Latest Updates
-
ஜூன் 30-ல் நிகழும் நட்சத்திர பெயர்ச்சியால் ஆபத்துகளையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
10 பாதமும், 1 குடைமிளகாயும் இருந்தா இந்த ஆந்திரா சட்னியை அரைங்க - டேஸ்ட் அட்டகாசமாக இருக்கும் -
ஜூன் 29 ஸ்ட்ராபெர்ரி நிலவு அன்று நிகழும் புதன் வக்ர பெயர்ச்சி இந்த 4 ராசிகளின் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகுதாம் -
Strawberry Moon 2026: ஸ்ட்ராபெரி நிலவு எப்போது வருகிறது? இந்தியாவில் எந்த நேரத்தில் இது பிரகாசமாக தெரியும்? -
கொங்கு ஸ்பெஷல் முட்டை சிந்தாமணி ரெசிபி - 4 முட்டை இருந்தா இத செஞ்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
39 மனைவிகள், 94 குழந்தைகள் என ஆலமரமாய் வாழ்ந்த இந்தியர் யார் தெரியுமா? உலகிலேயே பெரிய குடும்பம் இவரோடதுதான் -
பெங்காலி ஸ்டைல் பெப்பர் சிக்கன் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
சுக்கிரன்-சூரியனின் ராசி மாற்றத்தால் ஜூலை மாதத்தில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
காரசாரமான.. சிக்கன் மிளகு கிரேவி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஜூன் 2026: இன்றைய நாள் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
உங்களால ப்ரீயா டர்ர்ர்ர்..... விட முடியலையா? இதோ சில டிப்ஸ்...
செரிமான செயல்பாட்டின் ஒரு சாதாரண பகுதி தான் வாய்வு உருவாக்கம். சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளைக்கு குறைந்தது 14 முறை வாய்வை வெளியேற்றுகிறான். குடலில் வாய்வுத் தேக்கம் அதிகரிக்கும் போது, அதனால் வயிற்று வலி மற்றும் மிகுந்த அசௌகரியத்தை உணரக்கூடும். அதோடு சில சமயங்களில் வயிற்றுப் பிடிப்புகள், வயிற்று உப்புசம், உடல் பருமனுடன் இருப்பது போன்ற உணர்வு மற்றும் நெஞ்செரிச்சல் போன்றவற்றாலும் அவஸ்தைப்படக்கூடும்.

சிலருக்கு வாய்வு தங்கு தடையின்றி வெளியேறும். ஆனால் இன்னும் சிலருக்கோ வாய்வு சரியாக வெளியேறாமல் அவஸ்தைப்பட வைக்கும். நீங்களும் இப்படி வாய்வை எளிதில் வெளியேற்ற முடியாமல் அவஸ்தைப்படுபவராயின், இக்கட்டுரை உங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். ஏனெனில் கீழே வாய்வை எளிதில் வெளியேற்ற உதவும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றைப் பின்பற்றினால், வாய்வு பிரிதலை எளிமையாக்கலாம்.

பூண்டு
நற்பதமான பூண்டு அஜீரணப் பிரச்சனைகளான வாய்வை எளிதில் வெளியேற்ற உதவியாக இருக்கும். இதில் உள்ள வெப்பமூட்டும் குணங்கள் இரைப்பைத் தீயைத் தூண்டுகிறது. உங்களுக்கு வாய்வு சரியாக வெளியேறாமல் இருந்தால், காலையில் வெறும் வயிற்றில் 1-2 பல் பூண்டு சாப்பிட்டு 1 டம்ளர் நீரைக் குடியுங்கள் அல்லது பூண்டு சூப் தயாரித்துக் குடியுங்கள்.

ஆப்பிள் சீடர் வினிகர்
ஆப்பிள் சீடர் வினிகரில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. அதில் அஜீரண கோளாறுகள் மற்றும் இதர செரிமான மண்டலம் சம்பந்தமான பிரச்சனைகளை சரிசெய்வது போன்றவை குறிப்பிடத்தக்கவை. அதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்க, வாய்வு பிரிதல் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மஞ்சள்
மஞ்சளில் உள்ள பாலிபீனால்கள், பாலிசாக்கரைடுகள் மற்றுட் ஸ்டெரால்கள், அஜீரண பிரச்சனை மற்றும் அழற்சியில் இருந்து நிவாரணம் அளிக்கும். மேலும் மஞ்சள் கல்லீரல் செயல்பாட்டை சிறப்பாக தூண்டிவிடுவதோடு, பித்த நீர் சுரப்பை சீராக்கி, செரிமானத்தை மேம்படுத்தும். வாய்வு பிரச்சனையில் இருந்து விடுபட, நீரில் மஞ்சள் தூள் கலந்து குடியுங்கள்.

