அளவுக்கு அதிகமாக எள்ளு விதைகளை சாப்பிட்டால் சந்திக்கும் விளைவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

எள்ளு விதைகளில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. இந்த விதைகள் ஏராளமான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது. அதில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், இயற்கை எண்ணெய்கள் மற்றும் ஆர்கானிக் பொருட்களான கால்சியம், மக்னீசியம், இரும்புச்சத்து, காப்பர், மாங்கனீசு, பாஸ்பரஸ், தையமின், நார்ச்சத்து, ஜிங்க், வைட்டமின் பி6, புரோட்டீன், ஃபோலேட் மற்றும் ட்ரிப்டோஃபேன் நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் அனைத்தும் தான் எள்ளு விதைகளை ஆரோக்கியமான விதைகளாக்குகிறது.

Side Effects Of Sesame Seeds

இரத்த அழுத்தத்தை சீராக்கவும், புற்றுநோயைத் தடுக்கவும், சர்க்கரை நோயைப் பராமரிக்கவும், எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்கவும், செரிமானத்திற்கும், வாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் எள்ளு விதைகள் பயனுள்ளதாக இருக்கிறது. எள்ளு விதைகள் நீள்வட்ட வடிவில், அற்புதமான ப்ளேவரைக் கொண்டிருக்கும். இந்த விதைகள் பெரும்பாலான உணவுகளில் சுவைக்காக சேர்க்கப்படுகிறது. இவ்வளவு சத்துக்களை உள்ளடக்கிய எள்ளு விதைகளில் ஒருசில பக்கவிளைவுகளும் உள்ளன.

இக்கட்டுரையில் எள்ளு விதைகளால் சந்திக்கும் பக்கவிளைவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அளவுக்கு அதிகமாக எள்ளு விதைகளை சாப்பிட்டால் சந்திக்கும் விளைவுகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அலர்ஜி

அலர்ஜி

சிலருக்கு எள்ளு விதைகள் அலர்ஜியை உண்டாக்கும். அதிலும் அன்றாடம் எள்ளு சாப்பிட்டு வந்தால் அல்லது எள்ளு விதைகளில் இருந்து பெறப்படும் எண்ணெயைப் பயன்படுத்தினால், அது அலர்ஜியை உண்டாக்கும். எள்ளு விதைகளால் ஏற்படும் அலர்ஜிகளில் பல்வேறு வகைகள் உள்ளன. அதில் செரிமான பிரச்சனைகள், மூக்கு ஒழுகல், கண் அலர்ஜி, ஆஸ்துமா போன்றவை குறிப்பிடத்தக்கவை. ஆகவே நீங்கள் எள்ளு விதைகளை அல்லது எள்ளு எண்ணெய்களை உட்கொண்ட பின் இம்மாதிரியான அறிகுறிகள் தென்பட்டால், எள்ளு விதைகளில் இருந்து சற்று விலகி இருங்கள்.

கடும் ஒவ்வாமை

கடும் ஒவ்வாமை

எள்ளு விதைகளை சாப்பிட்டால், சிலருக்கு கடும் ஒவ்வாமை கூட ஏற்படலாம். இந்நிலையால் உடலின் சில பகுதிகளில் மட்டுமின்றி, ஒட்டு மொத்த உடலிலும் கடுமையான அழற்சி ஏற்பட்டிருக்கும். இந்த வகை அழற்சியின் அறிகுறிகளாவன மூச்சுத்திணறல், தாழ் இரத்த அழுத்தம், நெஞ்சு இறுக்கம் போன்றவை. இந்த வகை அழற்சி ஒருவருக்கு இருப்பின் தொண்டை மற்றும் மூச்சுக்குழாயில் அடைப்பு ஏற்படும்.

குடல்வால் தொற்று

குடல்வால் தொற்று

சில சமயங்களில் ஒருவர் எள்ளு விதைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அதன் விளைவாக குடல்வால் தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். ஏனெனில் எள்ளு விதைகளை சாப்பிடும் போது, அது குடல்வாலில் சிறிது தேங்கி, அதன் விளைவாக மிதமானது முதல் தீவிரமானது வரையிலான தொற்றுக்களை ஏற்படுத்தலாம்.

குடல் புற்றுநோய்

குடல் புற்றுநோய்

எள்ளு விதைகளை ஒருவர் தொடர்ந்து அதிகமாக உட்கொண்டு வந்தால், அது குடலைப் பாதிக்கும். ஆய்வு ஒன்றின் படி, ஒருவர் தினமும் 15 நேனோகிராமிற்கும் அதிகமான அளவில் எள்ளு விதைகளை சாப்பிட்டால், அது குடலைபெரிதும் பாதிப்பிற்குள்ளாக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. எள்ளு விதைகளின் அபாயகரமான பக்க விளைவு என்றால், அது இது தான். இதனால் மரணம் கூட ஏற்படலாம்.

