெரபி :

சைக்கோதெரபி :

மிக அடிப்படையான தெரபி இது. இதிலேயே பல முறைகள் இருக்கிறன. முதலில் பேசுவார்கள். பாதிக்கப்பட்ட நபர் அவரின் வயதினைப் பொறுத்து இந்த தெரபி இருக்கும். இதற்கு தனியாகவோ அல்லது குழுவாகவோ பங்கேற்கலாம். குழுவாக நீங்கள் பங்கேற்கும் போது அதில் பங்கேற்கக்கூடிய அனைவருக்கும் ஒரே குறைபாடா என்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

எக்ஸ்போசர் :

எக்ஸ்போசர் :

இதுவும் ஒரு வகை தெரபி தான். இந்த தெரபியின் போது உண்மையில் அவர்களது பயத்திற்கோ அல்லது கோபத்திற்கோ என்ன காரணம். அதிலிருந்து தப்பிக்க என்ன செய்யலாம்? மீண்டு வர வேண்டியதன் அவசியம் என்ன ஆகியவற்றை புரியவைக்க முயற்சிப்பார்கள்.

அதன் பிறகு அவர்கள் தொடர்ந்து என்ன விஷயத்தை சிந்திக்கிறார்கள். அந்த சிந்தனை அவரது தோற்றத்தை, செயலை எல்லாம் எப்படி மாற்றியிருக்கிறது என்பதை உணர வைப்பார்கள்.

மருந்து :

மருந்து :

அதன் அடுத்தக்கட்டமாக மாத்திரைகளை கொடுப்பார்கள். இது சாதரணமாக பலரும் செய்யக்கூடியது. இந்த மாத்திரைகளை உட்கொள்வதினால் ட்ராமாட்டிக் அறிகுறிகள் கட்டுப்படுத்தப்படும். அதிக பயம், படபடப்பு ஆகியாவை இருக்காது. இதற்கு பெரும்பாலானோர் பயன்படுத்துவது பராஜோசின் என்ற மருந்து தான் இது தூக்கமின்மையை தவிர்க்கச் செய்திடும். நீண்ட நேரம் ஆழ்ந்த உறக்கத்திற்கு உதவுவதால் நிதானமாக சிந்தித்து செயலாற்ற முடியும்.

இதைத் தவிர ஆண்ட்டிப்ரசெண்ட் மாத்திரை கொடுக்கப்படுகிறது. இந்த மாத்திரை மன அழுத்தத்தை உண்டாக்குகிற ஹார்மோனை கட்டுப்படுத்தும். இதைத் தவிர செர்டலின்,பரோக்செட்டின் போன்ற மருந்துகள் இதற்கு பரிந்துறைக்கப்படுகிறது. இவை எல்லாம் குறுகிய காலத்திற்கு தான் பரிந்துறைக்கப்படுகிறது.

உடற்பயிற்சி :

உடற்பயிற்சி :

இந்த பிரச்சனையினால் தீவிரமாக பாதிக்கப்பட்டு உங்களது நடவடிக்கைகளில் மாற்றம் இருப்பவர்களுக்கு இது கண்டிப்பான முறையில் பரிந்துறைக்கப்படுகிறது, ட்ராமாட்டிக் ஸ்ட்ரஸ் டிஸ் ஆர்டர் பிரச்சனை இருப்பவர்கள் தங்களையும் அறியாமல் கைகால்களை அசைப்பது, நாக்கை கடிப்பது, தங்களை தாங்களே காயப்படுத்திக் கொள்வது போன்ற செயல்களை கட்டுப்படுத்த இது உதவிடும்.

தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதினால் நரம்பு மண்டலங்கள் எல்லாம் சுறுசுறுப்படைந்து உடல் இயக்கங்களை கட்டுப்படுத்தும். தன்னிச்சையாக நம்மையும் அறியாமல் கைகால்களை அசைப்பது பலமாக தாக்கிக் கொள்வது ஆகியவை கட்டுப்படுத்தப்படும்.

என்னென்ன செய்யலாம் ? :

என்னென்ன செய்யலாம் ? :

தினமும் காலையில் அரை மணி நேரம் வாக்கிங் செல்வதோடு மட்டுமின்றி நீச்சல்,ஓட்டப்பயிற்சி, நடனம் போன்றவற்றை மேற்கொள்ளலாம் கை, கால்களுக்கு தொடர்ந்து அதிகப்படியான வேலை கொடுக்கும்படியான கடினமான வேலைகளை செய்ய வேண்டும். எதாவது தற்காப்பு கலை, உடல் எடை, குத்துச்சண்டை, மலையேறுதல் போன்றவற்றையும் மேற்கொள்ளலாம் .

