For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாயில் ஏற்படும் துர்நாற்றம் இத்தனை அபாயமானதா? விவரம் தெரிய இத படிங்க!

வாயில் துர்நாற்றம் ஏற்படுவது என்பது மனிதர்கள் முதல் விலங்குகள், பறவைகள் வரை அனைத்து வித உயிரினங்களிலும் நடைபெறுகிறது. இதனால் பலர் மற்றவர்களுக்கு நடுவே பேச தயங்குவதுண்டு. ஒரு நாளைக்கு இருமுறை பல் துலக்

|

வாயில் துர்நாற்றம் ஏற்படுவது என்பது மனிதர்கள் முதல் விலங்குகள், பறவைகள் வரை அனைத்து வித உயிரினங்களிலும் நடைபெறுகிறது. இதனால் பலர் மற்றவர்களுக்கு நடுவே பேச தயங்குவதுண்டு; "எங்கு நாம் பேசினால், வாய்துர்நாற்றத்தால் பிறர் ஏதேனும் நினைத்துவிடுவாரோ" என்று நினைத்து பின்னடைவதுண்டு. அதேபோல், பலரோ தங்கள் வாழ்க்கைத்துணையிடம் கூட தள்ளி இருக்க முயல்வர்; வாய்துர்நாற்றம் காரணமாக!

Mouth odor - Bad breath causes

இந்த வாய்துர்நாற்றம் எதனால் ஏற்படுகிறது? தினமும் பல் துலக்கியும் எதனால் உங்களை விட்டு நீங்காமல், உங்களில் நிலைத்து இருக்கிறது என்று இந்த பதிப்பில் படித்தறியுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Halitosis - கெட்ட மூச்சு!

Halitosis - கெட்ட மூச்சு!

இந்த வாய்துர்நாற்றம் காலையில் எழுந்து பல் துலக்கும் முன் மட்டுமே தோன்றுவதாக பலர் எண்ணினாலும், நாம் ஒவ்வொருமுறை பேசும் பொழுதும் வாயின் துர்நாற்றம் வெளிப்பட்டு, நம் பெயரை கெடுக்கிறது என்பது நம்மில் எத்தனை பேர் அறிவோம். மேலும் வாய்துர்நாற்றம் என்பது உங்களுக்கு தெரியாமலேயே உங்களில் தோன்றி, இருந்து வரலாம்; இது எத்தனை முறை பல் துலக்கினாலும் உங்களில் நிலைத்திருக்கும்.

இவ்வாறு வாயிலிருந்து துர்நாற்றம் வெளிப்படுவதை ஹாலிடோசிஸ் அதாவது பேட் பிரீத் - கெட்ட மூச்சு என்றும் அறியப்படுகிறது; இதற்கு பெடோர் ஓரிஸ் என்ற வேறு பெயரும் உண்டு. இந்த நாற்றம் வாய், பற்கள் அல்லது உள்ளுறுப்புகளில் ஏற்பட்ட பாதிப்பு போன்றவற்றால் ஏற்படுகிறது; வாய் துர்நாற்றம் என்பது தற்காலிக பிரச்சனையே! 50 சதவிகித மக்கள் தங்கள் வாழ்நாளில் இந்த பிரச்சனையை சந்தித்துள்ளனர் என்று அமெரிக்க ஆய்வுகள் தகவல் தெரிவிக்கின்றன.

அறிகுறிகள்!

அறிகுறிகள்!

உங்களுக்கு வாய்துர்நாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதை சுவை உணர்வு மூலம் அறியலாம்; அதாவது நீங்கள் எந்தவொரு உணவை சுவைத்தாலும், அதன் சுவை வேறுபட்டு தெரியும். சரியான சுவையை உங்களால் அறிய இயலாது; இது வாயில் தங்கியுள்ள முன்பு உண்ட உணவுத்துகள்களால் ஏற்படுகிறது; இந்த உணவுத் துகள்கள் சாதாரண கண்களுக்கு புலப்படாது மறைந்து இருக்கும். இது போல், வாயில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் உணவுத் துகள்களால், வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது.