குடலுறுப்பு அழற்சி

குடலுறுப்பு அழற்சி

எள்ளு விதைகள் குடலுறுப்பில் அழற்சியை ஏற்படுத்தி குடலின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். அதுவும் இந்த நிலையில் குடலின் உட்சுவற்றில் சிறு சிறு பைகள் போன்று உருவாகும். இதனால் கடுமையான வயிற்று வலி, வயிற்று பிடிப்புக்கள், மலச்சிக்கல் போன்றவற்றை சந்திக்க நேரிடும். ஆகவே, எள்ளு விதைகள் எப்போதுமே அளவாக சாப்பிட வேண்டும்.

வயிற்றுப் போக்கு

வயிற்றுப் போக்கு

எள்ளு விதைகளில் மலமிளக்கும் பண்புகள் உள்ளன. ஆகவே எள்ளு விதைகளை அளவாக சாப்பிட்டால், அது மலச்சிக்கல் பிரச்சனையைத் தடுக்கும். அதுவே அதிகமாக சாப்பிட்டால், அது வயிற்றுப் போக்கை உண்டாக்கும். எனவே நீங்கள் எள்ளு விதைகளை சாப்பிட்டு வயிற்றுப் போக்கு ஏற்பட்டால், நீங்கள் அதிகமாக எள்ளு விதைகளை சாப்பிட்டுள்ளீர்கள் என்று அர்த்தம். ஆகவே கவனமாக இருங்கள்.

தலைமுடி உதிர்வு

தலைமுடி உதிர்வு

நிறைய பேர் தலைமுடி நன்கு ஆரோக்கியமாக வளர்ச்சி பெற வேண்டுமென்று நல்லெண்ணெயைப் பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த நல்லெண்ணெயை அதிகமாக பயன்படுத்தினால், அது அதனால் எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடும். இது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கி, தலையில் எண்ணெய் பசையை அதிகரித்து மயிர்கால்களை வறட்சியாக்கும். இதனால் தலைமுடி அதிகம் உதிர ஆரம்பிக்கும். ஆகவே அளவாக நல்லெண்ணெயைப் பயன்படுத்தி நன்மைப் பெறுங்கள்.

கருச்சிதைவு

கருச்சிதைவு

எள்ளு விதைகளை கர்ப்பத்தின் முதல் மூன்று மாத காலத்தில் உட்கொள்வது நல்லதல்ல என்று கூறுவார்கள். ஏன் தெரியுமா? எள்ளு விதைகள் கருச்சிதைவை உண்டாக்கும் என்பதால் தான். ஆகவே கர்ப்ப காலத்தில் எள்ளு விதைகளை சாப்பிட சற்றும் நினைக்க வேண்டாம். முக்கியமாக முதல் மூன்றுமாத காலத்தில் அறவே கூடாது.

மார்பக புற்றுநோய்

மார்பக புற்றுநோய்

பல்வேறு ஆய்வுகளில் எள்ளு விதைகளை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், அது மார்பக புற்றுநோயை உண்டாக்குவதாக தெரிய வந்துள்ளது. எள்ளு விதைகளில் உள்ள குறிப்பிட்ட உட்பொருட்கள், மார்பக செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தும். அதோடு எள்ளு விதைகளில் உள்ள கொழுப்புக்கள், மார்பக புற்றுநோயின் வளர்ச்சியுடன் தொடர்பு கொண்டுள்ளது.

சரும அரிப்புக்கள்

சரும அரிப்புக்கள்

எள்ளு விதைகள் சருமத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒருவர் எள்ளு விதைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலோ அல்லது நல்லெண்ணெயை அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டாலோ, அவர்களுக்கு சரும அரிப்புக்கள் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது.

தூக்க உணர்வு

தூக்க உணர்வு

எள்ளு விதைகளை அதிகம் சாப்பிட்டால், அது தூக்க உணர்வை உண்டாக்கும். ஏனெனில் இதில் புரோட்டீன் குறைவாகவும், கார்போஹைட்ரேட் அதிகமாகவும் உள்ளது. இதனால் மூளையில் ட்ரிப்டோஃபேன் அளவு அதிகரித்து, அதன் விளைவாக மிகுதியான தூக்க உணர்வால் அவஸ்தைப்படக்கூடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Side Effects Of Sesame Seeds

Here we listed some of the side effects of sesame seeds. Read on to know more...
Story first published: Tuesday, April 17, 2018, 11:47 [IST]