For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புகைபிடிப்பதை நிறுத்த உதவும் வீட்டு மருத்துவங்கள்

கைபிடிக்க மனஅழுத்தம், பணிச்சுமை, கவலை என பல காரணங்களை கூறுகிறார்கள். தங்களுக்கு பிடித்த நடிகர் புகைபிடிக்கிறார் என்பதற்காக புகைபிடிக்க தொடங்கிய பல இளைஞர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இங்கே புகைப

|

நம் நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள ஒரு பிரச்சினை என்றால் அது புகைபிடித்தல் தான். உலகம் முழுவதும் ஆண்டுதோறும் இலட்சக்கணக்கான மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணமாக புகைபிடித்தல் இருக்கிறது. இதில் துரதர்ஷ்டவசமாக சிறுவர்களும், இளைஞர்களும் ஏன் பெண்களும் கூட புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர்.

Effective home remedies to quit smoking

புகைபிடிக்க மனஅழுத்தம், பணிச்சுமை, கவலை என பல காரணங்களை கூறுகிறார்கள். தங்களுக்கு பிடித்த நடிகர் புகைபிடிக்கிறார் என்பதற்காக புகைபிடிக்க தொடங்கிய பல இளைஞர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இந்த மோசமான பழக்கத்தை நிறுத்துவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. ஆனால் தொடர்ச்சியான சிகிச்சை மூலம் அது சாத்தியமே. இந்த முறைகள் முழுமையான பயனை வழங்க வேண்டுமெனில் அதற்கு உங்களின் முழு ஈடுபாடும் ஒத்துழைப்பும் அவசியம். இந்த பதிவில் புகைப்பழக்கத்தை நிறுத்த உதவும் வீட்டு வைத்தியங்களை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புகைபிடித்தல்

புகைபிடித்தல்

சிகரெட் பழக்கம் என்பது உங்கள் உயிரை எடுக்கும் பழக்கம் மட்டுமல்ல. உங்கள் சுற்றத்தாரையும் பாதிக்க கூடிய கொடிய பழக்கம். வருடம்தோறும் புகைப்பழக்கம் இல்லாத பலரும் புற்றுநோய்க்கு ஆளாகி கொண்டே இருக்கின்றனர். அதற்கு காரணம் புகைபிடிவார்கள்தான். அவர்களின் மரணத்திற்கோ அல்லது பாதிப்பிற்கோ புகைபிடிப்பவர்கள் மறைமுக காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. அரசாங்கம் உங்களை புகைபிடிக்காதீர்கள் என்று கூறுமே தவிர அது தயாரிக்கும் தொழிற்சாலைகளை எதுவும் செய்யாது. ஏனெனில் அவர்களுக்கு முக்கியம் வருமானம் மட்டுமே. சிகரெட் என்னும் அரக்கனை ஒழிக்க வேண்டுமெனில் அது உங்கள் கையில்தான் உள்ளது. இது உங்களுக்கு மட்டுமல்ல நீங்கள் சார்ந்துள்ள சமூகத்திற்கும் நீங்கள் செய்யும் நன்மை ஆகும்.

நீர்

நீர்

உலகின் ஆதாரமே நீர்தான். தண்ணீர் நேரடியாக செயல்பட்டு புகைபிடிப்பவர்களின் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. தினமும் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதன் மூலம் புகைப்பிடிக்கும் எண்ணம் குறையும் வாய்ப்புள்ளது. புகைப் பிடிக்கும் எண்ணம் வரும்போது 1 டம்ளர் தண்ணீர் குடிக்க பழகுங்கள்.

தும்பை

தும்பை

இது நமது தெருக்களிலும், காடுகளிலும் எளிதாக கிடைக்கக்கூடிய ஒன்று. இதன் வேர்கள் சக்திவாய்ந்த அமைதிப்படுத்தும் மருந்துகளை கொண்டது. இது மனஅழுத்தம், கவலை, சோர்வு போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை கொண்டது. இதனை நிக்கோட்டினுக்கு பதிலாக பயன்படுத்தலாம். இதை உபயோகிக்க சிறந்த வழி இதில் தேநீர் தயாரித்து குடிப்பது.