இஞ்சி
இஞ்சி வாய்வு பிரச்சனையில் இருந்து விடுபட பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு இஞ்சியை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம் அல்லது இஞ்சியைக் கொண்டு டீ தயாரித்துக் குடிக்கலாம். இல்லாவிட்டால், உண்ணும் உணவுகளில் சிறிது இஞ்சி பொடியை தூவி சாப்பிடலாம். வாய்வு பிரச்சனை அண்டாமல் இருப்பதற்கு உணவு உண்ணும் முன் ஒரு டீஸ்பூன் துருவிய இஞ்சியை உட்கொள்ளுங்கள்.

வெந்தயம்
வெந்தயத்தில் பிசின் அதிகம் உள்ளது. இந்த பிசின் சளி சவ்வுகளைச் சுற்றி ஒரு பாதுகாப்பு படலத்தை உருவாக்கும் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும். வெந்தயம் வாய்வுப் பிரச்சனை மற்றும் நெஞ்செரிச்சலில் இருந்து மட்டும் நிவாரணம் அளிப்பதில்லை, செரிமான செயல்பாட்டை வலிமையாக்கும். ஒருவேளை உங்களுக்கு அழற்சி இருந்தால், கர்ப்பமாக இருந்தால் வெந்தயத்தை சாப்பிட வேண்டாம்.

சீமைச்சாமந்தி டீ
சீமைச்சாமந்தி டீயில் ரிலாக்ஸ் அடையச் செய்யும் மற்றும் மயக்கமூட்டும் பண்புகள் உள்ளன. இதை செரிமான பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்க உதவும் மிகச்சிறந்த பானம் என்றும் கூறலாம். இந்த மூலிகை வாய்வுப் பிரச்சனை, வயிற்றுப் போக்கு, நாள்பட்ட நெஞ்செரிச்சல், குமட்டல், வாந்தி, பசியின்மை மற்றும் மலம் வெளியேற்றுவதில் உள்ள பிரச்சனை போன்றவற்றில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும். அதற்கு இந்த பானத்தை தினமும் 2-3 கப் குடிக்க வேண்டும்.

எலுமிச்சை
எலுமிச்சை பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது. வாய்வுத் தொல்லை இருப்பவர்கள் எலுமிச்சை ஜூஸ் அல்லது எலுமிச்சை டீ குடிப்பது நல்ல நிவாரணத்தை அளிக்கும். அதிலும் எலுமிச்சை ஜூஸ் உடன் ஒரு சிட்டிகை ப்ளாக் சால்ட், சீரகப் பொடி, ஓமம் போன்றவற்றை சேர்த்து கலந்து குடித்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

சோம்பு
பழங்காலம் முதல் வாய்வு பிரச்சனையில் இருந்து விடுபட சோம்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாய்வு சரியாக பிரியாமல் இருந்து ஒரு டீஸ்பூன் சோம்பை வாயில் போட்டு மெல்லுவதன் மூலம், வாய்வு எளிதில் பிரிந்து, உடல் ரிலாக்ஸாக இருக்கும்.

கிராம்பு
முந்தைய காலத்தில் செரிமான பிரச்சனைகளான வயிற்று உப்புசம், வாய்வுத் தொல்லை மற்றும் அஜீரண கோளாறு போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க கிராம்பு பயன்படுத்தப்பட்டு வந்தது. கிராம்பில் அல்சரை எதிர்க்கும் பண்புகளும் உள்ளது. எனவே உங்களுக்கு வாய்வு பிரிவதில் பிரச்சனை இருந்தால், ஒரு கிராம்பை உணவு உட்கொண்ட பின் வாயில் போட்டு மென்று விழுங்குங்கள். இதனால் அது செரிமான நொதிகளை அதிகரித்து, குடலில் வாய்வின் அளவைக் குறைக்கும்.

குறிப்பு
வாய்வு வெளியேறுவது போன்று இருந்தால், முதலில் அதை அடக்கும் பழக்கத்தைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் வாய்வை அடக்கும் போது, அதனால் வயிற்று உப்புசம், அசௌகரியம் மற்றும் வயிற்று வலி போன்றவற்றால் அவஸ்தைப்படக்கூடும். அதேப் போல் தினமும் மலம் கழிக்கும் பழக்கத்தையும் கொள்ளுங்கள். இதனால் மலம் வெளியேறும் போது, வாய்வும் எளிதில் வெளியேறிவிடும்.



Click it and Unblock the Notifications