இடுப்புச் சதை அதிகரிக்க இது தான் காரணமாம்!

Posted By:
Subscribe to Boldsky

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் உணவைக் குறைக்காமல் ஆரோக்கியமான உணவினை எடுத்துக் கொள்ள ஆரம்பிக்க வேண்டும். கலோரி அதிகமான உணவுகளை தவிர்ப்பது நல்லது, கலோரி குறைவான உணவுகளை எடுப்பதால் எப்போது நிறைவான உணர்வே இருக்காது. எப்போதும் பசியுணர்வுடனே இருப்பது போலத் தோன்றும். அதனைப் பொய் பசி என்று கூட சொல்லலாம்.

Low Calorie Foods For Healthy Life Style

அதற்காக தொடர்ந்து அடுத்தடுத்து எதாவது சாப்பிட்டு வந்தால் உடல் எடை அபரிதமாக கூடிடும். கலோரி குறைவான உணவுகளின் பட்டியலை இங்கே கொடுத்திருக்கிறோம், அதனை நீங்கள் தாரளமாக சாப்பிடலாம். இதே நேரத்தில் உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு அவசியம் தேவைப்படுகிற சத்துக்களைப் பற்றியும், உணவு சாப்பிடும் முறை குறித்தும் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நார்ச்சத்து :

நார்ச்சத்து :

இந்த சத்து நிரம்பிய உணவுகள் செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளும் அதனால் உடனே பசிக்காது,நார்ச்சத்து நிரம்பிய உணவுகள் என்றால் சத்துக்கள் குறைவாகவே இருக்கும். ஒரு நாளைக்கு பெண்களுக்கு 25 கிராம் அளவும் ஆண்களுக்கு 38 கிராம் அளவிலும் நார்ச்சத்து தேவைப்படும்.

நார்ச்சத்து உணவு வகைகளை திடீரென்று குறைப்பது அல்லது திடீரென்று அதிகரிப்பது ஆகியவற்றை செய்யக்கூடாது. படிப்படியாகத்தான் குறைக்க வேண்டும், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் மலச்சிக்கல் உட்பட பல்வேறு உபாதைகள் ஏற்படும்.

ப்ரோட்டீன் :

ப்ரோட்டீன் :

ப்ரோட்டீன் நிரம்பிய உணவுகளும் செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரத்தினை எடுத்துக் கொள்ளும். பசியுணர்வு தூண்டுவதை கட்டுப்படுத்தும்.பொதுவாக காலை உணவாக நீங்கள் ப்ரோட்டீன் நிறைந்த உணவினை எடுத்துக் கொள்ளலாம். அப்படி எடுத்துக் கொண்டால் தொடர்ந்து கலோரி அதிகமான உணவுகள் எடுத்துக் கொள்வது தவிர்க்கப்படும்.

கொழுப்பு :

கொழுப்பு :

கொழுப்புச் சத்துள்ள எல்லா விதமான உணவுகளை தவிர்ப்பது மட்டுமே உடல் எடை குறைப்பதற்கான முக்கிய அம்சம் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். நம் உடல் சீராக இயங்க கொழுப்புச் சத்தும் அவசியமானதாகும்.

உணவுகள் நல்ல கொழுப்பினை தேர்ந்தெடுத்து நீங்கள் உண்ணலாம். கெட்ட கொழுப்பினை சேர்க்கும் உணவுகளை தவிர்ப்பது அவசியமானதாகும்.

உடற்பயிற்சி :

உடற்பயிற்சி :

உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பெரும்பாலானோர் செய்கிற தவறு இது தான். விதவிதமான டயட் முறைகளை பின்பற்றுவார்கள் ஆனால் உடல் உழைப்பு என்பதே இருக்காது. அப்படியானால் உடல் சேருகிற கொழுப்பினை எப்படித் தான் கரைப்பது?

அதோடு உடற்பயிற்சி செய்வது என்பது கொழுப்பினை கரைக்க மட்டுமல்ல பசியுணர்வினைத் தூண்டவும் உடல் இயக்கத்தினை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவும் பயன்படுகிறது. எப்போது சுறுசுறுப்பாக இருந்தால் உடல் எடை தானாக குறைந்திடும்.

காலிஃப்ளவர் :

காலிஃப்ளவர் :

காலிஃப்ளவர் மற்றும் முட்டைகோஸையும் சாப்பிடலாம். இதில் அதிகப்படியான நியூட்ரிஷியன்கள் மற்றும் ஃபைபர்கள் அடங்கியிருக்கின்றன. இதில் குறைவான கலோரியே இருக்கிறது. இவை சாப்பிட்டால் உங்கள் நிறைவான உணர்வைக் கொடுக்கும்.

முட்டை :

முட்டை :

முட்டையில் ப்ரோட்டீன் மற்றும் கொழுப்பு அடங்கியிருக்கிறது. காலை நேரத்தில் சாப்பிடுவதற்கு மிகச் சிறந்த உணவாகும். எல்லாரும் முட்டையில் வெள்ளைக் கரு மட்டும் தான் சாப்பிட வேண்டும், மஞ்சள் கரு சாப்பிடக்கூடாது என்பார்கள். ஆனால் அது குறித்து அதிகமாக அச்சம் கொள்ளத் தேவையில்லை.