இந்த வாய் துர்நாற்றத்திற்கு, வாயில் தங்கிய அழுக்குகள் தவிர வேறு என்ன காரணங்கள் என்று அடுத்த பத்திகளில் படித்து அறியுங்கள்.

பற்களின் ஆரோக்கியம்

பற்களின் ஆரோக்கியம்

பற்களை சரிவர தினந்தோறும் துலக்கவில்லை எனில் உணவுத்துகள்கள் உங்கள் வாயில் தங்கத் தொடங்கும்; இந்த துகள்கள் பாக்டீரியாவை உருவாக்கும். உருவான பாக்டீரியாக்கள் உணவுத்துகள்களை உடைக்கத் தொடங்கி, வாயில் துர்நாற்றத்தை உருவாக்கும். ஆகையால், தினசரி பல் துலக்குவது, உண்டபின் கொப்புளிப்பது போன்றவை மிக அவசியம்; இந்த செயல்கள் பற்களில் சிக்கியிருக்கும் உணவுத்துகளையும் பாக்டீரியாவையும் போக்க உதவும்; வாயை சுத்தமாக வைக்கவும் உதவும்.

உணவு முறை

உணவு முறை

ஏதேனும் பலத்த மணம் தரும் உணவுகளையோ அல்லது பானங்களையோ பருகினால், அது வாய் துர்நாற்றம் ஏற்பட காரணம் ஆகும். அது எப்படி என்று கேட்கிறீர்களா? நீங்கள் உண்ணும் உணவு, பருகும் பானங்கள் வயிற்றிக்கு செல்லும் பொழுது, அங்கு உணவு மற்றும் பானத்திலுள்ள எண்ணெய்கள் ககுடலால் உறிஞ்சப்பட்டு, இரத்தத்தில் கலந்து நுரையீரலை அடைகின்றன. இந்த எண்ணெய்கள் சுமார் 72 மணிநேரம் வரை வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன. வெங்காயம், வெள்ளைப்பூண்டு, மணம் அதிகம் கொண்ட உணவுகள், காபி போன்ற உணவுகள் வாய் துர்நாற்றத்திற்கு முக்கிய காரணமாகின்றன.

புகைபிடித்தல் மற்றும் மது பழக்க வழக்கங்கள் கூட வாய்துர்நாற்றத்தை ஏற்படுத்தும் முன்னனி காரணிகளாக திகழ்கின்றன.

வறண்ட வாய்

வறண்ட வாய்

வாய் வறண்டு விடுவதால், உடற்செயலிய மாற்றத்திற்கு தேவையான உமிழ்நீர் கிடைக்காத நிலை ஏற்படும். உமிழ்நீர் அதிகம் சுரப்பது வாயினை துர்நாற்றம் ஏற்படாது காக்கும். வாய் வறண்டிருப்பதை எப்படி அறிவது என்ற கேள்வி எழுகிறதா? வாய் வறண்டு போவதால், உமிழ்நீர் சரியாக சுரக்காதவர்கள், வாய் பிளந்த நிலையில் உறக்கம் கொள்பவர்கள், உயர் இரத்த அழுத்த மற்றும் சிறுநீரக பிரச்சனைக்கான மாத்திரைகள் உட்கொள்பவர்கள் போன்றவர்களுக்கு வாய் வறண்டு போய்க் காணப்படும்; இதன் மூலம் உங்கள் வாயின் தன்மையை அறிந்து கொள்ளலாம்.

பெரியொடோண்டல் நோய்

பெரியொடோண்டல் நோய்

வாயில் படிந்திருக்கும் கறையை போக்காததால் ஏற்படும் குறைபாடே பெரியொடோண்டல் நோய் ஆகும். இந்த கறைகளை சரியான காலகட்டத்தில் நீக்காவிட்டால், பின்னர் அவற்றை சாகும் வரை நீக்க இயலாமல் போய்விடும். இந்த கறைகள் பற்களில் குழி, உடைதல் மற்றும் ஈறுகளில் பிரச்சனை போன்றவற்றை உருவாக்கலாம். இந்த குழிகளில் உணவு, பாக்டீரியா, போன்றவை தங்கி வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.