இது போன்ற பயிற்சிகளை செய்யும் போது உங்களுடைய மூச்சினை கவனியுங்கள். வழக்கத்திற்கு மாறாக மூச்சு இருக்கிறது கைகால்களில் வலி, அல்லது ஏதேனும் மாற்றம் உண்டாகிறதா என்பதையும் பார்க்க வேண்டும்.

நரம்பு மண்டலம் :

நரம்பு மண்டலம் :

நரம்பு மண்டலத்தில் ஏற்படுகிற பாதிப்புகள் தான் அத்தனைக்கும் காரணம். அதனால் நரம்புக்கு வலுவூட்டுகிற விஷயங்களை,உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பார்வைத் திறன், வாசனை, சத்தம் ஆகியவற்றை எல்லாம் உங்களால் உணர முடிகிறதா? அதற்கேற்ப ரியாக்ட் செய்ய முடிகிறதா என்பதையும் நீங்கள் பார்க்க வேண்டும். எந்த சத்தம், எந்த வாசனை உங்களுக்கு பிடித்திருக்கிறது மற்றும் பிடிக்கவில்லை அப்படி பிடிக்காததை உணரும் நீங்கள் என்ன செய்கிறீர்கள், உங்களையும் அறியாமல் என்ன செய்கிறீர்கள் என்பதை கண்காணியுங்கள்.

எமோஷனல் :

எமோஷனல் :

நீங்கள் எமோஷனலாக எதனுடன் நெருக்கமாக இருக்கிறீர்கள். அந்த விஷயத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபட விட்டு வெளியே வர என்ன செய்ய வேண்டும் என்று பார்த்திடுங்கள். அதோடு உங்களுடைய மன அழுத்தத்தை போக்க எளிய வழிமுறைகள் என்ன அவற்றை எப்படி தீர்க்கலாம் என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

பேசுங்கள் :

பேசுங்கள் :

எப்போதும் உங்களைப் பற்றி மட்டும் நினைத்துக் கொண்டு சுயபச்சாதாபம் பட்டுக் கொண்டு சோர்ந்து உட்கார்ந்திருக்காதீர்கள். பிறருடன் பேசுங்கள், சிரித்து மகிழுங்கள், மிக முக்கியமாக மன்னிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

ஒரு மனிதர் உங்கள் முன்னால் நிற்கிறார் என்றால் அவரைப் பார்த்ததுமே அவரைப் பற்றிய பிம்பத்தை நீங்களாக உருவாக்கி முன் அபிப்ராயங்களை உருவாக்கிக் கொள்ளாதீர்கள்.

உதவி :

உதவி :

நீங்களாக பிறரிடத்தில் போய் உதவிகளைச் செய்திடுங்கள். அது தனியாகவோ அல்லது குழுவாகவோ இருக்கலாம். அடிக்கடி பிறருடன் பேசும், பழகும்,கலந்துரையாடும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு விஷயத்தை தாமதமானாலும் பரவாயில்லை என்று சொல்லி பொறுமையாக கையாளுங்கள்.

அடிப்படை :

அடிப்படை :

இவை எல்லாவற்றையும் விட அடிப்படையான இன்னொரு விஷயம் என்ன தெரியுமா? ஆரோக்கியமான உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை தான். எப்போதும் சட்டென்று அதீத கோபத்திற்கு ஆளாவது, அதைத் தொடர்ந்து உங்களது செயல்பாடுகளில் மாற்றங்கள் உண்டாவது ஆகியவையும் பெரும் பிரச்சனைகளை உண்டாக்கிடும்.

இதனால் எப்போதும் உங்கள் மனதை ரிலாக்ஸாக வைத்துக் கொள்ளுங்கள்.

உணவு :

உணவு :

பேலன்ஸ்டு டயட் இங்கே மிகவும் அவசியமாகும். உடலுக்கு தேவையான எனர்ஜியை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும் எமோஷனல் ஹெல்த்திற்கு அவசியமான சத்து ஒமேகா 3. வால்நட்,ஆளிவிதை,மீன் போன்றவற்றில் இந்த சத்து அதிகமாக இருக்கின்றன. அவற்றை நிறைய எடுத்துக் கொள்ளுங்கள்.

இதைத் தவிர சர்க்கரை அதிகமுள்ள, எண்ணெயில் பொறித்த உணவுகளை எடுக்க வேண்டாம்.மதுப் பழக்கத்தை முற்றிலுமாக நிறுத்திட வேண்டும். இந்த பிரச்சனையினால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு குறைந்தது எட்டு மணி நேரம் தூக்கமாவது அவசியமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Symptoms And Treatments of Post Traumatic Stress Disorder

Symptoms And Treatments of Post Traumatic Stress Disorder
Story first published: Friday, May 4, 2018, 16:38 [IST]
Desktop Bottom Promotion