முட்டையில் இருப்பது சாச்சுரேட்டட் கொழுப்பு தான். காலை உணவாக இதனைக் எடுத்துக் கொண்டால் நாள் முழுவதும் பிற கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதில் இருந்து தப்பிக்கலாம்.

ஓட்ஸ் :

ஓட்ஸ் :

ஓட்ஸிலிருந்து ப்ரோட்டீன் மற்றும் ஃபைபர் நிரம்பியிருக்கிறது. சந்தையிலேயே பல சுவையூட்டி கிடைக்கக்கூடிய ஓட்ஸ் வாங்க வேண்டாம். அதில் கெமிக்கல்கள் தான் அதிகம் கலந்திருக்கும். இதில் நீங்களே நட்ஸ், பழங்கள்,தேங்காய் இப்படி எதாவது சேர்த்துக் கொள்ளலாம்.

அதே போல ஓட்ஸ் வாங்கும் போது அதில் சர்க்கரை அளவு என்ன என்பதை பார்த்து வாங்குங்கள்.சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் வாங்காமல் தவிர்ப்பது நல்லது, தொடர்ந்து சர்க்கரை அதிகமாக சாப்பிட்டு வர அது ஓட்ஸின் பலன்களை கெடுத்திடும். அதிக பசியெடுக்கும், இடுப்பகுதியில் சதை அதிகரிக்கும்.

நட்ஸ் :

நட்ஸ் :

நட்ஸில் ஆரோக்கியமான ப்ரோட்டீன், ஃபைபர், ஆரோக்கியமான கொழுப்பு ஆகியவை அடங்கியிருக்கிறது. உணவு இடைவேளையில் ஒரு கை நிறைய நட்ஸ் சாப்பிடலாம். பாதாம் சாப்பிடலாம். இதில் அதிகப்படியான கால்சியம் இருக்கிறது. பிஸ்தாவில் ஆரோக்கியமான கொழுப்பு இருக்கிறது. ஒவ்வொரு வேளை உணவுக்கு நடுவே நீங்கள் இதனைச் சாப்பிடுவதால் நிறைவான உணர்வினைக் கொடுக்கும் அதே நேரத்தில் உணவை குறைவாக எடுத்துக் கொள்வீர்கள்.

பழங்கள் :

பழங்கள் :

பழங்களில் இனிப்புச் சுவை இருந்தாலும் அவை உங்களின் ரத்தச் சர்க்கரை அளவினை அதிகரிக்காது, பழங்களில் இருக்கக்கூடிய பெக்டின் என்ற பொருள் பசியை மட்டுப்படுத்தும். ஆப்பிள், வாழைப்பழம், ப்ளாக் பெர்ரீ,ரஸ்ப்பெர்ரீ ஆகிய பழங்களில் அதிகப்படியான பெக்டின் இருக்கிறது.

டார்க் சாக்லெட் :

டார்க் சாக்லெட் :

சாப்பிட்டு முடித்தவுடன் டெசர்ட் சாப்பிட நினைப்பவர்கள் டார்க் சாக்லெட் சாப்பிடலாம். அதில் மில்க் சாக்லெட்டினை விட கோகோ நிறைந்த டார்க் சாக்லெட் சாப்பிடுவது நல்லது. இது நிறைவான உணர்வைத் தரும் என்பது மட்டுமல்லாமல் இன்னொரு மிகப்பெரிய காரணம் என்ன தெரியுமா?

டார்க் சாக்லெட்டில் மக்னீசியம் இருக்கிறது அவை ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். அதிக ஸ்ட்ரஸ் ஏற்படும் தருணங்களில் டார்க் சாக்லெட் சாப்பிட்டால் பதட்டத்தை குறைக்கும்.

சாப்பிடும் முறை :

சாப்பிடும் முறை :

நீங்கள் சாப்பிடும் நேரத்திலிருந்து பத்து முதல் முப்பது நிமிடங்கள் கழித்தே தான் மூளைக்கு தகவல் செல்லும். நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டேயிருந்தால் வயிறு முட்டும் அளவிற்கு சாப்பிட்டு விடுவீர்கள். அது உங்கள் பெரும் இடைஞ்சலைத் தான் கொடுக்கும். மெதுவாக சாப்பிடுங்கள், வேறு வேலை செய்து கொண்டே சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

 மசாலா :

மசாலா :

மசாலா பொருட்கள் எப்போதும் உங்களுக்கு நிறைவான உணர்வினைக் கொடுக்கும். இவற்றில் பட்டைக்கு இந்த சத்து அதிகம். அதோடு இவை செரிமானத்திற்கும் உதவிடுகிறது. இதைத் தவிர உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவிடுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Low Calorie Foods For Healthy Life Style

Low Calorie Foods For Healthy Life Style
Story first published: Thursday, March 29, 2018, 12:04 [IST]