முள்ளங்கி

முள்ளங்கி

இது பெருமபாலனோர்க்கு பிடிக்காத காயாக இருக்கலாம், ஆனால் இதன் மருத்துவ பயன்கள் தனித்துவமானவை. முள்ளங்கி அதிக புகைப்பழக்கத்தால் உடலில் ஏற்படக்கூடிய அமிலத்தன்மையை குறைக்கும். இதனை அரைத்து சாறாக்கி அதனுடன் தேன் கலந்து குடிப்பது சிறந்த பலனை தரும்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

ஓட்ஸ உடலுக்கு கேடுவிளைவிக்கும் நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவுவதுடன் புகைபிடிக்கும் எண்ணத்தை கட்டுப்படுத்தவும் உதவும். ஓட்ஸில் தண்ணீரை ஊற்றி சூடுபண்ணி பின் இரவு முழுவதும் அப்படியே வைக்கவும். காலையில் எழுந்ததும் மீண்டும் சூடுபண்ணி சாப்பிடவும். இதனை தினமும் செய்தல் விரைவில் உங்கள் புகைபிடிக்கும் எண்ணம் மறையும்.

அதிமதுரம்

அதிமதுரம்

இது மற்றொரு நம்பிக்கைக்குரிய புகைப்பழக்கத்தை கட்டுப்படுத்த உதவும் முறையாகும். இது புகைபிடிக்கும் எண்ணத்தை கட்டுப்படுத்துவதோடு செரிமானத்தையும் அதிகரிக்கும். இதனை வாயில் போட்டு மெல்லலாம் அல்லது தேநீர் தயாரித்து தினமும் இரண்டு கப் குடிக்கலாம்.

தேன்

தேன்

தேன் அனைத்து விதமான மருத்துவங்களிலும் பயன்படக்கூடிய ஒரு அற்புத இயற்கை பொருளாகும். புகைபிடிப்பதை நிறுத்துவதிலும் இது முக்கியப்பங்கு வகிக்கிறது. இதோல் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், என்சைம்கள் மற்றும் புரோட்டின்கள் உள்ளன. இவை புகை பிடிக்கும் எண்ணத்தை குறைக்கவல்லது.

திராட்சை

திராட்சை

திராட்சை பழச்சாறில் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளது, மேலும் புகைபிடித்தலால் ஏற்படும் மோசமான விளைவுகளை குறைக்கும் சத்துக்களும் திராட்சை பழச்சாறில் உள்ளது. புகை பிடித்தலால் இரத்தத்தில் கலந்த அமிலத்தன்மையை குறைப்பதோடு சிகரெட்டால் நுரையீரலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யும். எனவே புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதனை விட இயலாவிட்டாலும் இதனை குடித்து பாதிப்புகளையாவது குறைத்து கொள்ளுங்கள். இதன் விதைகளும் புகை பழக்கத்தை குறைப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

வசம்பு

வசம்பு

நிகோடின் ஏக்கத்தை குறைக்க சிறந்த மருந்து வசம்பாகும். உங்கள் உணவில் சிறிதளவு வசம்பு பொடியை சேர்த்து கொள்ளுங்கள். இது புகைபிடிக்கும் எண்ணத்தை மிகவிரைவில் குறைக்கும்.

அது மட்டுமின்றி இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துதல், தசைகளை வலுப்படுத்துதல் போன்ற நன்மைகளையும் வழங்கும்.

மிளகாய்

மிளகாய்

புகை பிடிப்பதை நிறுத்த சிறந்த வீட்டு வைத்தியம் யாதெனில் அது மிளகாய்தான். இது உங்கள் சுவாச மண்டலத்தை சிகரெட்டுக்கு எதிராக மாற்றக்கூடியது. இதனால் உங்களுக்கு சிகரெட் என்றாலே வெறுப்பு ஏற்படும். இதனை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளுங்கள் இல்லையெனில் இதன் விதைகளை தண்ணீரில் போட்டு தினமும் குடியுங்கள். விரைவில் நல்ல பலனை காண்பீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Effective home remedies to quit smoking

We all know the health risks of smoking, but that doesn’t make it any easier to kick the habit. Whether you’re an occasional teen smoker or a lifetime pack-a-day smoker, quitting can be really tough. But long term treatments can definitely make you quit smoking.
Desktop Bottom Promotion