சைனஸ், தொண்டை பிரச்சனைகள் போன்றவை உள்ளோரிடத்தில் வாய் துர்நாற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது.

என்னென்ன நோய்கள்?

என்னென்ன நோய்கள்?

இந்த வாய் துர்நாற்றம் மற்றவரிடையே உங்கள் மதிப்பை மட்டும் குறைப்பதாய் எண்ண வேண்டாம்; இது பலவித நோய்களையும் உங்களுக்கு தெரியாமலே உங்கள் உடலில் ஏற்படுத்துகிறது. சிறுநீரக நோய்கள், நீரிழிவு, குடல் சார்ந்த நோய்கள் போன்ற பல நோய்க்குறைபாடுகளை வாய் துர்நாற்றம் உங்களது உடலில் ஏற்படுத்துகிறது.

எப்படி கண்டறிவது?

எப்படி கண்டறிவது?

வாய் துர்நாற்றம் இருப்பதை அறிய தகுந்த மருத்துவ ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். மேலும் பல் துலக்குமுன் மருத்துவரை சந்தித்து சோதனை செய்து கொண்டால், மிகத்துல்லியமான தீர்வுகள் கிடைக்கும். மேலும் நீங்கள் உண்ணும் உணவுகள் மூலமாக உடலில் ஏதேனும் ஒவ்வாமை மற்றும் உடலில் தோன்றும் நோய்கள் - அதற்கு நீங்கள் உட்கொள்ளும் மருந்துகள் இவற்றை வைத்தும் உங்களுக்கு வாய்துர்நாற்ற பிரச்சனை உள்ளதை அறியலாம்.

என்ன செய்வது?

என்ன செய்வது?

வாயை ஆழமாக சுத்தம் செய்வது இந்த பிரச்சனைக்கு தீர்வளிக்கலாம்; மேலும் சைனஸ், சிறுநீரக பிரச்சனைகள் போன்றவை இருந்தால் அதற்கான சரியான மருந்து மற்றும் மாத்திரைகளை உட்கொண்டு அவற்றிலிருந்து விரைவில் விடுபட முயலுதல் வேண்டும். வறண்ட வாய் கொண்ட நபர்கள், செயற்கை முறையில் உமிழ்நீர் ஏற்படுத்தும் மருந்துகளை அல்லது தயாரிப்பை பயன்படுத்தி வாய் துர்நாற்றத்திலிருந்து விடுபடலாம்; மேலும் அதிகளவு நீர் பருகுவதும் வாய் துர்நாற்றத்தை போக்க உதவும்.

எப்படி தடுப்பது?

எப்படி தடுப்பது?

ஒரு நாளைக்கு இருமுறை பல் துலக்குதல், பற்களை சுத்தமாக துலக்கி கறைகளை நீக்குதல், நாக்கு மற்றும் வாயின் உட்புறங்களை உணவுத்துகள்கள் எதுவுமின்றி சுத்தப்படுத்த வேண்டும். உணவுத் தன்மை இல்லாத பானங்கள் அதாவது வெறும் குடிநீரை அதிகமாக பருக வேண்டும். வாய் எப்பொழுதும் ஈரப்பதத்துடன் இருக்கிறதா என்று சோதித்துக் கொள்ள வேண்டும்; புகைபிடித்தல் மற்றும் மது போன்ற பழக்கங்களை நிறுத்திக் கொள்ள முயலுதல் நல்லது.

பல் துலக்கி பிரஸினை மூன்று மாதத்திற்கு ஒருமுறை என மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை பல் மருத்துவரை சந்தித்து பற்களின் ஆரோக்கியம் குறித்து சோதித்தறிய வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mouth odor - Bad breath causes, effects, and treatment in tamil.

Mouth odor - Bad breath causes, effects, and treatment in tamil.
Story first published: Tuesday, July 24, 2018, 17:06 [IST]
Desktop Bottom Promotion